என் மலர்
ஐக்கிய அரபு அமீரகம்
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 142 ரன்களை மட்டுமே எடுத்தது.
சார்ஜா:
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
ஏ பிரிவில் இதுவரை நடைபெற்ற 3 லீக் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 3 வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், சார்ஜாவில் இன்று நடைபெற்ற 18வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்னும், மெக்ராத் மற்றும் எலிஸ் பெர்ரி தலா 32 ரன்னும் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் ரேணுகா சிங், தீப்தி சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா 20 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 6 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
4வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உடன் தீப்தி சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது.
இருவரும் சேர்ந்து 63 ரன்கள் சேர்த்த நிலையில் தீப்தி சர்மா 29 ரன்னில் அவுட்டானார். ரிச்சா கோஷ் ஒரு ரன்னில் வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து, தனி ஆளாகப் போராடினார்.
54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் இந்திய அணி 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
- முதலில் ஆடிய வங்கதேசம் 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி பெற்றது.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 17.2 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
நடப்பு தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி பெறும் 3-வது வெற்றி இதுவாகும்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 82 ரன்களில் ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்றது.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அலியா ரியாஸ் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் ஆஷ்லே கார்ட்னர் 4 விக்கெட்டும், அன்னபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 11 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
நடப்பு தொடரில் ஆஸ்திரேலியா அணி பெறும் 3-வது வெற்றி இதுவாகும்.
- முதலில் ஆடிய வங்கதேசம் 103 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி பெற்றது.
ஷார்ஜா:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று ஷார்ஜாவில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. நிகர் சுல்தானா அதிகமாக 39 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கரீஷ்மா 4 விக்கெட்டும், பிளெட்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 12.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் 34 ரன்கள் எடுத்தார்.
நடப்பு தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.
- முதலில் ஆடிய இந்தியா 172 ரன்கள் அடித்தது.
- ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரித் கவுர் அரை சதம் விளாசினர்.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் அடித்தது.
தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா-மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய மந்தனா அரை சதம் விளாசினார். ஷபாலி வர்மா 43 ரன்னில் வெளியேறினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுர் 27 பந்தில் அரைசதம் விளாசி 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தொடர்ந்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 90 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஆஷா சோபனா, அருந்ததி ரெட்டி தலா 3 விக்கெட்டும், ரேணுகா தாக்கூர் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
நடப்பு தொடரில் இந்திய மகளிர் அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.
- டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த அந்த அணி 99 ரன்கள் எடுத்தது.
ஷார்ஜா:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று நடந்த 2வது போட்டியில் ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஸ்காட்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி தடுமாறியது. அந்த அணியின் அலிசா லிஸ்டர் மட்டும் 26 ரன்கள் எடுத்தார் .
100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணி வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 11.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது
- டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த இங்கிலாந்து 118 ரன்கள் எடுத்தது.
ஷார்ஜா:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இலங்கை அணியை வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. அந்த அணியின் டேனியல் வாட் மட்டும் சிறப்பாக விளையாடி 41ரன்கள் எடுத்தார் .
119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. அந்த அணியின் வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடாமல் விரைவில் அவுட் ஆகினர். சோபனா மோஸ்ட்ரே மட்டும் 44 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வங்கதேசம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 343 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய அயர்லாந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
அபுதாபி:
அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அபுதாபியில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 343 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக ஆடி சதமடித்து 112 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வெரைன் அரை சதமடித்து 67 ரன்கள் எடுத்தார். வியான் முல்டர் 43 ரன்னும், ரியான் ரிக்கல்டன் 40 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து 344 என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சில் திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், அயர்லாந்து 30.3 ஓவரில் 169 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரை 2-0 என கைப்பற்றியது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் லிசாட் வில்லியம்ஸ் 3 விக்கெட்டும், நிகிடி, பார்டுயின் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இரு அணிகள் மோதும் 3-வது போட்டி நாளை நடக்கிறது.
- டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த நியூசிலாந்து 160 ரன்கள் குவித்தது.
ஷார்ஜா:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று நடந்த 2வது போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்தது. கேப்டன் சோபி டிவைன் அரை சதமடித்து 57 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 2 விக்கெட் வீழ்த்தினார்.
161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அந்த அணியின் வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடாமல் விரைவில் அவுட் ஆகினர்.
இறுதியில், இந்திய அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சார்பில் ரோஸ்மேரி மெய்ர் 4 விக்கெட்டும், லீ டஹுஹு 3 விக்கெட்டும், ஈடன் கார்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 116 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ஷார்ஜா:
9-வது மகளிர் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வங்கதேசம் வென்றது.
இந்நிலையில், இன்று நடந்த 2வது போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 116 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாத்திமா சனா அதிகபட்சமாக 30 ரன் எடுத்தார்.
இலங்கை அணி சார்பில் பிரபோதனி, சுகந்திகா குமாரி, சமாரி அடப்பட்டு தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
117 ரன்கள் எடுத்தால் வெற்ரி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. அந்த அணியின் வீராங்கனைகள் விரைவில் அவுட் ஆகினர்.
இறுதியில், இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 85 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் சாடியா இக்பால் 3 விக்கெட்டும், பாத்திமா சனா, ஒமைமா சோகைல், நர்ஷா சாந்து தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 6 தடவை உலகக் கோப்பையை வென்றுள்ளது.
- இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2016) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றன.
ஷார்ஜா:
பெண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியை 2009-ம் ஆண்டு ஐ.சி.சி அறிமுகம் செய்தது. 2 ஆண்டுக்கு ஒருமுறை இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 டி20 உலகக் கோப்பை நடைபெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 6 தடவை (2010, 2012, 2014, 2018, 2020, 2023) உலகக் கோப்பையை வென்றுள்ளது. இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2016) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளன.
9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் இன்று தொடங்குகிறது. வரும் 20-ம் தேதி வரை துபாய், ஷார்ஜாவில் போட்டிகள் நடைபெறுகிறது.
வங்கதேசத்தில் நடைபெற இருந்த போட்டி அங்கு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டது.
டி20 உலகக் கோப்பையில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிக்கப்பட்டன. அதன் விவரம்:
ஏ பிரிவு : நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை.
பி பிரிவு: இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும்.
லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
15-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது.
முதல் அரை இறுதி அக்டோபர் 17-ம் தேதியும், 2-வது அரை இறுதி 18-ம் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 20-ம் தேதியும் நடக்கிறது. மொத்தம் 23 ஆட்டங்கள் நடக்கிறது.
இதில் ஸ்மிருதி மந்தனா தலைமையில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்திய அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் இறுதிப்போட்டியில் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தது. முதல் முறையாக டி20 உலக கோப்பையை வெல்லுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
- 2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) விழா அபு அதாபியில் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்று வருகிறது
- சிறந்த நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கான விருதுக்கு அனிமல் பட வில்லன் பாபி தியோல் தேர்வாகியுள்ளார்.
2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) விழா அபு அதாபியில் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 27 [வெள்ளிக்கிழமை] தொடங்கிய இந்த மூன்று நாள் விழா இன்றுடன் [செப்டம்பர் 29] நிறைவடைகிறது. இந்நிலையில் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
➽சிறந்த நடிகர் விருதுக்கு ஷாருக்கான் தேர்வாகியுள்ளார். அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.
➽சிறந்த படமான ரன்பீர் கபூர் நடித்த 'அனிமல் 'படம் தேர்வாகியுள்ளது. தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இந்த படத்தை இயக்கி இருந்தார்.
➽சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 'மிஸஸ் சாட்டர்ஜி vs நார்வே' படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.
➽சிறந்த இயக்குநராக '12த் பெயில்' படத்தை இயக்கிய விது வினோத் சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்
➽சிறந்த துணை நடிகராக 'அனிமல்' படத்தில் நடித்த அனில் கபூர் தேர்வாகியுள்ளார்
➽சிறந்த துணை நடிகையாக ''ராக்கி அவுர் ராணி பிரேம் கஹானி' படத்திற்காக மூத்த நடிகை ஷபானா அஸ்மி தேர்வாகியுள்ளார்
➽சிறந்த நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கான விருதுக்குஅனிமல் பட வில்லன் பாபி தியோல் தேர்வாகியுள்ளார்
➽'ராக்கி அவுர் ராணி பிரேம் கஹானி' படம் சிறந்த கதைக்கான விருதுக்குத் தேர்வாகியுள்ளது
➽சிறந்த தழுவல் [உண்மை சம்பவத்திலிருந்து] கதை விருதுக்கு '12த் பெயில்' தேர்வாகியுள்ளது
➽சிறந்த இசைக்காக அனிமல் படம் தேர்வாகியுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் ஆவார்.
➽சிறந்த பாடல் வரிகள் விருதுக்கு அனிமல் படத்தில் பாடல் எழுதிய சித்தார்த் கரிமா மற்றும் சத்ரங்கா ஆகியோர் தேர்வாகியுள்ளனர் .
மூன்றாம் நாள் நிகழ்வாக இன்று (செப்.29) ஹனி சிங், ஷில்பா ராவ் மற்றும் ஷங்கர்-எஹ்சான்-லாய் உள்ளிட்ட கலைஞர்களின் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.