என் மலர்
உலகம்
X
பாரீஸ் ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் - பலர் படுகாயம்
Byமாலை மலர்12 Jan 2023 3:41 AM IST (Updated: 12 Jan 2023 3:42 AM IST)
- பாரீசின் கரே டூ நார்ட் ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடந்தது.
- அதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசின் கரே டூ நார்ட் ரெயில் நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 6:40 மணிக்கு மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தினார்.
லண்டன் மற்றும் வடக்கு ஐரோப்பாவை இணைப்பதில் இந்த ரெயில் நிலையத்திற்கு முக்கிய பங்கு உண்டு. அதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கத்திக்குத்து சம்பவம் காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், தாக்குதல் நடத்திய நபர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, அவரைக் கைது செய்தனர்.
தாக்குதல் நடத்திய அந்த நபரும் படுகாயம் அடைந்ததாக பிரான்ஸ் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
Next Story
×
X