என் மலர்
உலகம்
ஆண்டனி பிளிங்கனை "இனப்படுகொலை செயலாளர்", "கிரிமினல்" என செய்தியாளர் குற்றம்சாட்டியதால் பரபரப்பு
- காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார் ஆண்டனி பிளிங்கன்.
- இதுதான் அவருடைய கடைசி செய்தியாளர்கள் சந்திப்பாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளராக ஆண்டனி பிளிங்கன் உள்ளார். நாளைமறுதினம் டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்க உள்ளார். இதற்கிடையே இஸ்ரேல்- காசா போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகவும், பல்வேறு விசயங்கள் தொடர்பாகவும் ஆண்டனி பிளிங்கன் செய்தியாளர்களை சந்தித்தார். இதுதான் அவருடைய கடைசி செய்தியாளர் சந்திப்பாக இருக்கலாம். ஆனால் ஆண்டனி பளிங்கனுக்கு தனது கடைசி செய்தியாளர்கள் சந்திப்பு சிறப்பாக அமையவில்லை. அவரை செய்தியாளர் விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது சாம் ஹுசைனி என்ற செய்தியாளர் "சர்வதேச நீதிமன்றத்தில் காசாவில இஸ்ரேல் இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி வருகிறார்கள். இந்த செயல்முறைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என நீங்கள் சொல்கிறீர்களா?.
நான் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னை காயப்படுத்துகிறீர்கள். இதைத்தான் பத்திரிகை சுதந்திரம் என அழைக்கிறீர்களா?. என்னை தவறாக கையாள்வதை நிறுத்துங்கள் என்றார். உடனே பாதுகாவலர்கள் அந்த பத்திரிகையாளர்களை குண்டுகட்டாக வெளியேற்றினர்.
Reporter @samhusseini was just physically dragged from Blinken's briefing. "Why aren't you at The Hague?" he asked. pic.twitter.com/Nvs10aFjgh
— Ryan Grim (@ryangrim) January 16, 2025
அப்போது நீங்கள் கிரிமினல். நீங்கள் ஏன் சர்வதேச நீதிமன்றத்தில் இல்லை?. சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிற்கு தண்டனை வழங்கியுள்ளது என கூச்சலிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மற்றொரு செய்தியாளர் கடந்த மே மாதம் ஒப்பந்தம் ஏற்பட்டபோது ஏன் தொடர்ந்து குண்டுகளை வீசினீர்கள். இனப்படுகொலைக்காக விதிமுறை அடிப்படையிலான உத்தரவுகளை ஏன் தியாகம் செய்தீரு்கள்? என் நண்பர்களை படுகொலை செய்ய ஏன் அனுமதித்தீர்கள். ஏன் அவர்களின் வீடுகள் அழிக்கப்பட்டன? என கேள்வி எழுப்பினார்.