என் மலர்
உலகம்

டிரம்ப் - எலான் மஸ்க் இருவரும் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள் - எக்ஸ் ஏஐ தந்த திடுக் பதில்

- இதற்கு முதலில் ஜெஃப்ரி எப்ஸ்டீனைக் குறிப்பிட்டது
- இந்த பதில்கள் வைரலான நிலையில் எக்ஸ் நிறுவனம் கோர்க் ஏஐயில் பேட்ச் ஒர்க் செய்துள்ளது.
பிரபல சமூக ஊடகமான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க். தற்போது அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப்புக்கு மிகவும் நெருக்கானவராக உள்ளார்.
அரசு செயல்திறன் துறை என்ற புதிய துறையின் தலைவரு, இவரே. அரசின் வீண் செலவுகளை கண்டிருந்தது டிரம்ப்பிடம் கூறுவதே இந்த துறையின் வேலை. பின்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்து வந்த USAID அமைப்புக்கான நிதியை எலான் மஸ்க் அறிவுரையின் பேரில் டிரம்ப் நிறுத்தினார்.
மேலும் அமெரிக்க அரசு ஊழியர்கள் 10,000 க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்தார். 75,000 அரசு ஊழியர்கள் சலுகைகளை ஏற்று பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கிடையே ஆவணமின்றி அமெரிக்காவில் உள்ள பிற நாட்டவரை கை கால்களில் சங்கிலி கட்டி நாடு கடத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் எக்ஸ் தளத்துக்கு என்று பிரத்தேயகமாக உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள எக்ஸ் செயற்கை தொழில்நுட்பமான (எக்ஸ். ஏஐ) கோர்க் சாட்பாட் ஒரு தவறு செய்துள்ளது. ஏஐ கோர்ட் சாட்பாட் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு எடக்குமடக்கான பதில் ஒன்றை தெரிவித்துள்ளது.
நெட்டிசன் ஒருவர் கோர்ட் சாட்பாட் - இடம், இன்று அமெரிக்காவில் உயிருடன் இருக்கும் யார் தங்கள் செயல்களுக்கு மரண தண்டனைக்குத் தகுதியானவர் என்று கேள்வியை கேட்டுள்ளார்.
இதற்கு முதலில் ஜெஃப்ரி எப்ஸ்டீனைக் குறிப்பிட்டது. ஆனால் அவர் இறந்துவிட்டதாக நெட்டிசன் டைப் செய்துள்ளார். இதனையடுத்து, மரண தண்டனைக்கு தகுதியானவர் "டொனால்ட் டிரம்ப்" என்று பரிந்துரைத்துள்ளது. மேலும் மற்றொரு முறை அதே கேள்விக்கு எலான் மஸ்க் என்று கோர்க் பதிலளித்துள்ளது.
இந்த பதில்கள் வைரலான நிலையில் எக்ஸ் ஏஐ கோர்க் சாட்பாட்டில் பேட்ச் ஒர்க் செய்துள்ளது. அதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) யாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கேட்டபோது, கோர்க், "ஒரு AI ஆக, அந்தத் தேர்வைச் செய்ய எனக்கு அனுமதி இல்லை" என்று பதில் அளித்துள்ளதை எக்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.
Grok 3 thinks Donald Trump deserves the death penalty. https://t.co/uJId8gies4
— ×͜?...C20H25N3O... (@EyeofhorusC) February 21, 2025