என் மலர்
உலகம்
VIDEO: உலகிலேயே அதிவேகமான ரெயில் மாதிரியை அறிமுகம் செய்த சீனா - இதுக்கு பேர் தான் ஓவர் ஸ்பீட்
- இன்டீரியர் நாய்ஸ் மற்றும் பிரேக்கிங் டிஸ்டன்ஸ் ஆகியவற்றில் சர்வதேச அளவில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.
- சீனாவில் அதிவேக ரெயில் தடம் [HSR] சுமார் 47,000 கி.மீ. தூரத்துக்கு அந்நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.
சீனாவின் அதிவேக புல்லட் ரெயிலின் மேம்படுத்தப்பட்ட மாதிரி நேற்று [ஞாயிற்றுக்கிழமை] வெளியிடப்பட்டது. இந்த அதிவேக மாதிரி, சோதனை ஓட்டங்களின் போது 450 கிமீ வேகத்தை எட்டியதாகக் அதை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவே உலகின் அதிவேக ரெயில் ஆகும்.
சீன ரெயில்வே துறையான சைனா ஸ்டேட் ரயில்வே குரூப் கோ கூற்றுப்படி, CR450 ப்ரோட்டோடைப் என அழைக்கப்படும் இந்த புதிய மாடல், பயண நேரத்தை மேலும் குறைத்து ரெயில் இணைப்பை இணைப்பை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த CR450 மாதிரி மணிக்கு 450 கிலோமீட்டர் [450 kmph] சோதனை வேகத்தை எட்டி, முக்கிய செயல்திறன் இண்டிகேட்டர்களிலும்- செயல்பாட்டு வேகம், எனர்ஜி கன்சம்ஸசன், இன்டீரியர் நாய்ஸ் மற்றும் பிரேக்கிங் டிஸ்டன்ஸ் ஆகியவற்றில் சர்வதேச அளவில் ரெயில்வேயின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
A prototype of the CR450 bullet train that will run at 400 kilometers per hour debuted in Beijing on Sunday. Check out how fast it can go! pic.twitter.com/TASiO7ZVfC
— China Xinhua News (@XHNews) December 29, 2024
தற்போது சீனாவில் பயன்பாட்டில் உள்ள CR400 Fuxing அதிவேக ரெயில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் சீன அதிவேக ரெயில் தடத்தில் [HSR] இயங்குகிறது.
இந்நிலையில் அதை விடதற்போது அறிமுகப்டுதொட்டுள்ள CR450 மாதிரி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மேலும் சோதனைகளை துரிதப்படுத்தி அதை மேம்படுத்தி வருகிறது. சீனாவில் அதிவேக ரெயில் தடம் [HSR] சுமார் 47,000 கி.மீ. தூரத்துக்கு அந்நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.