என் மலர்
உலகம்
விமானங்கள் மோதல்: நின்றிருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உயிரிழப்பு
- டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானத்தின் பின்பகுதி தீ பிடித்தது.
- இதில் கடலோர காவல்படை விமானத்தில் 5 ஊழியர்கள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
டோக்கியோ:
ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தின் ரன்வேயில் தரையிறங்கிய பயணிகள் விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீ பிடித்தது. இதனால் டோக்கியோ விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதியதால் தரையிறங்கிய விமானம் தீப்பிடித்ததாக தகவல் வெளியானது.
இந்த விமானத்தில் 360-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடற்படை விமானத்தில் இருந்த ஊழியர்கள் 5 பேர் உடல் கருகி பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வராத நிலையில், விமானங்கள் மோதலில் 5 பேர் பலியானது அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.