search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொளத்தூர்"

    • கொளத்தூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அதிகளவு மழை பெய்த விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு மூத்த அதிகாரிகள், உயரதிகாரிகள் விரைந்துள்ளனர்.

    ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.

    செல்விநகர் நீர் உந்து நிலையத்தில் ஆய்வு நடத்திய முதலமைச்சர், அப்பகுதி மக்களிடம் மழைநீர் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகளின் இருப்பு குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    கொளத்தூர் சீனிவாச நகர் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களின் வருகைப்பதிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

    இதையடுத்து கொளத்தூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து அவர் கேட்டறிந்தார்.

    இந்நிலையில் கொளத்தூரில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதுமில்லை; கவலைப்படுவதும் இல்லை.

    * அதிகளவு மழை பெய்த விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு மூத்த அதிகாரிகள், உயரதிகாரிகள் விரைந்துள்ளனர்.

    * மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதியை அனுப்பி உள்ளேன்.

    * தலைநகரம் நிம்மதியாக இருக்கிறது.

    * வானிலையை ஓரளவுக்குத்தான் கணிக்க முடியும். புயலின் வேகம் குறைந்து ஒரே இடத்தில் நிற்பதை எப்படி கணிப்பது? திடீரென மாறி விடுகிறது.

    * வானிலை மையம் கொடுக்கும் தகவல் அடிப்படையில்தான் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.

    • பெரம்பூர் தொகுதியில் தான் அதிகபட்சமாக விண்ணப்பித்துள்ளனர்.
    • மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மனுக்கள் பெறப்படுகிறது.

    சென்னை:

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் 4 நாட்கள் நடைபெற்றன.

    சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    சிறப்பு முகாம்கள் மூலம் மொத்தம் 89,256 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 18 வயது நிரம்பிய இளம் வயதினர் மட்டும் 58,374 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம்-6ஐ பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர். இவர்கள் 18 வயது நிரம்பியதற்கான வயது சான்றுடன் விண்ணப்பித்தனர்.

    பெரம்பூர் தொகுதியில் தான் அதிகபட்சமாக 6,097 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்ததாக ஆர்.கே.நகர் தொகுதியில் 5,227 பேரும், திரு.வி.க. நகர் தொகுதியில் 5,306 பேரும் மனு கொடுத்துள்ளனர்.

    வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தவர்கள், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்வதற்கு 29,501 பேர் மனு கொடுத்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து 1,371 பெயரை நீக்கம் செய்யவும் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

    ஒட்டு மொத்தமாக அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தொகுதியாக பெரம்பூர் தொகுதி உள்ளது. அங்கு 9,013 படிவங்கள் பெறப்பட்டன. அடுத்ததாக கொளத்தூரில் 8,422 படிவங்களும் மூன்றாவதாக ஆர்.கே.நகர் தொகுதியில் 7,737 படிவங்களும் பெறப்பட்டன.

    சிறப்பு முகாம்கள் முடிந்தாலும் கூட இன்று முதல் 28-ந்தேதி வரை மேலும் 4 நாட்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்ய மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மனுக்கள் பெறப்படுகிறது.

    • மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
    • அரசின் திட்டங்களால் தமிழகம், பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

    கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்.

    நலத்திட்ட உதவிகள் வழங்கு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 127 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

    அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி கொளத்தூர் தொகுதியை எடுத்துக்காட்டு தொகுதியாக மாற்றியுள்ளோம்.

    யார் என்ன சொன்னாலும் முன்னேற்றத்தை இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும்.

    பெண்கள் சமூதாயத்தில் முன்னேற்றம் அடைய ஊக்கம் அளிக்கும் நாள் மார்ச் 8.

    மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

    அரசின் திட்டங்களால் தமிழகம், பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

    தமிழ்நாட்டை வஞ்சிக்காத மதிக்கின்ற மத்திய அரசு அமைய வேண்டும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரு லிங்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர்.
    • இது தொடர்பாக அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றம் அடைந்த அவர் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரை சேர்ந்தவர் 32 வயது வாலிபர்். இவருக்கு பகுதி நேர வேலை ெதாடர்பாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வந்தது. அதில் தொடர்பு கொண்ட போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் ஒரு லிங்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர்.

    இதனை நம்பிய அவர் 7 தவணைகளாக ரூ.6 லட்சத்து 71 ஆயித்து 241 - ஐ அவர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பினார். ஆனால் அவர் கூறிய படி கமிஷன் கொடுக்கவில்லை. இது தொடர்பாக அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றம் அடைந்த அவர் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கொளத்தூரில் நடைபெற்ற கால்நடை வார சந்தையில் வெள்ளாடு, செம்மறிஆடு, குரும்பை ஆடு விற்பனை சூடு பிடித்தது.
    • வெள்ளாடு கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று செம்மறியாடு ரு.7 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாளன்று கால்நடை வார சந்தைக்கு சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு இன்று கொளத்தூரில் நடைபெற்ற கால்நடை வார சந்தையில் வெள்ளாடு, செம்மறிஆடு, குரும்பை ஆடு விற்பனை சூடு பிடித்தது. வெள்ளாடு கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று செம்மறியாடு ரு.7 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதன் காரணமாக கொளத்தூர் கால்நடை வார சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கால்நடை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளை விட வியாபாரிகள் அதிகளவில் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்ததால் ஆடுகளின் விலை கிலோ ஒன்றுக்கு 1,200 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

    • கொளத்தூரில் மாணவ - மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலவச சைக்கிள்கள் வழங்கினார்.
    • ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரி ஆழப்படுத்தி அகலப்படுத்தி அழகுபடுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    சென்னை:

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 1546 மாணவ-மாணவிகள், தொகுதியில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார்.

    இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, மேயர் பிரியா,கமிஷனர் ககன் தீப்சிங்பேடி, எம்.பி.க்கள் கிரிராஜன், கலாநிதி வீராசாமி, ஐ.சி.எப்.முரளி, தேவஜவகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து கொளத்தூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மேலும் பள்ளிசாலையில் புதிதாக கட்டப்பட உள்ள சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளி சிங்காரச் சென்னை 2.0 நிதியில் புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    200 அடி சாலையில் இருந்து தணிகாசலம் நகர் கால்வாயில் இணைக்கும் மழைநீர் வடிகால்வாய் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    நீர்வள ஆதாரத் துறையின் மூலம் கொளத்தூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரி ஆழப்படுத்தி அகலப்படுத்தி அழகுபடுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    சீனிவாசா நகர் சென்னை ஆரம்ப பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். ஜி.கே.எம்.பிரதான சாலை, 33-ஆவது தெரு சந்திப்பில், புதியதாக கட்டப்பட உள்ள 16-ம் நாள் காரியக் கூடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    பெரியார்நகர் புறநகர் அரசு பொது மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டு உள்ள 4 அறுவை அரங்கம் மற்றும் ஆய்வகத்தினை திறந்து வைத்து பிராணவாயு உற்பத்திக்கலனை தொடங்கி வைத்தார்.

    ×