search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களை ஆச்சரியப்படுத்தும் - வாஷிங்டனில் ராகுல் காந்தி பேச்சு
    X

    ராகுல் காந்தி

    2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களை ஆச்சரியப்படுத்தும் - வாஷிங்டனில் ராகுல் காந்தி பேச்சு

    • ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
    • முதலில் சான்பிரான்சிஸ்கோ சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    வாஷிங்டன்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முதலில் சான்பிரான்சிஸ்கோ நகரின் சாண்டா கிளாராவில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

    இந்நிலையில், வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தியிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

    அதில், கர்நாடக தேர்தல் வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் தொடருமா என கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் நன்றாக ஒன்றுபட்டுள்ளன. அது மேலும் மேலும் ஒன்றிணைந்து வருகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். அங்கே நிறைய நல்ல வேலைகள் நடக்கின்றன என்று நினைக்கிறேன். எதிர்க்கட்சிகளுடன் போட்டியிடும் இடங்கள் இருப்பதால் இது ஒரு சிக்கலான விவாதம். எனவே கொஞ்சம் கொடுக்கல் வாங்கல் தேவை. ஆனால் அது நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    வரும் 2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களை ஆச்சரியப்படுத்தும் என தெரிவித்தார்.

    Next Story
    ×