search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இதைவிட மனிதாபிமானமற்ற செயல் இருக்கமுடியுமா?: ரஷியாவை சாடிய உக்ரைன் அதிபர்
    X

    இதைவிட மனிதாபிமானமற்ற செயல் இருக்கமுடியுமா?: ரஷியாவை சாடிய உக்ரைன் அதிபர்

    • உக்ரைனில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியது.
    • கிறிஸ்துமஸ் அன்று ரஷிய படையினர் டிரோன்கள் வாயிலாக தாக்குதல் நடத்தினர்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு ஆண்டுகளைக் கடந்துள்ளது. இருதரப்பிலும் நுாற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றன.

    இதற்கிடையே, உக்ரைனின் அனல்மின் நிலையங்கள் உள்பட எரிசக்தி கட்டமைப்புகள் நிறைந்த கார்கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைக் குறிவைத்து ரஷிய படையினர் நேற்று தாக்குதல் நடத்தியது. டிரோன்கள் எனும் ஆளில்லா விமானங்களால் தாக்குதல் நடத்தியது.

    அனல்மின் நிலையங்களை குறிவைத்து ரஷிய படை தாக்குதல் நடத்தியதால் ஏராளமான நகரங்கள் இருளில் மூழ்கின.

    இந்நிலையில், கிறிஸ்துமஸ் அன்று தாக்குதல் நடத்திய ரஷியாவுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, அதிபர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், உலகம் முழுதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் தருணத்தில் உக்ரைன்மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் நிறைந்த பகுதிகளைக் குறிவைத்து 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 100க்கும் மேற்பட்ட டிரோன்கள் வாயிலாக தாக்குதலை ரஷியா தொடுத்துள்ளது. இதைவிட மனிதாபிமானமற்ற செயல் இருக்க முடியுமா என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×