search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    டிரம்ப் மீது துப்பாக்கி சூடு: அதிபர் பைடன் கூறியது என்ன?
    X

    டிரம்ப் மீது துப்பாக்கி சூடு: அதிபர் பைடன் கூறியது என்ன?

    • அந்நாட்டு அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்தது.
    • அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவரை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நூலிழையில் உயிர்பிழைத்தார். முன்னாள் அதிபர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி தாக்குல் அந்நாட்டு அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளது.

    இந்த நிலையில், முன்னாள் அதிபர் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.


    அப்போது பேசிய அவர், "இந்த நாட்டின் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியது. இதனை குளிர்விக்கும் நேரம் வந்துவிட்டது. அரசியல் களம் உண்மையான போர் களமாகவோ, கொலை களமாகவோ மாறிவிட கூடாது. இது சோதனை காலக்கட்டம். இந்த நேரத்தில் வாக்குப் பெட்டி தான் போர் பெட்டி," என்று தெரிவித்தார்.

    தேர்தல் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியர் அதே இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்தியது தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அமெரிக்காவில் முன்னாள் அதிபர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டு பாதுகாப்பு துறை மீது ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    Next Story
    ×