என் மலர்
உலகம்

X
பயங்கரவாத தாக்குதல்: பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்- அமெரிக்கர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
By
மாலை மலர்9 March 2025 3:19 PM IST

- பயங்கரவாதம் மற்றும் ஆயுத மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள் இருந்து வருகிறது.
- பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பயங்கரவாதம் மற்றும் ஆயுத மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மாகாணங்கள், இந்தியா- பாகிஸ்தான் எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகிலுள்ள பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் செய்ய வேண்டாம்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
×
X