என் மலர்
உலகம்
X
ரஷியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யவில்லை: வடகொரியா சொல்கிறது
Byமாலை மலர்22 Sept 2022 10:46 PM IST
- ஆயுத ஏற்றுமதி பற்றிய வதந்தியை அமெரிக்கா மற்றும் சில நாடுகள் பரப்பி வருவதாக வடகொரிய அதிகாரி தகவல்
- ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் உரிமை வடகொரியாவுக்கு உள்ளது என்றும் கருத்து
உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் ரஷியாவுக்கு வடகொரியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதனை வடகொரியா திட்டவட்டமாக மறுத்து உள்ளது.
இதுதொடர்பாக வடகொரியா பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, வட கொரியா, ரஷியாவுக்கு ஆயுதங்களையோ, வெடி மருந்துகளையோ ஏற்றுமதி செய்ததில்லை. ஏற்றுமதி செய்வதற்கான திட்டம் எதுவும் இல்லை.
ஆயுத ஏற்றுமதி பற்றிய வதந்தியை அமெரிக்கா மற்றும் சில நாடுகள் பரப்பி வருகின்றன. பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்துமாறு அமெரிக்காவை எச்சரிக்கிறோம். அதே வேளையில் ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் உரிமை வடகொரியாவுக்கு உள்ளது என்றார்.
Next Story
×
X