என் மலர்
நீங்கள் தேடியது "அத்வானி"
- அயோத்தி தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த சமாஜ்வாதி வேட்பாளர் வெற்றி பெற்றார்
- ராகுலின் இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குஜராத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் நேற்று அங்கு நடந்த கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'அரசியல் ஆதாயத்துக்காக பாஜக முன்னெடுத்த ராமர் கோவில் இயக்கம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியால் முறியடிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே குஜராத்திலும் மோடியை முறியடிப்போம்' என்று தெரிவித்தார்.
கடந்த நூற்றாண்டின் இறுதியில் பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ணா அத்வானி உள்ளிட்டோர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரில் முன்னெடுத்த ராமர் கோவில் இயக்கம், கலவரங்களின் மூலம் பாபர் மசூதியை இடிக்கப்படும் அளவுக்கு சென்றது.
அன்று முதல் புகைந்து கொண்டிருந்த இந்த ராமர் கோவில் இயக்கத்தில் முக்கிய கட்டமாக கடந்த 2014 ஆம் ஆனது மக்களவைத் தேர்தலில் பாபர் மசூதி இருந்த இடத்தில ராமர் கோவில் காட்டுவோம் என்று வாக்குறுதியுடன் வெற்றி பெற்று அமைந்த மோடி தலைமையிலான பாஜக அரசால் மீண்டும் தீவிரம் பெறத் தொடங்கியது.
அதன்விளைவாக 1800 கோடி செலவில் மத்திய பாஜக அரசால் ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாஜக ராமர் கோவிலை திறந்தது தேர்தல் ஆதாயத்துக்கான நகர்வாக எதிர்கட்சிகலால் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அயோத்தி தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த சமாஜ்வாதி வேட்பாளர் வெற்றி பெற்றார்.மேலும் பாஜகவின் கோட்டையாக விளங்கிய அம்மாநிலத்தில் இந்தியா கூட்டணி பெருமபான்மை வெற்றியை பெற்றது.
இந்த பின்னணியிலேயே ராமர் கோவில் இயக்கம் இந்தியா கூட்டணியால் முறியடிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராகுலின் இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- பிரதமர் மோடியை பாராளுமன்ற குழு தலைவராக எம்.பி.க்கள் தேர்வு செய்தனர்.
- ஞாயிற்றுக்கிழமை மாலை 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.
மக்களவை தேர்தலில் பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைக்கிறது. மோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அதில் உள்ள கட்சிகள் தேர்வு செய்தன.
இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுடன் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடியை பாராளுமன்ற குழு தலைவராக எம்.பி.க்கள் தேர்வு செய்தனர். இதனால் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார்.
இந்த நிலையில் பாரத ரத்னா விருதை பெற்றவரும், பாஜகவின் முன்னாள் தலைவருமான எல்.கே. அத்வானியை அவரது வீட்டில் சந்தித்து ஆசி பெற்றார்.
மோடி 3-வது முறை பிரதமராக வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவில் உலக நாடுகளில் பல தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்.கே. அத்வானியைத் தொடர்ந்து முரளி மனோகர் ஜோஷியையும் சந்தித்து ஆசி பெற்றார். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாடுபட்ட தொடக்க கால தலைவர்களில் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார்.
- கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட போது மோடி பச்சை நிறத்திலான ஆடை அணிந்திருந்தார்.
- 75 வயதை கடந்தால் அத்வானி அரசியலில் இருந்து விலகினார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் கிடைக்கப்பெறவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைக்க உள்ளது.
வருகிற 8-ந்தேதி இரவு 8 மணிக்கு நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் ஒதுக்குவது? பா.ஜ.க.வில் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது? என்பது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஒரு புறம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட போது மோடி பச்சை நிறத்திலான ஆடை அணிந்திருந்தார். அதே நிறத்திலான ஆடையை அத்வானி அணிந்திருந்த பொழுது மோடி அவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
75 வயதை கடந்தால் அத்வானி அரசியலில் இருந்து விலகினார். அதே போல் 73 வயதான மோடியும் விரைவில் ஓய்வு பெற போகிறார், அதற்கான நிறம் தான் இந்த பச்சை நிறம் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக, பாஜகவில் ஓய்வு பெரும் வயது 75 என்பதால் இன்னும் 2 ஆண்டுகளில் மோடி ஓய்வு பெற்று விடுவார் என்பதால் பாஜகவில் அடுத்த பிரதமர் யார்? அமித்ஷாவா? என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- நமது சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகுந்த மதிப்பிற்குரிய அரசியல்வாதியும், பாரத தேசத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவருமான அப்பழுக்கற்றவர்.
- தேசம் முழுவதும் ரத யாத்திரைகள் நடத்தி பாரத ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டவர்.
சென்னை:
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அடிப்படையிலிருந்து உழைப்பால் உயர்ந்து தேசத்தின் ஏழாவது துணைப் பிரதமராகவும், மத்திய அமைச்சரவையின் முக்கியமான துறைகளை கையாண்ட நிர்வாக திறன் படைத்தவர். நமது சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகுந்த மதிப்பிற்குரிய அரசியல்வாதியும், பாரத தேசத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவருமான அப்பழுக்கற்றவர்.
மேலும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அய்யா அவர்கள், அத்வானி ஜி அவர்களின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக வெளியிட்டுள்ளார்.
தேசம் முழுவதும் ரத யாத்திரைகள் நடத்தி பாரத ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டவர்.
தன்னுடைய வயதளவு இருக்கும் அனுபவங்களை வைத்து, தேசத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் பிரதமர்களை வழிநடத்திக் கொண்டிருக்கும், பெருமதிப்பிற்குரிய மூத்த அரசியல்வாதியான எல்.கே.அத்வானி ஜி அவர்களுக்கு, தேசத்தின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என கூறியுள்ளார்.
அடிப்படையிலிருந்து உழைப்பால் உயர்ந்து தேசத்தின் ஏழாவது துணைப் பிரதமராகவும், மத்திய அமைச்சரவையின் முக்கியமான துறைகளை கையாண்ட நிர்வாக திறன் படைத்தவர். நமது சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகுந்த மதிப்பிற்குரிய அரசியல்வாதியும், பாரத தேசத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவருமான… https://t.co/xstzYP125I
— Dr.L.Murugan (@Murugan_MoS) February 3, 2024
- கும்பாபிஷேகத்திற்கான வேலைகள் அனைத்தும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிவடைந்து விடும்.
- ஜனவரி 16-ந்தேதி கும்பாபிஷேகம் தொடங்கி ஜனவரி 22-ந்தேதி வரை நடைபெறும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. வேலைகள் அனைத்தும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிவடைந்து கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் முடிவடைந்து விடும். ஜனவரி 16-ந்தேதி கும்பாபிஷேகம் தொடங்கி ஜனவரி 22-ந்தேதி வரை நடைபெறும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என போராட்டம் நடத்தியவர்களில் பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இருவரும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இருவரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் "எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் குடும்பத்தின் மூத்தவர்கள். அவர்களின் வயதை கருத்தில் கொண்டு, அயோத்திக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இருவரும் அதை ஏற்றுக் கொண்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.
- பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- பிரதமர் மோடி அத்வானியின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி:
பா.ஜ.க. மூத்த தலைவரான எல்.கே.அத்வானி இன்று தனது 96-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அத்வானி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவரது வீட்டிற்கே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல, பா.ஜ.க.வின் பல்வேறு தலைவர்கள் அத்வானிக்கு சமூக வலைதளங்களில் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
கடந்த 1927-ம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த இந்தியாவின், தற்போது பாகிஸ்தானின் பகுதியாக இருக்கும் கராச்சியில் அத்வானி பிறந்தார். இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட அத்வானி, அதன்பின் ஜனசங்கத்திற்காக வேலை செய்தார். கடந்த 1980-ம் ஆண்டு பா.ஜ.க.வை உருவாக்கிய தலைவர்களில் அத்வானியும் ஒருவர்.
அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்காக 1990-ல் அத்வானி நடத்திய ரதயாத்திரை தேசிய அரசியலில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக கருதப்பட்டு வருகிறது.
- சிபிஐ நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
- இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அலகாபாத்:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, சாத்வி ரிதாம்பரா, நிரித்ய கோபால் தாஸ் உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அயோத்தியாவைச் சேர்ந்த இரண்டு இஸ்லாமியர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததுடன், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தனர்.