என் மலர்
நீங்கள் தேடியது "கிருமிநாசினி"
- துளசி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது.
- தினமும் இரண்டு இலை துளசி சாப்பிட்டால் பல்வேறு நோய்களை விரட்டலாம்.
துளசி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவரது வீட்டிலும் இந்த செடி இருக்கும். இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.
வீட்டில் துளசி மாடம் என்று ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்தனர். இன்று அடுக்குமாடி குடியிருப்பில் துளசி வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது. பெருமாள் கோவிலில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் தான் இன்று துளசியை நிறைய பேர் பார்க்கின்றனர்.
சாமிக்கு சூட்டப்படும் மாலையில் தான் சிலர் துளசியை பார்க்கின்றனர். தினமும் இரண்டு இலை துளசி சாப்பிட்டால் பல்வேறு நோய்களை விரட்டலாம். ஆனால் சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை குறைவு தான். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.
ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் அறவே ஒழிக்கலாம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை அண்டாது. கோடை காலத்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும்.
அதனை தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலை யால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறுடன் கலந்து நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை, சொரி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.
சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். இதனை செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மருந்து, மாத்திரை மூலம் செய்ய முடியாததை இந்த அருமருந்தான துளசி செய்துவிடும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வரவேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அள விற்கு தண்ணீரும் பருகிவர பிரச்சினை சரியாகும். துளசி யிடம் காய்ச்சலைத் தடுக் கக்கூடிய இயல்பு உள்ளது.
இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந் துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமை ப்பை மொத்தமாக சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு. வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்களுடன் துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம்.
இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி கிருமி நாசினி, பல்வேறு வியாதி களையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது இந்த துளசி. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோளையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதி கமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு.
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக்க துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்பளங்களுக்கு துளசி இலையை நீர் விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி. எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் அதற்கு உண்டு.
வைரஸ் காய்ச்சல் வந்தால் அதை குணப்படுத் தக்கூடிய வல்லமையும் துள சிக்கு உண்டு. ஜப்பானீஸ் என்செபலாடி டிஸ் எனப்படும் மூளைக் காய்ச்சலுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளனர். அதேபோல பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும், தடுக்கும் வல்லமையும் துளசிக்கு உண்டு. நோய் வராமல் தடுக்கும் சக்தி மட்டுமல்லாமல், வந்தால் அதை விரைவில் குணமாக்கும் சக்தியும் துளசிக்கு இருக்கிறது.
பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்பு குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும். துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறி தளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர பல்வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலை சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
வீடுகளில் துளசி இலை கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்றி துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது. துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல் படுவதோடு, ஞாபக சக்தியை யும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களில் இருந்து காக்கிறது. எளிமையான கருத்தடை சாதனமாக கொள்ளவும் இந்த துளசி ஏற்றது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது. கிருமி நாசினியாகவும், உடலை தூய்மைப்படுத்தும் பொருளாகவும் அது செயல்படுகிறது. சளி போன்ற வற்றிற்கும் துளசி அருமருந்தாக அமைகிறது. துளசி செடியின் இலைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் நம்மை அணுகாது. கல்லீரலில் வரும் அத்தனை நோய்களையும் இந்த துளசி செடியினால் விரட்டி அடித்து விடலாம்.
துளசி செடியை பிடுங்கிக்கொண்டு வந்து மண்பானைத் தண்ணீரில் அப்படியே ஊறப்போடுங்கள். அந்த தண்ணீரை அடிக்கடி குடித்து வாருங்கள். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும்.
- ஒருமாத காலத்திற்கு நோன்பு கஞ்சி காய்ச்சும் பணிகளும், இரவு நேர வணக்க வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற உள்ளன.
- பழுதான தெருவிளக்கு கம்பங்களில் புதிய மின்விளக்குகளை மாற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தி தரவேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மகேந்திரனிடம், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், ராயல் காதர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வணிகர் அணி செயலாளர் ஜான் முகம்மது தலைமையில் கிளை செயலாளர் சதாம் உசேன், ம.ஜ.க. வளைகுடா பொறுப்பாளர் நாச்சிகுளம் ரசீது, தீன்முகம்மது, ஜியாவுதீன், ராசித் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ரமலான் நோன்பு மாதத்தில் குடிதண்ணீர், தெருவிளக்கு, சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகளை தடையின்றி வழங்க கோரி ம.ஜ.க.வினர் மனு அளித்தனர்.
புனிதமிகு ரமலான் நோன்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.
நமது ஊராட்சியில் உள்ள பள்ளி வாசல்களில் வழக்கம்போல் இவ்வருடமும் தொடர்ந்து ஒருமாத காலத்திற்கு நோன்பு கஞ்சி காய்ச்சும் பணிகளும், இரவு நேர வணக்க வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற உள்ளன.
அதேபோன்று வீடுகளிலும் ஒருமாத காலம் நோன்பு நாட்களை கொண்டாட உள்ளனர். எனவே ஊராட்சிக்கு உட்பட்ட அணைத்து பள்ளிவாசல்களிலும் தினமும் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு தங்குதடையின்றி குடி தண்ணீர் கிடைக்க வேண்டும்.
வீடுகளுக்கு வழங்கப்படும் குடிதண்ணீரையும் உரிய நேரங்களில் தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும்.
பழுதான தெருவிளக்கு கம்பங்களில் புதிய மின்விளக்குகளை மாற்றியும் இருள் சூழ்ந்த பகுதிகளில் புதிய மின்விளக்குகளை பொறுத்தியும் வெளிச்சத்தை ஏற்படுத்தி தரவேண்டும்.
அனைத்து பள்ளிவாசல் வளாக பகுதிகளிலும் தெரு ஓரங்களிலும் குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். கிருமி நாசினிகளை தெளித்து சுகாதார பகுதியாக்கி தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.