என் மலர்
உலகம்
துணை தூதரகம் மீது தாக்குதல் - காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு இந்தியா எதிர்ப்பு
- இந்திய துணை தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
- சான்பிரான்சிஸ்கோவில் இந்திய துணை தூதரகம் முன் இந்திய வம்சாவளியினர் அமைதி பேரணி நடத்தினர்.
வாஷிங்டன்:
இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப் மாநிலத்தை காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்க வேண்டுமென பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தப் பிரிவினைவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகம் மீது கடந்த 2-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி, தீ வைத்தனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தைக் கண்டித்தும், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தும் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகம் முன் நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினர் அமைதி பேரணி நடத்தினர்.
தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஒரு பயங்கரவாத செயல். வன்முறைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.