என் மலர்
தென் ஆப்பிரிக்கா
- முதல் போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
- தொடர் நாயகனாக தென் ஆப்பிரிக்காவின் மார்க்ராம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜோகன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 320 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 251 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 321 ரன்கள் குவிக்க, வெஸ்ட் இண்டீசுக்கு 391 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 106 ரன்களில் சுருண்டது. இதனால் 284 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. அத்துடன், டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது.
இன்று நிறைவடைந்த இரண்டாவது போட்டியின் ஆட்டநாயகனாக டெம்பா பவுமாவும், தொடர் நாயகனாக மார்க்ராமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 320 ரன்கள் சேர்த்தது.
- தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 4 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
ஜோகன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 320 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் மார்கிராம் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். டோனி டி ஜார்ஜி 85 ரன்னில் அவுட்டானார். டீன் எல்கர் 42 ரன் எடுத்தார்.
வெஸ்ட்இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, கைல் மேயர்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஹோல்டர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. ஹோல்டர் 81 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஜெரால்டு 3 விக்கெட்டும், ரபாடா, ஹார்மர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 4 ரன் எடுத்துள்ளது.
- தென் ஆப்பிரிக்கா டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து பவுமா நீக்கம் செய்யப்பட்டார்.
- டி20 அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கேப் டவுன்:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணிகளை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருந்த பவுமா வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் ஒருநாள் அணிக்கு மட்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி 20 அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் எய்டன் மார்க்ரம் தலையிலான சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 அணிக்கு இனிமேல் மார்க்ரமே கேப்டனாக செயல்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்கா அணி:
தெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஜி, ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், சிசண்டா மாகலா, கேசவ் மஹாராஜ், வியான் முல்டர், லுங்கி என்கிடி, ரியான் ரிக்கல்டன், ஆண்டிலே ஸ்டுக்வேப்ஸ், பெஹ்லுக்வே, லிசாட் வில்லியம்ஸ், ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன்.
3-வது ஒருநாள் போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணி:
தெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஜி, ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசண்டா மகலா, கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், வைடன் மில்லர், டேவிட் மில்லர், , லுங்கி என்கிடி, ரியான் ரிக்கெல்டன், வெய்ன் பார்னெல், அண்டில் பெஹ்லுக்வாயோ, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லிசாட் வில்லியம்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென்.
3 டி20 போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்கா அணி:
எய்டன் மார்க்ரம் (கேப்டன்), குயின்டன் டி காக், ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசாண்டா மகலா, டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, ரிலீ ரோசோவ், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.
+3
- முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் விக்கெட் 6 இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது.
- தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீராங்கனை லாரா வால்வார்ட் பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் குவித்தார்.
கேப் டவுன்:
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று தென்ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் விக்கெட் 6 இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய பெர்த் மூனே 53 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசான் கேப், ஷப்னிம் இஸ்மாயில் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீராங்கனை லாரா வால்வார்ட், ஆஸ்திரேலிய பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் குவித்தார். மறுமுனையில் டாஸ்மின் பிரிட்ஸ் 10 ரன்கள், மரிசான் கேப் 11 ரன், கேப்டன் சுனே லஸ் 2 ரன் என விரைவில் விக்கெட்டை இழந்தனர். அதிரடி காட்டிய லாரா வால்வார்ட் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரது விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அவரைத் தொடர்ந்து சோல் டிரையான் 25 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அனெக் போஸ்ச் 1 ரன் மட்டுமே அடித்தார். கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவை என்ற நிலையில், 7 ரன்களே எடுத்தது. கடைசி வரை போராடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் மகளிர் டி20 உலகக் கோப்பையை 6 முறை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.
+2
- பெர்த் மூனே 53 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசான் கேப், ஷப்னிம் இஸ்மாயில் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
கேப் டவுன்:
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று தென்ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லேனிங் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
துவக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி, பெர்த் மூனே களமிறங்கினர். ஹீலி 18 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பெர்த் மூனே- கார்ட்னர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தது. அதிரடி காட்டிய கார்ட்னர் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 29 ரன்னில் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் மூனே அரை சதம் கடந்து தனது அதிரடியை தொடர்ந்தார்.
கிரேஸ் ஹாரிஸ், கேப்டன் மெக் லேனிங் தலா 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். எலிஸ் பெர்ரி 7 ரன்னிலும், ஜார்ஜியா ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் விக்கெட் 6 இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. பெர்த் மூனே 53 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசான் கேப், ஷப்னிம் இஸ்மாயில் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.
இன்றைய ஆட்டத்தைப் பொருத்தவரை தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சில் சிறப்பாக இருந்தது. ஆனால் பெர்த் மூனேவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
- தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக உலக கோப்பை இறுதிச்சுற்றில் நுழைந்துள்ளது
- ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கேப் டவுன்:
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று தென்ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லேனிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஐந்து முறை உலக கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்துடன் களமிறங்குகிறது. அதேசமயம், முதல் முறையாக உலக கோப்பை இறுதிச்சுற்றில் நுழைந்து, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய தென் ஆப்பிரிக்க அணி, கோப்பையை கைப்பற்ற கடுமையாக போராடும். இதனால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
- டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
- இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 6வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல ஆவலாக உள்ளது.
கேப் டவுன்:
8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
கேப்டவுனில் நடந்த முதலாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. இதில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
கேப் டவுனில் நேற்று முன்தினம் நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 158 ரன்களே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன், முதல் முறையாக டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இன்று நடக்கும் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல ஆவலாக உள்ளது. இதேபோல், உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் ஆவலில் தென் ஆப்பிரிக்காவும் மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய போட்டி சவாலாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- ஆஸ்திரேலியா எல்லா உலக கோப்பை போட்டியிலும் அரையிறுதிக்கு முன்னேறிய ஒரே அணியாக உள்ளது.
- டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன
கேப் டவுன்:
8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
கேப்டவுனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. இதில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
கேப் டவுனில் நேற்று நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 158 ரன்களே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன், முதல் முறையாக டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், நாளை நடக்கும் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
- பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்காத நாடுகளை கிரே பட்டியலில் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு வைக்கிறது.
- நைஜீரியா, தென் ஆப்பிரிக்காவை கிரே பட்டியலில் வைத்துள்ளது சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு.
ஜோகனஸ்பெர்க்:
பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போராடத் தவறியதற்காக சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவை சாம்பல் பட்டியலில் சேர்த்துள்ளது. இது ஆப்பிரிக்காவின் இரு பெரிய பொருளாதாரங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
உலக வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இந்த நாடுகள் பணமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு தரநிலைகளுக்கு முழுமையாக இணங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் பல தொடர்புடைய சட்டங்களை இயற்ற தென் ஆப்பிரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், பிரதிநிதித்துவம் செய்ய சமீபத்தில் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவுக்கு அனுப்பப்பட்ட உயர்மட்டக் குழுவும் இதுவாகும்.
முன்னர் வழங்கப்பட்ட பல பரிந்துரைகளில் தென்னாப்பிரிக்கா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு ஒப்புக்கொண்டது, ஆனால் பணமோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குகளை அதிகரிப்பது, பறிமுதல் செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இன்னும் அதிகமாக செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
+2
- 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா ககா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கேப் டவுன்:
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் 2வது அரையிறுதி போட்டி இன்று கேப்டவுனில் நடந்தது. இதில் போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணியுடன் மோதியது, டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 68 ரன்களும், லாரா வல்வார்ட் 53 ரன்களும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. சிறப்பாக ஆடிய சோபியா 28 ரன்னிலும், டேனி வியாட் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அலைஸ் கேப்சி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதன்பின்னர் நாட் ஷிவர் பிரன்ட், கேப்டன் ஹீதர் நைட் நிதானமாக ஆடினர். நாட் ஷிவர் பிரன்ட் 40 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின்னர் கேப்டன் ஹீதர் நைட் வெற்றிக்காக கடுமையாக போராடினார். ஆனால் மறுமுனையில் அமி ஜோன்ஸ் (2 ரன்), சோபி (1 ரன்), கேத்ரின் ஷிவர் பிரன்ட் (0) என விரைவில் பெவிலியன் திரும்பியதால் ஆட்டம் தென் ஆப்பிரிக்காவிற்கு சாதகமாக திரும்பியது.
கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தை எதிர்கொண்ட கிளென் ஒரு ரன் தட்டிவிட்டு அடுத்த வாய்ப்பை கேப்டனுக்கு கொடுத்தார். ஆனால் 2வது பந்தில் கேப்டன் நைட் ரன் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த டீன், 4வது பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்தார். கடைசி இரண்டு பந்துகளில் கிளென் 4 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், முதல் முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா ககா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஷப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட் வீழ்த்தினார். டாஸ்மின் பிரிட்ஸ் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.
நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன், தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை நடத்த உள்ளது.
- இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியை தீர்மானிக்கும் 2வது அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது.
- தென் ஆப்பிரிக்காவின் லாரா வல்வார்ட் 53 ரன்களும், டாஸ்மின் பிரிட்ஸ் 68 ரன்களும் எடுத்தனர்.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது. இதில் போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது, டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் லாரா வல்வார்ட் 53 ரன்களும், டாஸ்மின் பிரிட்ஸ் 68 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. 11 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக ஆடிய சோபியா 28 ரன்னிலும், டேனி வியாட் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அலைஸ் கேப்சி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதன்பின்னர் நாட் ஷிவர் பிரன்ட், கேப்டன் ஹீதர் நைட் நிதானமாக ஆடினர்.
- ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது
- இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களே எடுக்க முடிந்தது.
கேப்டவுன்:
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பெர்த் மூனே 54 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. டாப் ஆர்டர் வீராங்கனைகள் ரன் குவிக்க தவறிய நிலையில், கடுமையாக போராடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 43 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 52 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். எனினும் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால், இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களே எடுக்க முடிந்தது.
இதனால் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், தொடர்ந்து 7வது முறையாக உலக கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.