search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரியில் மகா புஷ்கர விழா 2-ம் நாளில் புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்
    X

    காவிரியில் மகா புஷ்கர விழா 2-ம் நாளில் புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்

    காவிரியில் 2-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான தமிழக மற்றும் வடமாநில பக்தர்கள் காவிரியில் புனித நீராடி பின்னர் யாகத்தில் கலந்து கொண்டனர்.
    காவிரி மகா புஷ்கர விழா திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி கரை யில் நேற்று தொடங்கியது. காவிரி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபம் அருகே உள்ள மாமுண்டி கோனார் திடலில் கடந்த மாதம் 24-ந்தேதி யாகசாலைக்கு பந்தல்கால் நடும் விழா நடத்தப்பட்டது.

    காவிரி மகா புஷ்கர விழா வின் தொடக்க நாளான நேற்று காலை 6.45 மணிக்கு அம்மாமண்டபம் அருகில் மாமுண்டி கோனார் திடலில் உள்ள யாகசாலையிலிருந்து மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், ஸ்ரீவில்லிப்புத் தூர் சடகோப ராமானுஜ ஜீயர், காவிரி புஷ்கர பிரம்ம யக்ஞ கமிட்டியினர் மற்றும் வேத விற்பன்னர்கள், மங்கலப் பொருட்களுடன் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக அம்மாமண்டபம் படித்துறைக்கு வந்தடைந்தனர்.

    பின்னர் அங்கு காவிரி தாய்க்கு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீராடினர். இதனை தொடர்ந்து பக்தர்க ளும் புனித நீராடினர்.

    அங்கி ருந்து புனித நீர் கலசங்களில் சேகரிக்கப்பட்டு, ஊர்வலமாக யாகசாலைக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு புனித நீர் உள்ள கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 8.45 மணியளவில் யாகசாலை முன் கோ பூஜை நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.

    மதியம் 12 மணிக்கு மேல் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. யாக சாலை பூஜைகள் முடிந்ததும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவும் யாக சாலை பூஜைகள் நடந்தன. வருகிற 23-ந்தேதி வரை தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் இந்த யாக சாலை பூஜைகள் நடைபெறு கிறது.

    யாகசாலை பூஜையில் தமிழகத்தின் அனைத்து பகுதி க ளில் இருந்தும் வந்திருந்த பக்தர் கள் மற்றும் ஆந்திரா, தெலுங் கானா மாநிலங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    யாகசாலை பூஜையில் பங்கேற்ற அவர்கள் காவிரியில் புனித நீராடினார்கள்.

    2-வது நாளான இன்றும் ஆயிரக்கணக்கான தமிழக மற்றும் வடமாநில பக்தர்கள் காவிரியில் புனித நீராடி பின் னர் யாகத்தில் கலந்து கொண் டனர்.

    இன்று நன்மக்களை பெற சந்தான கோபால கிருஷ்ண இஷ்டி யாகம் நடத் தப்பட்டது.

    வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ள காவிரி மகா புஷ்கர விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்பட முக்கிய பிரமுகர்கள் வர இருப்பதாகவும், அவர்கள் வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் விழா கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×