search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    எல்லாம் ஒரு அளவுக்குதான் ப்ரோ.. எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் ஆவாரா? என்ற கேள்விக்கு டிரம்ப் பதில்..!
    X

    எல்லாம் ஒரு அளவுக்குதான் ப்ரோ.. எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் ஆவாரா? என்ற கேள்விக்கு டிரம்ப் பதில்..!

    • அமெரிக்க அரசியலமைப்பு, ஒரு ஜனாதிபதி இயற்கையாக பிறந்த அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
    • டிரம்ப் வெற்றி பெற 277 மில்லியன் டாலர்கள்வரை மஸ்க் பணத்தை வாரி இறைத்துள்ளார்.

    அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடந்த குடியரசுக் கட்சி மாநாட்டில் நேற்று டொனல்டு டிரம்ப் கலந்துகொண்டார். இந்நிலையில் வரவிருக்கும் டிரம்ப் நிர்வாகத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்த உள்ள உலகப் பணக்காரர் எலான் மஸ்க் ஒரு நாள் அதிபராக முடியுமா? என்று டிரம்ப் -இடம் கேட்கப்பட்டது.

    அதற்கு டிரம்ப், இல்லை, அது நடக்காது என்று பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், அவர் ஏன் இருக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் இந்த நாட்டில் பிறக்கவில்லை என்று டிரம்ப் கூறினார்.

    அமெரிக்க அரசியலமைப்பு, ஒரு ஜனாதிபதி இயற்கையாக பிறந்த அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் முதலாளியான உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் ஆவார்.

    அவர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர் என்று பைடன் நிர்வாகம் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற 277 மில்லியன் டாலர்கள்வரை மஸ்க் பணத்தை வாரி இறைத்துள்ளார்.

    இதற்காக அவருக்கு அரசு செயல்திறன் தொடர்பான GOVERNMENT OF EFFICIENCY பதவி வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் 200 மில்லியன் பாலோயர்களை கொண்ட மஸ்க்கை, பிரசிடெண்ட் மஸ்க் என குறிப்பிட்டு ஒரு கூட்டம் சமூக வலைதளத்தில் வைரல் செய்து வந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது டிரம்ப் காது வரை சென்றுள்ளது.

    இதற்கிடையே அரசு நிதியுதவி திட்டத்துக்கு எதிராக மஸ்க் போர்க்கொடி தூக்கியுள்ளதும் டிரம்ப் உடைய ஜனநாயக கட்சியினரிடையே புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×