search icon
என் மலர்tooltip icon

    ஜிம்பாப்வே

    • வன ஆர்வலரான சிமியோன் என்பவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார்.
    • கரீபா ஏரி பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

    சமூக வலைத்தளங்களில் விலங்குகள் தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டாலும் சில வீடியோக்கள் பயனர்களை கவர்ந்து வைரலாகி விடும். அந்த வகையில் தற்போது யூடியூப்பில் வெளியாகி உள்ள சிங்க வேட்டையின் வீடியோ வைரலாகி வருகிறது.

    அதில், ஜிம்பாப்வேயில் மட்டுசடோனா பகுதியில் தேசிய பூங்காவில் சிங்கக்கூட்டம், கொம்புகள் கொண்ட ஆப்பிரிக்க மான் வகைகளை வேட்டையாடுவதற்காக துரத்தும் காட்சிகள் உள்ளது. வன ஆர்வலரான சிமியோன் என்பவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். அவர் கரீபா ஏரி பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

    இதுகுறித்து அவர் கூறுகையில், எங்கள் படகு சவாரியின் போது எருமைகள் மற்றும் யானைக்கூட்டங்களை கண்டு பிரமித்தோம். சிறிது தொலைவில் சிங்கங்கள் கூட்டமாக இம்பாலாக்களை வேட்டையாடும் காட்சிகளை பார்த்ததும் அவற்றை வீடியோ எடுத்தோம் என்றார்.

    • முகாபே-யை ஆட்சியில் இருந்து அகற்றி அதிபரானார் நங்கக்வா
    • சேவை பணியாளர்களை தேவையற்ற விசாரணைகளில் ஈடுபடுத்துகின்றனர் என்கிறது அமெரிக்கா

    2017ல், ஜிம்பாப்வே நாட்டில், 1980 முதல் 1987 வரை பிரதமராகவும், 1987 முதல் 2017 வரை அதிபராகவும் இருந்தவர் ராபர்ட் முகாபே (Robert Mugabe).

    அமெரிக்க உதவி மூலம், ராணுவ புரட்சி செய்து ஆட்சியிலிருந்த அதிபர் ராபர்ட் முகாபே-யை பதவியில் இருந்து அகற்றி, அந்நாட்டில் அதிபராக பதவியேற்றவர், எம்மர்சன் நங்கக்வா (Emmerson Mnangagwa).

    ஆட்சிக்கு வந்ததும் ஜனநாயக வழியில் ஆட்சியை நடத்துவதாக நங்கக்வா, அமெரிக்க அரசிடம் உறுதி அளித்திருந்தார்.

    ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு முகாபே செய்திருந்த அனைத்து தவறுகளையும் நங்கக்வா செய்து வருவதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டி வந்தது. இரு நாடுகளுக்கு இடையே இரு தசாப்தங்களுக்கும் மேலாக நல்லுறவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்நாட்டில் ஜனநாயகம் தழைப்பதை உறுதி செய்யவும், வறுமையில் வாடும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யவும், சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க மையம் (US Agency for International Development) எனும் அமெரிக்க அமைப்பு, அங்கு சேவை புரிந்து வந்தது.


    இந்நிலையில், இப்பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை, ஜிம்பாப்வே அரசு அச்சுறுத்தி நாட்டை விட்டு வெளியேற்றுவதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது.

    "ஜிம்பாப்வே நாட்டில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க சேவை பணியாளர்களை, ஜிம்பாப்வே அதிகாரிகள் திடீரென தடுத்து நிறுத்தி, அவர்களை முரட்டுத்தனமாக கையாண்டு, தேவையற்ற பல நீண்ட விசாரணைகளில் ஈடுபடுத்தி, இரவு முழுவதும் பயணங்களில் ஈடுபடுத்தி, பிறகு காரணமின்றி அமெரிக்காவிற்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்" என அமெரிக்க உள்துறை செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்தார்.

    மேலும், ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, ஜிம்பாப்வேயின் அதிபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது குற்றம் சாட்டியது.

    தங்கள் நாட்டு உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக ஜிம்பாப்வே, அமெரிக்கா மீது குற்றம் சாட்டி உள்ளது.

    • ஹர்பால் தனது மகன் மற்றும் நண்பர்களுடன் தலைநகர் ஹராரேவில் இருந்து முரோவா நகருக்கு செஸ்னா 206 ரக விமானத்தில் புறப்பட்டார்.
    • விபத்தில் உயிரிழந்த தொழில் அதிபர் ஹர்பால் ரந்தாவா 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள தனியார் பங்கு நிறுவனமான ஜெம் ஹோல்டிங்சின் நிறுவனர் ஆவார்.

    முரோவா:

    ஜிம்பாப்வே நாட்டின் முரோவா நகரில் உள்ள வைர சுரங்கத்தின் உரிமையாளர் ஹர்பால் ரந்தாவா. இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபரான இவர், தங்கம், நிலக்கரி, நிக்கல், தாமிரம் ஆகியவற்றைச் சுத்திகரிக்கும் ரியோசிம் என்ற சுரங்க நிறுவனத்தின் உரிமையாளர். ஹர்பால் தனது மகன் மற்றும் நண்பர்களுடன் தலைநகர் ஹராரேவில் இருந்து முரோவா நகருக்கு செஸ்னா 206 ரக விமானத்தில் புறப்பட்டார்.

    முரோவா நகர் அருகே சென்று கொண்டு இருந்தபோது, விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக நடுவானிலேயே விமானம் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்தில் உயிரிழந்த தொழில் அதிபர் ஹர்பால் ரந்தாவா 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள தனியார் பங்கு நிறுவனமான ஜெம் ஹோல்டிங்சின் நிறுவனர் ஆவார். இவருடன் மரணமடைந்த அவரது மகனுக்கு 22 வயதே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதான எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசா 44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
    • அதிபர் எம்மர்சன் மங்கக்வா 52.6 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஹராரே:

    ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேவில் அதிபர் எம்மர்சன் மங்கக்வா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அதிபர் தேர்தல் கடந்த 23, 24-ந் தேதிகளில் நடந்தது. இதில் அதிபர் எம்மர்சன் மங்கக்வா, எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சமிசா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

    தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் அதிபர் எம்மர்சன் மங்கக்வா 52.6 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பிரதான எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசா 44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலம் அதிபர் எம்மர்சன் மங்கக்வா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார். ஆனால் தேர்தல் முடிவை எதிர்க்கட்சி ஏற்க மறுத்து உள்ளது.

    இதுகுறித்து எதிர்க்கட்சி செய்தி தொடர்பாளர் கூறும்போது, சரியான சரி பார்ப்பு இல்லாமல் அவசர மாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றார்.

    தேர்தல் 23-ந்தேதி ஒரு நாள் மட்டுமே நடத்தப்பட இருந்தது. ஆனால் வாக்கு சீட்டு அச்சடிப்பதில் ஏற்பட்ட தாமதம், சிக்கல்கள் காரணமாக 24-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மேலும் அதிபர் தேர்தல் முடிவு நாளை வெளியிடப் படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் ஒரு நாள் முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2017-ம் ஆண்டு அதிபராக இருந்த ராபர்ட் முகாபே அரசு, ராணுவ புரட்சி மூலம் கவிழ்க்கப் பட்டது. அதன்பின் இடைக் கால அதிபராக எம்மர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த தேர்தலில் எம்மர்சன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார்.

    இதனால் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதை எம்மர்சன் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினார். தற்போது 2-வது முறையாக எம்மர்சனின் வெற்றியை எதிர்க்கட்சி ஏற்காததால் போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளது.

    • இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றது.
    • அந்த அணியின் பாஸ் டி லீடே சதமடித்தும், விக்கெட் வீழ்த்தியும் வெற்றி பெற வழிவகுத்தார்.

    புலவாயோ:

    உலக கோப்பை தொடரில் கலந்துகொள்ள உள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.

    சூப்பர் சிக்ஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பிரெண்டன் மெக்கல்லம் பொறுப்புடன் ஆடி சதமடித்து, 106 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பெரிங்டன் 64 ரன்கள் எடுத்தார்.

    நெதர்லாந்து அணியின் பாஸ் டி லீடே அசத்தலாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் பாஸ் டி லீடே அதிரடியாக ஆடி சதமடித்தார். விரைவில் இலக்கை எட்டினால் உலக கோப்பைக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில், பொறுப்புடன் ஆடினார்.

    6-வது விக்கெட்டுக்கு இணைந்த பாஸ் டி லீடே-சாகிப் ஜுல்பிகர் ஜோடி 113 ரன்கள் சேர்த்தது. 43-வது ஓவரில் ரன் அவுட்டான அவர் 92 பந்தில் 5 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 123 ரன்கள் குவித்தார்.

    இறுதியில் நெதர்லாந்து அணி 42.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடருக்கும் நெதர்லாந்து அணி தகுதி பெற்றது.

    ஏற்கனவே இலங்கை அணியும் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்காட்லாந்து 234 ரன்கள் சேர்த்தது
    • 8.5 ஓவர்கள் மீதம் இருந்ததும் விக்கெட் கைவசம் இல்லாததால் ஜிம்பாப்வே தோல்வி

    உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. குரூப் ஆட்டங்கள் முடிவடைந்து தற்போது சூப்பர் சிக்ஸ் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இலங்கை அணி ஏற்கனவே இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு 9-வது அணியாக தகுதி பெற்றநிலையில், கடைசி இடத்திற்கு ஜிம்பாப்வே, நெதர்லாந்து. ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையில் கடும்போட்டி நிலவியது.

    நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே- ஸ்காட்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டி செய்த ஸ்காட்லாந்து 234 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வேயின் நேர்த்தியான பந்து வீச்சால் ஸ்காட்லாந்து அணியால் அதிக ரன்கள் குவிக்க இயலவில்லை.

    அந்த அணியின் மைக்கேல் லீஸ் அதிகபட்சமாக 34 பந்தில் 48 ரன்கள் அடித்தார். பிராண்டன் மெக்கல்லம் 34 ரன்களும், மேத்யூ கிராஸ் 38 ரன்களும் சேர்த்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர், 235 சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் 37 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து திணறியது. ஷிகந்தர் ரசா (34), ரியான் பர்ல் (83), வெஸ்லி மாதேவேர் (40) வெற்றிக்காக போரடினர்.

    என்றாலும் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்ததால் 41.1 ஓவரில் 203 சுருண்டது ஜிம்பாப்வே. இதன்காரணமாக 31 ரன்னில் தோல்வியை சந்தித்து இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதியாகும் வாய்ப்பை இழந்தது. ஸ்காட்லாந்து அணி சார்பில் கிறிஸ் சோலே 3 விக்கெட்டும், பிராண்டன் மெக்கல்லம் மற்றும் மைக்கேல் லீஸ்க் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    நாளை நெதர்லாந்து- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டி தொடரில் விளையாட தகுதி பெறும்.

    ஏற்கனவே இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    சூப்பர் சிக்ஸில் இன்று ஓமன்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. நாளை ஸ்காட்லாந்து- நெதர்லா்நது, அமெரிக்கா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    7-ந்தேதி இலங்கை- வெஸ்ட் அணிகள் விளையாடுகின்றன. 9-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

    உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கு தொடருக்கு 10 அணிகள் தகுதிப்பெற்றன. தலா ஐந்து அணிகளாக இரண்டு பிரிவுகளாக 10 அணிகளும் பிரிக்கப்பட்டன. இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் சிக்ஸ் அணிக்கு தகுதிப் பெற்ற அணிகள் குரூப் பிரிவில் வெற்றி பெற்ற புள்ளிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக 'பி' பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. இலங்கை குரூப் போட்டியில் இரு அணிகளையும் வீழ்த்தியிருந்ததால் நான்கு புள்ளிகளுடன் சூப்பர் சிக்ஸில் விளையாடியது.

    • முதலில் ஆடிய நெதர்லாந்து 362 ரன்கள் குவித்தது.
    • இறுதியில், நெதர்லாந்து 74 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஹராரே:

    ஹராரேவில் நேற்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் நெதர்லாந்து, ஓமன் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் மழை பெய்ததால் போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி, முதலில் ஆடிய நெதர்லாந்து அணி

    நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் விக்ரம்ஜித் சிங் 110 ரன்கள் எடுத்தார். பரேசி 97 ரன்கள் எடுத்து 3 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

    இதையடுத்து, 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது. ஓமன் அணியின் அயான் கான் மட்டும் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 105 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில் ஓமன் அணி 48 ஓவரில் 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நெதர்லாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விக்ரம்ஜித் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    • இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கு இலங்கை அணி தகுதி பெற்றது.
    • இலங்கை அணியின் நிசங்கா சதமடித்து வெற்றி பெற வழிவகுத்தார்.

    புலவாயோ:

    உலக கோப்பை தொடரில் கலந்துகொள்ள உள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.

    சூப்பர் சிக்ஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 32.2 ஓவரில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சீன் வில்லியம்ஸ் 56 ரன்னும், சிக்கந்தர் ராசா 31 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை அணி சார்பில் தீக்சனா 4 விக்கெட்டும், மதுஷன்கா 3 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே 30 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து குசால் மெண்டிஸ், நிசங்காவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டது.

    இறுதியில், இலங்கை ஒரு விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த நிசங்கா சதமடித்து 101 ரன்னும், குசால் மெண்டிஸ் 25 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு இலங்கை அணி தகுதி பெற்றது.

    • வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன் எடுத்தது.
    • ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்தது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.

    இந்த போட்டியில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.

    இதில் இருந்து இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2 அணிகள் தேர்வாகும்.

    இந்நிலையில், சூப்பர் 6 தொரின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாசை ஸ்காட்லாந்து வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது.

    இதில், வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன் எடுத்தது.

    தொடர்ந்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து ஆட்டத்தை தொடங்கியது.

    இந்த ஆட்டத்தின்போது பிரண்டன் மெக்முல்லன் மேத்யூ க்ராஸ் உடன் ஜோடி சேர்ந்து இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

    இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம், ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றது.

    முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.

    • டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய இலங்கை 213 ரன்னில் ஆல் அவுட்டானது.

    ஹராரே:

    உலக கோப்பை சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இலங்கை, நெதர்லாந்து அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 47.4 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஒரு கட்டத்தில் இலங்கை அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் தனஞ்செயா - ஹசரங்கா ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. தனஞ்செயா 93 ரன்னில் அவுட்டானார்.

    நெதர்லாந்து சார்பில் லோகன் வான் பீக், பாஸ் டி லீடே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி ஆடியது. வெஸ்லி 52 ரன்னும், பாஸ் டீ லீட் 41 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர். ஸ்காட் எட்வர்ட்ஸ் களம் இறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எட்வர்ட்ஸ் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், நெதர்லாந்து அணி 40 ஓவரில் 192 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய அமெரிக்கா 196 ரன்னில் ஆல் அவுட்டானது.

    ஹராரே:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறின.

    ஒவ்வொரு குரூப்பிலும் கடைசி இரண்டு இடங்களைப் பிடித்த அயர்லாந்து, அமெரிக்கா, நேபாளம், யுஏஇ அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறவில்லை. அந்த அணிகள் 7 முதல் 10 இடங்களுக்கான போட்டியில் இறங்கின.

    இதில் 7-வது இடத்துக்கான போட்டிக்கு முன்னேறும் அணியை தேர்வு செய்வதற்கான முதல் அரையிறுதிப் போட்டியில் அயர்லாந்து, அமெரிக்க அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 42.4 ஓவரில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சைதேஜா முக்கமல்லா 55 ரன்னிலும், மொடோனி 55 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டெய்லர் 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அயர்லாந்து தரப்பில் கிரேக் யங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அயர்லாந்து அணி 34.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று 7-வது இடத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது. பால் ஸ்டிர்லிங் அரை சதம் அடித்து 58 ரன்கள் எடுத்தார். பால்பிரின் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கிரெய்க் யங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    • உலக கோப்பை கிரிக்கெட் தகுதிப்போட்டியில் சூப்பர் சிக்ஸ் சுற்று தொடங்கியது.
    • இதன் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, ஓமன் அணிகள் மோதின.

    புலவாயோ:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகளும், பி பிரிவில் இருந்து இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் (4 புள்ளி) அணிகளும் முறையே முதல் 3 இடங்களை பிடித்து 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறின.

    சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுடைய எதிர் பிரிவில் இருந்து முன்னேறிய அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதுடன், இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறும் 13-வது 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், சூப்பர் சிக்ஸ் சுற்று நேற்று நடந்தது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே, ஓமன் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஓமன் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் குவித்தது. சீன் வில்லியம்ஸ் 142 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய லாங்வே 43 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    தொடர்ந்து ஆடிய ஓமன் அணி போராடி தோல்வி அடைந்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரஜாபதி சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார்.

    மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஓமன் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ×