என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உலகம்
![ஓடும் காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய அமெரிக்க நபர் ஓடும் காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய அமெரிக்க நபர்](https://media.maalaimalar.com/h-upload/2023/04/14/1865928-money.webp)
X
ஓடும் காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய அமெரிக்க நபர்
By
மாலை மலர்15 April 2023 3:03 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இதுகுறித்து போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு விசாரணை நடத்தினர்.
- நெடுஞ்சாலையில் பணத்தைத் தேட வேண்டாம் என்று ஓரிகான் மாநில காவல்துறை பொதுமக்களை வலியுறுத்துகிறது.
அமெரிக்காவை சேர்ந்த நபர் கோலின் தேவிஸ் மெக்கர்தி (38). இவர், கடந்த செவ்வாய் கிழமை அன்று இரவு அங்குள்ள நெடுஞ்சாலை அருகில் தனது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது பணத்தை கார் ஜன்னலில் இருந்து அள்ளி வீசினார்.
இதுகுறித்து போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு விசாரணை நடத்தினர். இதில், தனது பணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் பணத்தை அள்ளி வீசியதாக மெக்கர்தி தெரிவித்துள்ளார். மேலும் அவர் அள்ளி வீசிய பணத்தின் இந்திய மதிப்பு சுமார் 16 கோடி ஆகும்.
மேலும், இதுகுறித்து மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் கேப்டன் கைல் கென்னடி கூறுகையில், "நெடுஞ்சாலையில் பணத்தைத் தேட வேண்டாம் என்று ஓரிகான் மாநில காவல்துறை பொதுமக்களை வலியுறுத்துகிறது. இது மிகவும் ஆபத்தானது மற்றும் அபாயகரமான நிலைக்கு பங்களிக்கிறது" என்றார்.
Next Story
×
X