என் மலர்
உலகம்
எந்திர நாயை கண்டு பதறிய செல்லப்பிராணிகள்- வீடியோ வைரல்
- வாலிபர் ஒருவர் இந்த ரோபோ நாயை அண்மையில் வாங்கி பூங்காவில் இயக்கி பார்த்தார்.
- வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பார்வைகளை அள்ளி வருகிறது.
வருங்காலங்களில் எல்லாத்துறைகளிலும் ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. எந்திரங்களின் பயன்பாடு ஏற்கனவே உள்ள நிலையில் மனித சிந்தனைகள் கொண்ட ரோபோக்களை உருவாக்கும் முயற்சியும் உள்ளது. நாய் உருவம் கொண்ட ரோபோக்கள் வீட்டு வேலைகளுக்கு மட்டுமின்றி ராணுவத்திலும் மேலை நாடுகள் பயன்படுத்துகின்றன.
இந்தநிலையில் ஜப்பானில் வாலிபர் ஒருவர் இந்த ரோபோ நாயை அண்மையில் வாங்கி பூங்காவில் இயக்கி பார்த்தார். அப்போது அங்கே தன் எஜமானர்களுடன் வந்திருந்த செல்லப்பிராணி நாய்கள் ரோபோ நாயை பார்த்து பயந்து குரைத்தன.
பின்னர் அதனிடம் இருந்து விலகி தெறித்து ஓடின. இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பார்வைகளை அள்ளி வருகிறது. 'நாய்கள் ஓடுவதுபோல் எந்திர மனிதர்களுக்கு மனித இனம் பயப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை' என்பதான கருத்துகளை பதிவிட்டு உள்ளனர்.
Dogs respond to a robot dog
— Science girl (@gunsnrosesgirl3) October 1, 2024
pic.twitter.com/7C9PehoCOz