என் மலர்
உலகம்
VIDEO: போர் நிறுத்தம் எதிரொலி.. 4 இளம் இஸ்ரேலிய பெண் பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்
- போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
- கரினா அரிவ், டேனிலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் விடுவிக்கப்பட்டனர்.
இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.
அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.
கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது.
பிணைக்கைதிகளான ரோமி கொனின் (24), ஏமி டமாரி (28), டோரன் ஸ்டான்பிரிசர் (31) ஆகிய 3 பேரை ஹமாஸ் அமைப்பு சமீபத்தில் விடுதலை செய்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
H*mas has released the 3 Israelis hostages. Keep it in mind, folks: any violations of the ceasefire, and no one will come save either one of you!????Let's work for the independent Palestine ?? State. pic.twitter.com/wgicJ2VbPh
— ?? LORD JAREDEL TSHILOMBO, METATRON (@JTMprincenews) January 19, 2025
இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுத்துள்ளது. விடுவிக்கப்பட்ட கரினா அரிவ், டேனிலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய 4 பெண்கள் காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Breaking Israeli hostages released smiling and In a great health conditions from Hamas so that was not as bad as zionsts wanted the world to imagine! #freeHostages pic.twitter.com/Lo38YDnkmN
— Bahira Abdulsalam PhD PEng د بهيره عبد السلام (@BahiraR) January 25, 2025
பின்னர் அவர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பிணை கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது.