என் மலர்
உலகம்
பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்ட அணிவகுப்பில் இந்திய வீரர்களை பார்த்தது அற்புதம்: பிரதமர் மோடி
- பிரான்ஸ் நாட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சென்றார்
- பிரான்ஸ் அதிபர், பிரதமர், செனட் தலைவர்களை சந்தித்து பேசினார்
இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றிருந்தார். நேற்று நடைபெற்ற பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். பிரான்ஸ் அதிபரின் அழைப்பின்பேரின் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டார்.
தேசிய தின கொண்டாட்ட அணிவகுப்பில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர்கள். பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்ட அணிவகுப்பில் இந்திய வீரர்களை பார்த்தது அற்புதம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் பிரான்ஸ் பயணம் குறித்து அவர் கூறுகையில் ''பிரான்ஸ் சுற்றுப் பயணம் மறக்க முடியாத ஒன்று. கொண்டாட்டத்தில் இந்திய வீரர்களின் அணிவகுப்பை பார்த்தது, இந்த பயணத்தை மேலும் சிறப்பாக்கியது. சிறந்த முறையில் உபசரிப்பு தந்ததற்காக பிரான்ஸ் அதிபர், மற்றும் அந்நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா- பிரான்ஸ் நட்பு இன்னும் மேலாக தொடருட்டும்'' எனத தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடைபெற்ற தேசியதின கொண்டாட்ட விழாவின்போது இந்திய விமானப்படையின் ரபேல் போர் விமானம், பிரான்ஸ் விமானங்களுடன் இணைந்து சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டது.