என் மலர்
உலகம்

கார் பார்க்கிங்கில் விழுந்து நொறுங்கிய விமானத்தால் பரபரப்பு

- விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
- வாகன நிறுத்துமிடத்தில் இருந்த கார்கள் தீப்பற்றி எரிந்தன.
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான விபத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இயங்கி வரும் முதியோர் இல்லம் முன்பிருந்த வாகன நிறுத்துமிடத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. கீழே விழுந்த சிறுது நேரத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.
விபத்தில் சிக்கிய விமானத்தில் ஐந்து பேர் இருந்தனர். அவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விமானம் தீப்பிடித்ததை அடுத்து வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பத்துக்கும் மேற்பட்ட கார்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
தீப்பிடித்து எரிந்ததை அடுத்து அந்தப் பகுதி முழுக்க கரும்புகை எழுந்தது. விமானம் விபத்தில் சிக்கியதை அடுத்து விரைந்து வந்த தீயனைப்புத் துறையினர் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
சிறிய ரக விமானம் விபத்தில் சிக்க என்ன காரணம் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படாத நிலையில், அதில் பயணித்தோர் படுகாயங்களுடன மீட்கப்பட்டனர்.