என் மலர்
உலகம்
X
ஈரான் சிறையில் இருந்து விடுதலையாகி நாடு திரும்பிய இத்தாலி பத்திரிகையாளர்
Byமாலை மலர்9 Jan 2025 5:18 AM IST
- இத்தாலி பத்திரிகையாளரான சிசிலியா சாலா ஈரான் நாட்டிற்குச் சென்றார்.
- அங்கு அவரை கடந்த மாதம் 19-ம் தேதி ஈரான் அரசு கைது செய்தது.
ரோம்:
இத்தாலியைச் சேர்ந்தவர் சிசிலியா சாலா ஈரான் நாட்டிற்குச் சென்றார். பத்திரிகையாளர் விசா மூலம் ஈரான் சென்ற அவரை 3 நாளுக்குப் பிறகு இஸ்லாமிய சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் ஈரான் அரசு கடந்த மாதம் 19-ம் தேதி அவரை கைது செய்தது.
கிட்டத்தட்ட 3 வாரங்கள் அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் இத்தாலி அரசு ஈடுபட்டது.
இந்நிலையில், இத்தாலி பத்திரிகையாளரான சிசிலியா சாலா ஈரான் சிறையில் இருந்து விடுதலையானார்.
நேற்று பிற்பகலில் விமானம் மூலம் ரோமின் சியாம்பினோ விமான நிலையத்தில் தரையிறங்கினார். அங்கு அவரை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்பட குடும்ப உறுப்பினர்கள் பலர் வரவேற்றனர்.
இத்தாலி அரசின் ராஜதந்திர முயற்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
Next Story
×
X