என் மலர்
உலகம்

X
ஒரு மணி நேரம் முடங்கிய டுவிட்டர் - டிரெண்டான டுவிட்டர் டவுன் ஹாஷ் டேக்
By
மாலை மலர்2 July 2023 1:46 AM IST

- உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு மேல் டுவிட்டர் முடங்கியது.
- இதனால் டுவிட்டர்வாசிகள் டுவிட் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
நியூயார்க்:
உலகின் மிகப்பெரிய சமூக வலைதளம் டுவிட்டர். இந்த சமூக வலைதளத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் உள்ளனர்.
இதற்கிடையே, உலகின் பல்வேறு நாடுகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் டுவிட்டர் சமூக வலைதளம் முடங்கியது. இதனால் கோடிக்கணக்கான பயனாளர்கள் டுவிட்டரில் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் தவித்தனர்.
இந்நிலையில், முடங்கியிருந்த டுவிட்டர் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. டுவிட்டர் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் டுவிட்டர்வாசிகள் மீம்ஸ்களை டுவிட்டரில் தெறிக்கவிட்டனர். இவை டுவிட்டரில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், டுவிட்டர் டவுன் என்ற ஹாஷ் டேக் டிரெண்டிங்கிலும் இடம்பிடித்தது.
Next Story
×
X