search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகு கேது பெயர்ச்சியையொட்டி திருநாகேஸ்வரம் நாகநாத கோவிலில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.
    X
    ராகு கேது பெயர்ச்சியையொட்டி திருநாகேஸ்வரம் நாகநாத கோவிலில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.

    திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் கோவில்களில் ராகு, கேது பெயர்ச்சி விழா இன்று நடந்தது

    திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், திருப்பாம்புரம் கோவில்களில் இன்று ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரத்தில் ராகு தலம் என அழைக்கப்படும் நாகநாத சுவாமி கோவில் உள்ளது. காவிரி தென்கரை தலங்களுள் மூவரால் பாடல் பெற்றதும், மூர்த்தி, தீர்த்தம், தலம் மூன்றாலும் சிறப்பு பெற்றதும், சூரியன், சந்திரன், பிரம்மா, கார்கோடகன் ஆகியோர் வழி பட்டதாக கருதப்ப டும் சிறப்புடைய இத் தலத்தில் மட்டுமே ராகுபகவான் நாகவள்ளி, நாக கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள் பாலிக்கிறார்.

    ராகுபகவான் 1½ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வது ராகு பெயர்ச்சி விழாவாக நடைபெறுகிறது. அதன் படி இன்று (வியாழக்கிழமை) மதியம் 12.48 மணிக்கு ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

    இதையொட்டி சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம், ஆராதனை, லட்சார்ச்சனை, தயிர் பள்ளயம், சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ராகுபகவானை வழிபட்டனர்.


    ராகு கேது பெயர்ச்சியையொட்டி நடந்த யாக பூஜையின் போது நாக கன்னி நாக வள்ளி சமயேதராய் எழுந்தருளி ராகு பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும் பள்ளத்தில் சவுந்தரநாயகி அம்மன் சமேத நாகநாத சுவாமி கோவில் உள்ளது.

    இக் கோவிலில் கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு இன்று காலை 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை, 1025 மணிக்கு 3-ம் கால யாகபூஜை நடைபெற்றது. மதியம் 12.48 மணிக்குகேது இடப்பெயர்ச்சி வழிபாடுகள் நடைபெற்றது.

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருப்பாம்புரத்தில் சே‌ஷபுரீஸ்வரரர் கோவில் உள்ளது. இக்கோவில் ராகு, கேது தலமாகும்.
    Next Story
    ×