என் மலர்
உலகம்
பிரான்ஸில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- பிரான்ஸ் நிலப்பரப்பில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கும்
- வீடுகள் சேதம், மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது
பிரான்ஸில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. பிரான்ஸின் நிலப்பரப்பு பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது மிகவும் அரிதானது. இது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என பிரான்ஸ் மந்திரி கிறிஸ்டோபர் பெச்சு தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தால் பிரான்ஸின் தெற்குப்பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும், மின்சாரம் தடைபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுற்றுலா நகரான லாய்ரே ரிவர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் ''நிலநடுக்கம் ஏற்பட்டபோது படித்துக் கொண்டிருந்த நான், உடனடியாக எழுந்து நின்றேன். அப்பார்ட்மென்ட் முழுவதும் அதிர்ந்தது. சில நொடிகள் இது நீடித்தது. 3-வது மாடியில் இருந்த நான் இதனால் உறைந்து போனேன். நான் இருக்கும் 3-வது மாடி மண்ணில் புதைந்து கொண்டிருக்கிறது என்று நினைத்தேன்'' எனத் தெரிவித்தார்.
கடந்த 2000-ம் ஆண்டு இதுபோன்று சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.