search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சிரியாவில் கிராமத்தை சூறையாடிய கொள்ளையர்கள்: படைகளை குவித்த கிளர்ச்சியாளர்கள்
    X

    சிரியாவில் கிராமத்தை சூறையாடிய கொள்ளையர்கள்: படைகளை குவித்த கிளர்ச்சியாளர்கள்

    • கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை பிடித்துள்ளதால் அதிபர் ரஷியாவுக்கு தப்பி ஓட்டம்.
    • டமாஸ்கஸ் அருகில் உள்ள கிராமம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    சீரியாவில் அதிபருக்கு எதிராக போராடிய கிளர்ச்சிக்குழு டாமஸ்கஸை பிடித்தது. இதனால் தலைநகரில் இருந்து அதிபர் பஷர் ஆசாத் தப்பியோடினார். ரஷியா அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.

    இந்த நிலையில் டமாஸ்கஸ் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் கொள்ளையர்கள் புகுந்து சூறையாடி வருகின்றனர். பெண்கள், சிறுவர்கள் என எல்லோரும் கண்ணில் பட்டதையெல்லாம் சுருட்டிக்கொண்டு ஓடுகிறார்கள். இதனால் கிளர்ச்சிக்குழு அந்த கிராமத்தில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

    டமாஸ்கஸ் அருகில் உள்ள ஹுசைனியா கிராமம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் பறிகொடுத்த நபர் ஒருவர் கூறுகையில் "எங்களுடைய பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்படடன. என்னுடைய 25 வருட வீடு கொள்ளைக்கு உள்ளானது. அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை என்றால், வீட்டை தீ வைத்து கொளுத்துகின்றனர். வீட்டில் உள்ள எல்லாவற்றையும் கொள்ளையடித்து விடுகிறார்கள்" என்றார்.

    மற்றொரு நபர் (பள்ளி முதல்வர்) "என்னுடைய வீடு கொள்ளைடிக்கப்பட்டது. என்னால் தடுக்க முடியவில்லை. செக் பாயிண்ட் அமைத்து கொள்ளையர்களை தடுப்போம் என கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அருகில் உள்ள கிராமத்தில் இருந்து அதிக அளவில் கொள்ளை அடிக்க இங்கே வருகிறார்கள்" என்றார்.

    கொள்ளையடிக்கும் நபர்கள் வெடிகுண்டுகளை வீசி குடியிருப்புகளை தீ வைத்து கொளுத்தி வருவதாகவம் தெரிவித்துள்னர். இந்த குடியிறுப்புகள் முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தங்கிய இடமாகும்.

    கொள்ளையடிக்கப்பட்ட இடத்திற்குச் சென்ற கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பல கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். பலர் கொள்ளையடித்த பொருட்களை கையில் வைத்துக் கொண்டு மறைந்து இருந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×