என் மலர்
உலகம்
X
இந்திய மலையேற்ற வீரர் நேபாளத்தில் மாயம்
Byமாலை மலர்18 April 2023 3:44 AM IST
- நேபாள நாட்டில் உள்ள சிகரங்களில் ஒன்று மவுன்ட் அன்னபூர்னா.
- இந்தியாவைச் சேர்ந்த மலையேற்ற வீரர் நேபாளில் மாயமானார்.
காத்மண்டு:
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் கிஷன்கர்க் பகுதியைச் சேர்ந்தவர் அனுராக் மாலு (34). மலையேற்ற வீரர்.
நேபாளம் நாட்டில் உள்ள உலகின் உயரமான சிகரங்களில் 10-வது சிகரமான மவுன்ட் அன்னபூர்னா பகுதிக்குச் சென்றார். நேற்று வரை முகாம் திரும்பவில்லை. இதையடுத்து அவர் மாயமானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேபாள சிகரத்தில் மாயமான அனுராக் வேலுவைத் தேடும் பணியில் அந்நாட்டு ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
X