என் மலர்
உலகம்
காசா அகதி முகாம் - மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதல்.. 5 பத்திரிகையாளர்களை கொன்ற இஸ்ரேல்
- அல் அவ்தா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.
- காசாவிற்குள் வெளிநாட்டு பத்ரிக்கையாளர்களை இஸ்ரேல் அனுமதிக்காதது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 250 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர்.
தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்று குவித்துள்ளது. இதில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது மத்திய காசாவில் அகதிகள் முகாம் மற்றும் மருத்துவமனை மீது இஸ்ரேல் காசாவில் உள்ள அல் அவ்தா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.
மருத்துவமனை அருகே நுசிராத் அகதிகள் முகாமில் குட்ஸ் நியூஸ் நெட்வொர்க்கில் [Quds News] பணியாற்றிய பத்திரிகையாளர்கள் படம்பிடித்து கொண்டிருந்தபோது, அவர்களின் வாகனம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடாத்தியுள்ளது.
இதனால் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 130க்கும் மேற்பட்ட பாலஸ்தீன செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. காசாவிற்குள் வெளிநாட்டு பத்ரிக்கையாளர்களை இஸ்ரேல் அனுமதிக்காதது குறிப்பிடத்தக்கது.