என் மலர்
உலகம்
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறேன் - ரிஷி சுனக் அறிவிப்பு
- இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக ரிஷி சுனக் இன்று அறிவித்தார்.
- ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம், மினி பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கி உள்ளன. பிரதமர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ரிஷி சுனக்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவளித்துள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கியுள்ள ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கியுள்ளதாக ரிஷி சுனக் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பிரதமர் பதவி மற்றும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவிக்கு ரிஷி சுனக் போட்டியிடுகிறார்.
பெரும்பாலான எம்.பி.க்களின் ஆதரவு ரிஷி சுனக்கிற்கு உள்ளதால் அவர் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக அதிக வாய்ப்புள்ளது.