என் மலர்
நீங்கள் தேடியது "அன்பழகன்"
- என் வளர்ச்சிக்கு ஊக்கம் வழங்கியவர் பெரியப்பா.
- தமிழர் நலவாழ்வுக்காகவே வாழ்ந்து மறைந்த இனமானப் பேராசிரியரின் பிறந்தநாளில் அவரின் நீங்கா நினைவுகளை நெஞ்சிலேந்தி வணங்குகிறேன்.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
"யாரோ சிறியர் நரியர்
சூதோ வாதோ செய்திடத் துணிவரேல்
பேராசிரியர் கூர்வேல் பிளக்கும்!
தீராப் பிணியும் தீர்ந்து தமிழினம் பிழைக்கும்!
பெரியாரின் பிள்ளைகள் நாம்
பேரறிஞர் தம்பிகள் நாம் - என்றும்
பிரியாத இருவண்ணக் கொடியே நாம்!"
என முத்தமிழறிஞர் கலைஞர் கவிபாடிய கழகத்தின் கொள்கைத்தூண், என் வளர்ச்சிக்கு ஊக்கம் வழங்கிய பெரியப்பா, தமிழர் நலவாழ்வுக்காகவே வாழ்ந்து மறைந்த இனமானப் பேராசிரியரின் பிறந்தநாளில் அவரின் நீங்கா நினைவுகளை நெஞ்சிலேந்தி வணங்குகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
- நூற்றாண்டு விழா பொதுகூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிகுப்பம் புகழேந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
- 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
சென்னை:
சென்னை தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் தெற்கு பகுதி சார்பில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்றது.
கலைஞர் நகர் தெற்கு பகுதி செயலாளரும் சென்னை தெற்கு மாவட்டம், கலைஞர் நகர் தெற்கு பகுதி சார்பில் என் (பகுதி செயலாளர், 138-வது வார்டு கவுன்சிலர் கே.கண்ணன்) தலைமையில் வடக்கு பகுதி செயலாளர், 129-வது வார்டு கவுன்சிலர் மு.ராசா முன்னிலையில் நடந்த பேராசிரியர் பெருந்தகை நூற்றாண்டு விழா பொதுகூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிகுப்பம் புகழேந்தி ஆகியோர் சிறப்புரையாற்றி 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., சகோதரர் ஏ.எம்.வி..பிரபாகர் ராஜா, கணக்கு நிலைகுழு தலைவர் அண்ணன் க.தனசேகரன், மாநில வர்த்தகரணி செயலாளர் அண்ணன் கவிஞர் காசி முத்துமாணிக்கம் பங்கேற்ற நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணன் பிஎஸ்.முருகேசன், அண்ணன் ST.தங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன், பகுதி நிர்வாகிகள் எஸ்.உமாபதி, அஜந்தாரவி, பெ.தியாகு, கனிமொழிதனசேகரன், அ.பாபு, ரஞ்சித்குமார், ஆர்.சசிகுமார், வட்ட செயலாளர்கள் சோ.செந்தில்குமார், மு.அன்பழகன், பூக்கடை ஆர்.பழனிச்சாமி, பிகே.குமார், சதீஷ்கண்ணன் வடக்கு வட்ட செயலாளர்கள் மு.கோவிந்தராஜ், மைக்கேல், விஏ.ராஜா, பழக்கடை பாஸ்கர், தஞ்சை பாபு, ஆர்.ராமமூர்த்தி மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு விழா மற்றும் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம்.
- மாவட்ட செயலாளர் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை:
சென்னை வடகிழக்கு மாவட்டம் புழல் ஒன்றிய தி.மு.க. சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு விழா மற்றும் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம் விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழன் பிரசன்னா, முரசொலி மூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன், விளாங்காடு பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதிசரவணன், புழல் ஒன்றிய கழக அவைத்தலைவர் ர.செல்வமணி, துணை தலைவர் கலாவதி நந்தகுமார், செங்குன்றம் பே.செயலாளர் ஜி.ராஜேந்திரன், புழல் ஒன்றிய தலைவர் தங்கமணி திருமால், புழல் ஒன்றிய துணை தலைவர் சாந்தி பாஸ்கரன், புழல் ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜேஸ்வரி எத்திராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சி.அற்புதராஜ், மூ.ரமேஷ், ஆர்.இ.ஆர்.விப்ரநாராயணன், ரா.ஏ.பாபு, பி.நந்த குமார், கபிலன், வடகரை விஜி, கமலக்கண்ணன், பா.மதிவாணன், குறிஞ்சி எஸ்.கணேசன், பி.ராமகிருஷ்ணன், புதுக்கராம், ஊராட்சி மன்ற தலைவர்கள், என்.ராமு, என்.ஜானகிராமன், ஆஷா கல்விநாதன், பி.சிவக்குமார், கே.கபிலன், மா.மணி, சி.ஏழுமலை, சி.தேவன், சி.மனோகரன், டி.அருணகிரி, ஜெ.முருகன், கலைவாணன், அரி, பிரபா, ராமச்சந்திரன், எ.தினேஷ், இ.ஞானசேகரன், பெ.எழிலன், பெ.கபிலன், ஜி.கே.இனியன், செ.யுவராஜ், என்.எம்.டி.இளங்கோவன், ஆர்.டி.சுரேந்தர், பாலசுப்பிரமணி, விளாங்காடுபாக்கம், ஊராட்சி கிளை செயலாளர்கள் டி.நித்தியானந்தம், வெ.பாரதி, ஜெ.தங்கராஜன், ஆர்.மல்லியார், ஜி.காமராஜ், வெ.கோவிந்தராஜ், பெ.பரிமள செல்வம், டி.நாகராஜ், சு.தனஞ்செழியன், எ.சீனு, எ.வி.அருண், எஸ்.ராமு, எம்.சதீஷ், ச.தனுஷ், நிலவழகி, இனியன், ரதி சீனிவாசன், கே.சத்தியசீலன், ஆனந்திநாகராஜன், தர்மி ரவி, ஏ.எல்.மாரி, அருணாதேவி சீனு, விளாங்காடுபாக்கம் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் கே.அப்பன்ராஜ், கு.இளவரசன், கே.அருள்மொழிவர்மன், திராவிட டில்லி, ஏ.பிரேமலதா, ஈஸ்வரி, செ.மதுரைமுத்து, கே.சேகர், ர.சுந்தரவடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கி.வீரமணி க.அன்பழகனின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.
- 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் பேராசிரியர் அன்பழகன்.
சென்னை :
மறைந்த முன்னாள் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார்.
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு அனைவரையும் வரவேற்றார். கட்சியின் பொருளாளரும், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, கட்சியின் துணைப்பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, எம்.பி.க்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கருணாநிதியின் ஆற்றல், ஸ்டாலினின் செயலில் தெரிகிறது என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் பேராசிரியர் அன்பழகன். மு.க.ஸ்டாலினை போல், இன்னும் 100 ஸ்டாலின்கள் வரவேண்டும் என்று மேடையில் பாராட்டியவரும் அவர்தான். வாரிசு, வாரிசு என்று இன்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களே. அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியபோது, கல்வெட்டு போல பாராட்டு பத்திரம் கொடுத்தவர் க.அன்பழகன்தான்.
கருணாநிதிக்கு மட்டுமல்ல, எனக்கும் ஸ்டாலின் வாரிசுதான். எனவே அடுத்த தலைமுறையை பாதுகாக்கவேண்டிய கடமை அவருக்கு உண்டு என்று துணிச்சலாக சொன்னவர் க.அன்பழகன். கட்சியின் செயல்தலைவராக என்னை முன்மொழிந்தவரும் அவர்தான். தலைவர் மறைவுக்கு பிறகு என்னை தலைவராக முன்மொழிந்தவரும் அவர்தான். நான் இந்த அளவுக்கு தகுதி பெற்றவனாக இருக்க அனைத்துக்கும் காரணம் அவர்தான். அவர் எந்த அளவுக்கு கோபக்காரரோ, அந்த அளவுக்கு பாசக்காரர் என்பதையும் மறந்துவிடமுடியாது.
திராவிட மாடல் ஆட்சி கொள்கையை, வலிமையை கருணாநிதி, க.அன்பழகன் ஆகியோரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். அனைவரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் கட்சியின் இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் 234 தொகுதிகளில் திராவிட மாடல் பாசறை கூட்டம் என்ற கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறோம். இதற்காக இளைஞர் அணி, மாணவர் அணிக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரத்தில் அதனை ஒன்றிய அளவிலே, கிராம அளவிலே என பட்டித்தொட்டிகளெல்லாம் பாசறை கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும். இதுதான் க.அன்பழகனுக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பிதழை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சர் துரைமுருகன் வெளியிட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.
பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியாக க.அன்பழகனின் புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், அந்த கண்காட்சியை தான் திறந்து வைப்பது பொருத்தமாக இருக்காது என்றும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திறந்து வைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி க.அன்பழகனின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.
- தமிழகம் முழுவதும் வருகிற 16-ந் தேதி கே.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது.
- காஞ்சிபுரத்தில் துரைமுருகன், கோவையில் டி.ஆர்.பாலு, திண்டிவனத்தில் கனிமொழி, ஆவடியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்கள்.
சென்னை:
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் கே.அன்பழகன் நூற்றாண்டு நிறைவாக தமிழகம் முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கே.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் உரையாற்றும் தி.மு.க. மூத்த தலைவர்களின் பட்டியலையும் தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி காஞ்சிபுரத்தில் துரைமுருகன், கோவையில் டி.ஆர்.பாலு, திண்டிவனத்தில் கனிமொழி, ஆவடியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வடசென்னையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- திருவுருவச் சிலை நிறுவப்பட்டு டிபிஐ வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும்.
- சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகனின் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திமுக மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டு அந்த வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும் என்றும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித்துறையின் வளர்ச்சிக்கென ரூபாய் 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு, நடப்பு ஆண்டிற்கு சுமார் ரூபாய் 1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
அரசு எடுத்து வரும் பல்வேறு ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளால் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நடப்பு ஆண்டிலேயே பல்வேறு கட்டுமானத்திற்கும் மராமத்துப் பணிகளுக்கும் கூடுதலாக சுமார் 1400 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள்.
இத்துடன், பேராசிரியர் அன்பழகன் அவர்களது நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் திருவுருவச்சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் "பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்'' என்றும் அழைக்கப்படும்.
மேலும் கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நம் உயிரனைய தலைவரின் 95வது பிறந்த நாள் விழா கொண்டாட்ட மடல். அவருடைய உடல் அசைவுகள் கொஞ்சம் குறைந்திருக்கலாம். ஆனால் அவரின்றி எதுவும் அசைவதில்லை. இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைக் கொண்டு வந்தவர் கலைஞர்.
நீண்ட நெடுங்காலமாக தலைவர் கலைஞரின் தோளோடு தோள் நின்று துணைபுரியும் அவரது அரசியல் தோழரான கழகப் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் தலைமையேற்க, தலைவரின் சொந்த மண்ணாகிய திருவாரூரில் அவரது மைந்தன் என்ற பெருமையுடனும் அவரது இயக்க உடன்பிறப்பு என்ற தகுதியுடனும் நானும் பங்கேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Karunanidhi #MKStalin #Anbazhagan #DMK