search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் நேதன்யாகு.. ஜோ பைடன் சொல்வது என்ன?
    X

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் நேதன்யாகு.. ஜோ பைடன் சொல்வது என்ன?

    • தனது பதவிக் காலத்திலேயே முதல் முறையாக வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பு அறையில் தோன்றினார் பைடன்
    • ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அணு உலை மற்றும் எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமா?

    வெள்ளை மாளிகை

    அதிபர் தேர்தல், பாலஸ்தீன போர், மத்திய கிழக்கு போர் பதற்றம் உள்ளிட்டவைகளுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். தனது பதவிக் காலத்திலேயே முதல் முறையாக நேற்றய தினம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பு அறையில் [Briefing room] தோன்றி ஜோ பைடன் பேட்டியளித்துள்ளார்.

    அமைதி - அரசியல்

    அப்போது இஸ்ரேல் விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்துவதற்காக தான் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு [பாலஸ்தீன] அமைதி உடன்படிக்கயை ஏற்காமல் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அது விஷயமில்லை. இஸ்ரேலுக்கு நான் [அமெரிக்க அரசு] உதவியதுபோல் வேறு எந்த நாட்டின் அரசும் உதவவில்லை, அதை நேதன்யாகு நினைத்துப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா முன்மொழிந்த காசா அமைதி உடன்படிக்கையை ஏற்பதில் நேதன்யாகு பிடிகொடுக்காமல் இருப்பதை சந்தேகிக்கும் விதமாக பைடன் இவ்வாறு பேசியுள்ளார்

    எண்ணெய் வயல்

    மேலும் ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அணு உலை மற்றும் எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பைடன், அது பற்றி விவாதித்து வருகிறோம். அவர்கள் [இஸ்ரேல்] இடத்தில் நான் இருந்தால் எண்ணெய் வயல்களை தாக்குவதை விட அதற்கு மாற்றான வேறு வழிகளையே யோசிப்பேன் என்று தெரிவித்தார்.

    ஜோக்

    இறுதியாக அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய முடிவை மாற்றி மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி வந்து விழுந்தது. இதற்குத் தலை அசைத்தபடியே சிரித்துவிட்டு, நான் திரும்பி வந்துவிட்டேன் என்று ஜோக் அடித்துவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டு அறையை விட்டு நடையைக் கட்டினார் பைடன். நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×