search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா
    X

    மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்தது.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

    லீக் சுற்றுகள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பெத் மூனி அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். எல்லீஸ் பெரி 31 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க வீராங்கனை டஸ்மின் பிரிட்ஸ் 15 ரன்னில் அவுட்டானார். லாரா வோல்வார்ட் 42 ரன்னில் வெளியேறினார். அனேகே போஸ்ச் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 74 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    Next Story
    ×