என் மலர்
உலகம்

இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட்!

- இந்தோ-பசிபிக் பகுதியில், நான் குழந்தையாக இருக்கும் போது வசித்தது எனக்கு நன்றாக தெரியும்.
- டிரம்பின் அமைதி, சுதந்திரம் மற்றும் செழிப்பு உள்ளிட்ட லட்சியங்களை அடைய வலுவான உறவுகள் அவசியம்
அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அவரது அரசில் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் உள்ளார்.
இந்நிலையில் அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, நான் இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
இந்தோ-பசிபிக் பகுதியில், நான் குழந்தையாக இருக்கும் போது வசித்தது எனக்கு நன்றாக தெரியும். நான் ஜப்பான், தாய்லாந்து, இந்தியாவுக்குச் செல்வேன்.
அதன்பின் அமெரிக்காவுக்கு திரும்பும்போது பிரான்சுக்கு செல்ல உள்ளேன். அதிபர் டிரம்பின் அமைதி, சுதந்திரம் மற்றும் செழிப்பு உள்ளிட்ட லட்சியங்களை அடைய வலுவான உறவுகள் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டபோது அவரை துளசி கப்பார்டை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.