search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நாளை பதவியேற்கும் டிரம்புக்கு எதிராக தலைநகரில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் - ஏன் தெரியுமா?
    X

    நாளை பதவியேற்கும் டிரம்புக்கு எதிராக தலைநகரில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் - ஏன் தெரியுமா?

    • வாஷிங்க்டன் டிசியில் மூன்று வெவ்வேறு பூங்காக்களில் இருந்து தொடங்கி லிங்கன் நினைவிடம் அருகே போராட்டம் நடைபெற்றது.
    • டிரம்ப் எதிர்ப்பு போஸ்டர்களை ஒட்டியும், பதாகைகளை ஏந்தியும் அவர்கள் போரட்டம் நடத்தினர்.

    அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் நாளை [ஜனவரி 20] பதவியேற்கிறார்.

    இந்நிலையில் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது பதவியேற்பை எதிர்த்து தலைநகர் வாஷிங்க்டன் டிசியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். பீப்புள்ஸ் மார்ச் அமைப்புடன் இணைந்து சவுத் ஏஷியன் சர்வைவர்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    வாஷிங்க்டன் டிசியில் மூன்று வெவ்வேறு பூங்காக்களில் இருந்து தொடங்கி லிங்கன் நினைவிடம் அருகே மூன்று போராட்டக்குழுவினர் இணைந்து கோஷங்களை எழுப்பினர்.

    நாங்கள் முன்கூட்டியே கீழ்ப்படியவில்லை, பாசிசத்திற்கு அடிபணியவில்லை என்பதை நிரூபிக்க விரும்புகிறோம் என்று பீப்புள்ஸ் மார்ச் தெரிவித்துள்ளது. பெண்கள் உரிமை, சமத்துவம், குடியேற்றம் போன்ற அனைத்தையும் ஆதரிக்க நாங்கள் அணி திரண்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    டிரம்ப் எதிர்ப்பு போஸ்டர்களை ஒட்டியும், பதாகைகளை ஏந்தியும் அவர்கள் போரட்டம் நடத்தினர். டிரம்புக்கு ஆதரவளிக்கும் டெஸ்லா நிறுனவர் எலோன் மஸ்க் உட்பட அவருக்கு நெருங்கியவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    அவர்களில் பலர் "F**k ட்ரம்ப்!", "டிரான்ஸ் லைவ்ஸ் மேட்டர்!", "எழுந்து நில்லுங்கள், போராடுங்கள்!", "கறுப்பினப் பெண்களை நம்புங்கள்!" மற்றும் "நாங்கள் அமைதியாக இருக்க முடியாது." என்ற கோஷங்களை எழுப்பினர்.

    நியூயார்க், சியாட்டில் மற்றும் சிகாகோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டன.

    டிரம்ப் முதல்முறையாக பதவியேற்ற 2017 ஜனவரியிலும் இதே அமைப்பினர் இதேபோன்ற போராட்டத்தை நடத்தியது. நாளை டிரம்ப் பதவி ஏற்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×