என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உலகம்
![பொது சேவை செய்ய தர்மம்தான் எனக்கு வழிகாட்டுகிறது: ரிஷி சுனக் பெருமிதம் பொது சேவை செய்ய தர்மம்தான் எனக்கு வழிகாட்டுகிறது: ரிஷி சுனக் பெருமிதம்](https://media.maalaimalar.com/h-upload/2024/06/30/2983732-rishi.webp)
பொது சேவை செய்ய தர்மம்தான் எனக்கு வழிகாட்டுகிறது: ரிஷி சுனக் பெருமிதம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- லண்டனில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் பிரதமர் ரிஷிக் சுனக் சாமி தரிசனம் செய்தார்.
- இந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகமும், ஆறுதலும் கிடைக்கிறது என்றார்.
லண்டன்:
இங்கிலாந்து பாராளுமன்றத்தின் மொத்தமுள்ள 650 தொகுதிகளுக்கு ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் ஆட்சியை தக்கவைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், லண்டனில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் பிரதமர் ரிஷிக் சுனக் சாமி தரிசனம் செய்தார். அதன்பின், நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:
பகவத் கீதையை வைத்து பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதில் நான் பெருமை அடைகிறேன்.
நமது கடமையை உண்மையாகச் செய்யவேண்டும். இந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகமும், ஆறுதலும் கிடைக்கிறது.
இதை என் அன்பான பெற்றோர் எனக்கு கற்றுக்கொடுத்து வளர்த்தனர். தற்போது நான் என் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்கிறேன்.
பொது சேவை செய்ய தர்மம் தான் எனக்கு வழிகாட்டுகிறது என தெரிவித்தார்.