என் மலர்
உலகம்
மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் உடல் டோக்கியோ வந்தடைந்தது
- அபே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல்.
- அபேவுக்கான பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
மேற்கு ஜப்பான் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஜப்பான் கடற்படையின் முன்னாள் உறுப்பினரான கொலையாளியை போலீசார் கைது செய்தனர். மேலும், கொலையாளி பயன்படுத்திய வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாளை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அபே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், அபேவுக்கான பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் பிரதமரின் மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கும் நிலையில் அபேவின் உடல் டோக்கியோவை வந்தடைந்துள்ளது.
டோக்கியோவின் மேல்தட்டு குடியிருப்புப் பகுதியான ஷிபுயாவில் உள்ள அவரது வீட்டிற்கு அபேயின் உடலைச் சுமந்துகொண்டு ஒரு கருப்பு சவக்கரி வாகனம் வந்தது. வாகனத்தில் அவரது மனைவி அகி உடன் இருந்தார். அங்கு காத்திருந்த பலர் வாகனம் கடந்து செல்லும்போது தலையைத் தாழ்த்திக் கொண்டு மரியாதை செலுத்தினர்.