என் மலர்
செய்திகள்
X
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மகாமுனிக்கு சிறப்பு பூஜை
Byமாலை மலர்14 Feb 2017 3:20 PM IST (Updated: 14 Feb 2017 3:20 PM IST)
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மகாமுனிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்களுக்கு எச்சில் சோறு பிரசாதமாக வழங்கப்பட்டது.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் முதன்மையானதாக திகழ்ந்து வருகிறது.
இந்த கோவிலில் அம்மன் சயன நிலையிலிருந்து அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலின் குண்டம் திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
தொடர்ந்து மயான பூஜை, சக்தி கும்ப ஸ்தாபனம், அம்மன் ரத வீதி உலா, குண்டம் பூவளர்த்தல் மற்றும் குண்டம் இறங்குதல் ஆகியவை நடைபெற்று முடிவடைந்தன.
இதனையடுத்து மாசாணியம்மனின் காவல் தெய்வமாகவும், 108 முனிகளின் தலைவராகவும், கம்பீரமாக வீற்றிருக்கும் மகாமுனிக்கு சிறப்பு பூஜை நடத்துவது வழக்கம்.
அதன்படி நேற்று மாலையில் மகாமுனிக்கு சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கின. மகாமுனிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மகாமுனிக்கு மிகவும் விருப்ப உணவானதயிர் சாதம், புளியோதரை . வெண் பொங்கல், மண் கலயங்களில் பானங்கள் உள்ளிட்டவைகள் படையலாக வைக்கப்பட்டன.
பின்னர் தலைமை முறைதாரர் மனோகரன், அருளாளிகள் குப்புசாமி, அருண், முறைதாரர்கள் மற்றும் பக்தர்கள் சரவண விநாயகர் கோவில் பகுதிக்குச் சென்றனர். அங்கு அருள் வந்த நிலையில் இருந்த மகாமுனி அருளாளி சுப்பிரமணியை மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் கோவிலிற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் மகாமுனிக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையடுத்து அருளாளி சுப்பிரமணி மகாமுனிக்கு வைக்கப்பட்டிருந்த படையல்களை கையில் எடுத்து சுவைக்க ஆரம்பித்தார். மகாமுனி படையல் சோறு கிடைத்தால் குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு தாய்மை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.
இதனால் திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத பலர் மகாமுனி அருளாளியின் எச்சில் சோறு பிரசாதமாக வேண்டினர்.
அதில் சிலருக்கே மகாமுனியின் பிரசாதம் கிடைத்தது.
மகாமுனியின் எச்சில் சோறு கிடைக்காத பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறியழுதது அனை வரையும் நெகிழச் செய்தது.
கடந்த ஆண்டு மகாமுனி பிரசாதம் கிடைத்து குழந்தை வரம் பெற்ற பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன். மகாமுனியை வணங்கினர். இதனையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கார்த்திக், கண்காணிப்பாளர் தமிழ் வாணன் புலவர் லோகநாதீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Next Story
×
X