என் மலர்tooltip icon

    தென் ஆப்பிரிக்கா

    • சாம்பியன்ஸ் தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
    • இந்தத் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை பவுமா வழிநடத்துகிறார்.

    கேப் டவுன்:

    8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

    பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் அடுத்த மாதம் 21-ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் சாம்பியன்ஸ் டிராபி தொடரை தென் ஆப்பிரிக்க அணி தொடங்குகிறது. தற்போதைய தென் ஆப்பிரிக்க அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும், எதிர்கால நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளனர்.

    தென் ஆப்பிரிக்க அணியை பவுமா வழிநடத்துகிறார். இதில் இந்தியாவில் நடந்த ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில பங்கேற்ற 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர், இந்த அணியில் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் போன்றோர் இடம் பெற்றிருந்தனர். டோனியர் டி சோர்சி மற்றும் ரியான் ரிக்கெல்டன் போன்ற புதுமுகங்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த வீரர்கள் தென் ஆப்ரிக்காவின் அணியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ஜே திடீரென விலகியுள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது விலகல் தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    • பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 478 ரன்கள் எடுத்தது.
    • கேப்டன் ஷான் மசூத் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.

    கேப் டவுன்:

    தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடந்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 615 ரன்கள் குவித்தது.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் பாலோ ஆன் பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் பொறுப்புடன் ஆடியது.

    முதல் விக்கெட்டுக்கு இறங்கிய கேப்டன் ஷான் மசூத், பாபர் அசாம் ஜோடி 205 ரன்கள் சேர்த்தது. பாபர் அசாம் 81 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஷான் மசூத் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 251 பந்துகளை சந்தித்து 145 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 478 ரன்கள் எடுத்தது.

    அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 58 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா மண்ணில் அதிக ரன்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை செய்துள்ளார். இதில் அசார் மஹ்மூத் 136 ரன்னும், தவுபீக் உமர் 135 ரன்னும் எடுத்து 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளனர்.

    தென் ஆப்பிரிக்கா மண்ணில் அதிக ரன்கள் எடுத்த ஆசிய கேப்டன்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 169 ரன்னுடனும், விராட் கோலி 153 ரன்னுடனும் முதல் இரு இடங்களில் நீடிக்கின்றனர்.

    • தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.;
    • 2வது டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    கேப் டவுன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. மார்கிரம் 17 ரன்னும், வியான் முல்டர் 5 ரன்னும் எடுத்தனர். ஸ்டப்ஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிகல்டன் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு கேப்டன் பவுமா நன்கு ஒத்துழைப்பு கொடுத்து சதமடித்தார்.

    4வது விக்கெட்டுக்கு இணைந்த ரிகல்டன், பவுமா ஜோடி 235 ரன்கள் சேர்த்த நிலையில் பவுமா 106 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது, ரியான் ரிகல்டன் 176 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்றது.
    • முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    செஞ்சுரியன்:

    பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    ஒருகட்டத்தில் 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா அணி தத்தளித்தது. அந்த சமயத்தில் ரபாடா - யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 150 ரன்கள் அடுத்து வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது.

    மேலும் முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    செஞ்சுரியன்:

    பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கம்ரான் குலாம் அரை சதம் கடந்து, 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்கிரம் 89 ரன் எடுத்தார். கார்பின் போஷ் 81 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத், நசீம் ஷா தலா 3 விக்கெட்டும், அமீர் ஜமால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    90 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. 2-வது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் நேற்று நடைபெற்றது. பாபர் அசாம் அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். சவுத் ஷகீல் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென் 6 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் களமிறங்கியது. 19 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தென் ஆப்பிரிக்கா அணி திணறியது.

    மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்னும் இரண்டு நாள் மீதமுள்ள நிலையில் 121 ரன்கள் எடுத்தால் தென் ஆப்பிரிக்கா அணியும், 7 விக்கெட்களை வீழ்த்தினால் பாகிஸ்தானும் வெற்றி பெறும் என்பதால் இந்த டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    செஞ்சுரியன்:

    பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கம்ரான் குலாம் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அமீர் ஜமால் 28 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் 89 ரன் எடுத்தார். கார்பின் போஷ் 81 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத், நசீம் ஷா தலா 3 விக்கெட்டும், அமீர் ஜமால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    90 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. சயீம் அயூப் 27 ரன்னும், ஷான் மசூத் 28 ரன்னும், கம்ரான் குலாம் 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இரண்டாவது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • கம்ரான் குலாம் அரை சதமடித்து 54 ரன்னில் அவுட் ஆனார்.

    செஞ்சுரியன்:

    பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கம்ரான் குலாம் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அமீர் ஜமால் 28 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.

    முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் 47 ரன்னுடனும், பவுமா 4 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 308 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் சயீம் அயூப் சதமடித்து அசத்தினார்.

    ஜோகனஸ்பெர்க்:

    பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

    அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 என வென்றுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார். பாபர் அசாம், முகமது ரிஸ்வான் அரை சதம் கடந்தனர். சல்மான் ஆகா 33 பந்தில் 48 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், யான்சென், போர்டுயின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பவுமா 8 ரன்னிலும், ஜோர்ஜி 26 ரன்னிலும், மார்கிரம் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஹென்ரிச் கிளாசன் ஒரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்து 81 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் கார்பின் போஸ்ச் 40 ரன் எடுத்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 42 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் டக்வொர்த் லிவிஸ் முறையில் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

    பாகிஸ்தானின் சுபியான் மகீம் 4 விக்கெட்டும், நசீம் ஷா, ஷாஹின் அப்ரிடி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது சயீம் அயூபுக்கு அளிக்கப்பட்டது.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
    • மழை காரணமாக போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    ஜோகனஸ்பெர்க்:

    பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

    அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 என வென்றுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 101 ரன்னில் அவுட்டானார்.

    பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் அரை சதம் கடந்து அவுட்டாகினர். சல்மான் ஆகா 33 பந்தில் 48 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், யான்சென், போர்டுயின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 329 ரன்கள் குவித்தது.

    கேப் டவுன்:

    பாகிஸ்தான் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 49.5 ஓவரில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது ரிஸ்வான் 80 ரன்னும், பாபர் அசாம் 73 ரன்னும், கம்ரான் குலாம் 63 ரன்னும் எடுத்தனர்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் மாகாபா 4 விக்கெட்டும், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணியின் ஹென்ரிச் கிளாசன் மட்டும் அதிரடியாக ஆடினார். அவர் 74 பந்தில் 4 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 97 ரன்கள் குவித்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 43.1 ஓவரில் 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றியுள்ளது.

    பாகிஸ்தான் சார்பில் ஷாஹின் அப்ரிடி 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சிடோ புயல் காரணமாக மொசாம்பிக் நாட்டில் மட்டும் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ஆப்பிரிக்கா நாட்டை புரட்டிப்போட்ட சிடோ புயலில் தாக்கத்தால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'சிடோ' என பெயரிடப்பட்டது.

    கடந்த சில நாட்களாக கிழக்கு ஆப்பிரிக்கா அருகே கடலில் நிலை கொண்டுள்ள இந்த புயலின் தாக்கத்தால், மலாவியில் கனமழை கொட்டி வருகிறது.

    இதனால் அங்கு ஊருக்குள் வெள்ளம் புகுந்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    இதேபோல், அண்டை நாடான மொசாம்பிக்கையும் 'சிடோ' புயல் தாக்கியது. குறிப்பாக நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதனால், அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    புயல் காரணமாக மொசாம்பிக் நாட்டில் மட்டும் 34 பேர் உயிரிழந்ததுள்ளனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    • முதல் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்று தொடரை 2-0 என கைப்பற்றியது.
    • மழை காரணமாக 3வது டி20 போட்டி ரத்துசெய்யப்படுகிறது என நடுவர்கள் அறிவித்தனர்.

    ஜோகன்னஸ்பர்க்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி ஜோகன்னஸ்பர்கில் நேற்று நடைபெற இருந்தது. அப்பகுதியில்

    மழை தொடர்ந்து பெய்தது. இதனால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    ஆனாலும் மழை நிற்காமல் பெய்தது. இதையடுத்து, மழை காரணமாக போட்டி ரத்துசெய்யப்படுகிறது என நடுவர்கள் அறிவித்தனர் .

    போட்டி கைவிடப்பட்டாலும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    ×