search icon
என் மலர்tooltip icon

    தென் ஆப்பிரிக்கா

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 315 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 193 ரன்னில் ஆல் அவுட்டானது.

    ஜோகனஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், அடுத்த இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் மார்க்ரம் 93 ரன்னும், டேவிட் மில்லர் 63 ரன்னும், ஜேன்சன் 47 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் சாம்பா 3 விக்கெட்டும், அபாட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 71 ரன்னில் அவுட்டானார். லபுசேன் 44 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 34.1 ஓவரில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 122 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 3-2 என கைப்பற்றியது.

    டி20 தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஒருநாள் தொடரை வென்றது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ஜேன்சன் 5 விக்கெட்டும், மகராஜ் 4 விக்கெட் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் விருது ஜேன்சனுக்கும், தொடர் நாயகன் விருது மார்க்ரமுக்கும் வழங்கப்பட்டது.

    • ஒருநாள் போட்டிகளில் 7-வது முறையாக 400 ரன்களை கடந்தது தென் ஆப்பிரிக்கா.
    • தென் ஆப்பிரிக்கா வீரர் கிளாசன் அதிரடியாக ஆடி 174 ரன்கள் குவித்தார்.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்தது.

    ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர் உள்பட 174 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வான்டெர் டுசன் அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார்.

    5-வது விக்கெட்டுக்கு கிளாசன், மில்லர் ஜோடி 94 பந்துகளில் 222 ரன்கள் குவித்து அசத்தியது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் 7-வது முறையாக 400 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

    மேலும், அதிக முறை 400 ரன்கள் எடுத்த பட்டியலில் இந்தியாவின் சாதனையை தென் ஆப்பிரிக்கா முறியடித்தது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 416 ரன்கள் குவித்தது.
    • தென் ஆப்பிரிக்கா 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது. 3-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா தொடக்கத்தில் நிதானமாக ஆடியது. வான்டெர் டுசன் அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார். அப்போது 34.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.

    ஒருபுறம் ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக ஆடி பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

    அதன்பின், ஹென்ரிச் கிளாசனுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் ரன்களை குவித்தனர். தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்த கிளாசென் சதம் கடந்து அசத்தினார். மறுபுறம் மில்லர் அதிரடி காட்டி அரைசதம் அடித்தார்.

    5-வது விக்கெட்டுக்கு கிளாசன், மில்லர் ஜோடி 94 பந்துகளில் 222 ரன்கள் குவித்து அசத்தியது.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்தது. கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர் உள்பட 174 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

    அந்த அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மட்டும் பொறுப்புடன் ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னில் அவுட்டானார். டிம் டேவிட் 35 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் 2-2 என சமனிலை வகிக்கிறது.

    தென் ஆப்பிரிக்க சார்பில் நிகிடி 4 விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது கிளாசனுக்கு வழங்கப்பட்டது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நாளை நடைபெறுகிறது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 338 ரன்கள் குவித்தது.
    • தென் ஆப்பிரிக்கா 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஜோகனஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே ரன்களை குவித்தது. இதனால் அந்த அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 338 ரன்கள் குவித்தது. மார்கரம் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். மார்க்ரம் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டி காக் 82 ரன்னும், பவுமா 57 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மட்டும் அரை சதமடித்து 78 ரன்னில் அவுட்டானார். டிராவிஸ் ஹெட் 38 ரன்னும், மிட்செல் மார்ஷ் 29 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 34.3 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.

    தென் ஆப்பிரிக்க சார்பில் ஜெரால்டு கொயட்சி 4 விக்கெட்டும், சம்ஷி, மகராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    ஆட்ட நாயகன் விருது மார்க்ரமுக்கு வழங்கப்பட்டது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது.
    • ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தை எட்டியது.

    புளோம்பாண்டீன்:

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், ஐ.சி.சி. ஒருநாள் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியா (121 புள்ளி) மீண்டும் 'நம்பர் ஒன்' இடத்தைப் பிடித்துள்ளது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளில் வெற்றி கண்டதால் ஆஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

    பாகிஸ்தான் 120 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்தியா 114 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்து 106 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் இருக்கிறது.

    இவ்விரு அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 392 ரன்கள் குவித்தது.
    • ஆஸ்திரேலிய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஜோகனஸ்பர்க்

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று இருந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதல் ரன்களை குவித்தது. இதனால் அந்த அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 392 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் மற்றும் லபுசேன் இருவரும் சதமடித்து அசத்தினர். லபுசேன் 124 ரன்னும், வார்னர் 106 ரன்னும் எடுத்தனர். டிராவிஸ் ஹெட், ஹோஸ் இங்லிஸ் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    தென் ஆப்பிரிக்க சார்பில் சம்ஷி 4 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.

    அந்த அணியின் டேவிட் மில்லர் மற்றும் கிளாசன் தலா 49 ரன்னும், கேப்டன் பவுமா 46 ரன்னும், டி காக் 45 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 41.5 ஓவரில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது லபுசேனுக்கு வழங்கப்பட்டது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
    • ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

    ஜோகனஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.

    இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவை ஓயிட்வாஷ் செய்தது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 49 ஒவரில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பவுமா 142 பந்தில் 114 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மார்கோ ஜான்சன் 32 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலிய அணி 113 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 8-வது விக்கெட்டுக்கு மார்னஸ் லபுசேன், ஆஷ்டன் அகார் ஜோடி சேர்ந்தனர்.

    தனி ஆளாகப் போராடிய லபுசேன் அரை சதம் பதிவு செய்தார். தொடர்ந்து ரன்கள் குவித்த இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், ஆஸ்திரேலியா 40.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. லபுசேன் 80 ரன்னும், ஆஷ்டன் அகார் 48 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, கோட்சி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 190 ரன்களை சேர்த்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 191 ரன்களை எடுத்து வென்றதுடன், டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது.

    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    முதலில் இரு அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது மற்றும் 2-வது டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது. ஹென்ட்ரிக்ஸ் 42 ரன்களும், டோனோவன் பெரேரா 48 ரன்களும் எடுத்தனர். கேப்டன் மார்க்ரம் அதிரடியாக ஆடி 41 ரன்கள் சேர்த்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் அபாட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து 191 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.

    டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி அதிரடியாக ஆடியது. பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்டது. ஜோஷ் இங்கிலிஸ் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் நிலைத்து ஆடி 48 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டி 37 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் 17.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஆஸ்திரலிய அணி 3-0 என டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

    டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருதும், மிட்செல் மார்ஷ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

    • தென் ஆப்பிரிக்காவில் கொள்ளை கும்பல் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர்.
    • இதில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ஜோகனஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை மறித்து பணத்தைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீது கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 16 ஆண்கள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது. மார்க்ரம் 49 ரன்களில்ஆட்டமிழந்தார். பவுமா 35 ரன்களில் வெளியேறினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார்.

    ஆஸ்திரேலியா சார்பில் அபாட், நாதன் எலீஸ் தலா 3 விக்கெட்டும், பெஹ்ரெண்டார்ப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. டிராவிஸ் ஹெட் 18 ரன்னில் அவுட்டானார். மேத்யூ ஷார்ட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 30 பந்தில் 66 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    மிட்செல் மார்ஷ் 39 பந்தில் 79 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

    இதன்மூலம் ஆஸ்திரேலியா 168 ரன்கள் எடுத்து வென்று டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. 3 விக்கெட் வீழ்த்திய அபாட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    • சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில் தீ விபத்தில் சிக்கியுள்ளனர்
    • ஐந்து மாடி கட்டிடத்தில் குடில்கள் அமைத்து தங்கியுள்ளனர்

    தென்ஆப்பிரிக்காவின் முக்கிய வணிக மாவட்டமாக கருதப்படுவது ஜோகன்னஸ்பர்க். தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான இங்குள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 64 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக கருகி உயிரிழந்துள்ளனர். 43 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் ஒரு காலத்தில் பரபரப்பாக செயல்பட்ட கட்டிடமாக இருந்து வந்துள்ளது. தற்போது குற்றச்செயல் புரியும் நபர்களின் கூடாரமாக மாறியுள்ளது. சட்டப்படி மற்றும் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் இங்கு தங்கியுள்ளனர். இவர்களை விரட்டியடித்து விட்டு குற்றச்செயல் புரிந்துவர்களும் தங்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில்தான் இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி நிகழ்ந்துள்ளது.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். உறவினர்களை தேடிக்கொண்டிக்கும் நபர்களிடம், கட்டிடத்திற்குள் யாரும் உயிருடன் இருப்பதற்கு சாத்தியமில்லை என்ற அதிர்ச்சி தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஒவ்வொரு மாடியிலும் சிறுசிறு குடில் அமைத்து தங்கியியுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் 15-க்கும் மேற்பட்ட குடில்களில் தங்யிருக்கிலாம் எனக் கூறப்படுகிறது.

    அல்பர்ட்ஸ் தெரு, டெல்வர்ஸ் கார்னரில் உள்ள அடுக்கமாடி கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியின் ஏராளமான கட்டிடங்களில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள், இன்னும் குடியுரிமை பெற முடியாத ஏராளமானோர் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது.
    • இந்தியா, சீன எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

    ஜோகனஸ்பர்க்:

    எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிகிறது.

    இதற்கிடையே, ஜோகன்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 15-வது மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கலந்து கொள்ள தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். மாநாட்டுக்கு இடையே இரு நாட்டு தலைவர்களும் சந்தித்தனர். அப்போது இருவரும் கைகுலுக்கி, சிறிது நேரம் தனியாக பேசினர்.

    இந்நிலையில், இரு நாட்டு தலைவர்கள் பேசியது குறித்து வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ரா கூறியதாவது:

    இந்தியாவின் லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது.

    எல்லை பிரச்சினையில் இருதரப்பிலும் அமைதியை நிலைநாட்டுவதன் முக்கியத்துவம்.

    இந்திய சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என இருவரும் முடிவு செய்துள்ளனர் என தெரிவித்தார்.

    ×