என் மலர்
உலகம்

X
குரங்கு செய்த சேட்டையால் இருளில் மூழ்கிய இலங்கை: மக்கள் அவதி
By
மாலை மலர்10 Feb 2025 5:23 AM IST (Updated: 10 Feb 2025 5:49 AM IST)

- இலங்கையில் துணை மின்நிலையம் ஒன்றில் குரங்கு ஒன்று நுழைந்தது.
- இதையடுத்து நேற்று நாடுதழுவிய மின்தடை ஏற்பட்டது என்றனர் அதிகாரிகள்.
கொழும்பு:
இலங்கையில் துணை மின்நிலையம் ஒன்றில் குரங்கு ஒன்று நுழைந்ததை அடுத்து நேற்று நாடு தழுவிய மின்தடை ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.30 மணியளவில் தொடங்கிய மின்தடை 3 மணி நேரத்துக்குப் பின்னரும் சீராகவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எரிசக்தித்துறை மந்திரி, கொழும்பு புறநகர் பகுதியான பானாந்துறை மின்நிலையத்தில் ஏற்பட்ட மின் அழுத்த பிரச்சனையால் நாடுமுழுதும் மின் தடை ஏற்பட்டது. மின்சார தடைக்கு பானாந்துறை மின்நிலையத்தில் புகுந்து குரங்கு செய்த சேட்டையே காரணம். சில பகுதிகளில் மின்சார விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் பல இடங்களில் மின்தடை நீடித்தது. விரைவில் மின்விநியோகம் சீராகும் என தெரிவித்தார்.
குரங்கு செய்த சேட்டையால் இலங்கையில் மின்தடை ஏற்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
X