search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவலிங்கம்"

    • குரங்கு ஒன்று துள்ளி குதித்து சிவலிங்கம் அருகே வந்து நின்றது.
    • குரங்கு சிவலிங்கத்தை பக்தியுடன் வழிபட்டது பக்தர்களை கவர்ந்தது.

    தெலுங்கானா மாநிலம் மேட்சல் மல்காஜிகிரி மாவட்டம் கீசரகுட்டாவில் பிரசித்தி பெற்ற ராமலிங்கேஸ்வரசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்கள் பூ தூவி வழிபட்டு வருகின்றனர். நேற்று பக்தர்கள் அங்கு சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது குரங்கு ஒன்று துள்ளி குதித்து சிவலிங்கம் அருகே வந்து நின்றது. அருகில் இருந்த பூ ஒன்றை எடுத்து அடக்கத்துடன் சிவலிங்கத்தின் உச்சியில் வைத்தது. பின்னர் சிவலிங்கத்தின் மீது தலை சாய்த்து பவ்யமாக குரங்கு வழிபட்டது. இதனை கண்டதும் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். குரங்கு சிவலிங்கத்தை பக்தியுடன் வழிபட்டது பக்தர்களை கவர்ந்தது.

    இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. குரங்கு தரிசனம் செய்த பின் பக்தர்கள் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    • கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கரியாக்குடல் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் திருக்கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை கைலாசநாதர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

    பூஜை நடந்து கொண்டிருந்த போது சிவலிங்கத்தில் திடீரென ஒற்றைக் கண் தோன்றியது. 

    இதை பார்த்த பக்தர்கள் சிவலிங்கம் நெற்றிக்கண் திறந்து விட்டதாக பரவசம் அடைந்தனர். மேலும் ஓம் நம சிவாய என கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த தகவல், சுற்று வட்டார பகுதிகளில் வேகமாக பரவியது. இந்த நிகழ்வை பக்தர்கள் சிலர் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த அரிய காட்சியை கண்டு பக்தர்கள் பரவசத்தில் மூழ்கினர்.

    பின்னர் சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சிவாலயம் கட்ட வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்தாலே போதும்.
    • சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்தால் பாவங்கள் விலகும்.

    ஆலயங்களைப் பற்றி, அகத்தியர் அருளிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    * தன் வாழ்நாளில் ஒரு சிவாலயத்தை கட்டுபவன், தினந்தோறும் சிவபெருமானை பூஜித்த பலனை பெறுவான். அதோடு அவன் குலத்தில் பிறந்த சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வர்.

    * ஒருவன் சிவாலயம் கட்ட வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்தாலே போதும். அவன் ஏழு ஜென் மங்களில் செய்த பாவங்களில் இருந்து விடுபடுவான். நினைத்ததுபோலவே சிவாலயம் கட்டி முடித்தால், சகலவிதமான போகங்களும் அவனை வந்தடையும்.

    * கருங்கற்களைக் கொண்டு ஆலயம் எழுப்புபவர். ஒவ்வொரு கற்களுக்கும் ஒவ்வொரு ஆயிரம் வருடம் என. சிவலோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவான்.

    * ஒருவரைக் கொண்டு சிவலிங்கத்தை செய்விப்பவனுக்கு. சிவலோகத்தில் 60 ஆயிரம் வருடம் தங்கியிருக்கும் பாக்கியம் கிடைக்கும். அவனது வம்சத்தவர்களும் சிவலோகத்தை அடையும் புண்ணியம் பெறு வர்.

    * சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று நினைப்பவர், தன்னுடைய எட்டு தலைமுறை முன்னோர்களை, சிவலோகம் அடையச் செய்வார். அப்படி ஒருவரால் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய முடியாவிட்டாலும், பிறர் செய்வதைக் கண்டு, 'நாமும் இதுபோல் செய்தால் நற்கதி அடையலாமே என்று நினைத்தாலே போதும். அவருக்கு முக்தி நிச்சயம்.

    * எந்த நேரமும் சிவபெருமானையே மனத்தால் தியானித்து வருபவர்கள், ஈசனை மலர்களால் அர்ச்சிப்பவர்கள், சிதிலமாகிக் கிடக்கும் சிவாலயத்தைப் புதுப்பித்து நித்திய வழிபாடுகளைச் செய்விப்பவர்கள். காலையும் மாலையும் ஆலயத்தைப் பெருக்கி சுத்தம் செய்பவர்கள், சிவாலயத்தை நிர்மாணிப்பவர்கள், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவர்கள் ஆகியோரிடம் எமதர்மன் நெருங்க மாட்டார்.


    * சிவாலயம் சென்று இறைவனுக்கு தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பூஜிப்பவன். ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைவான்.

    * தேய்பிறை சதுர்த்தசியில் சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்தால், அதுவரை செய்த பாவங்கள் விலகும்.

    * பவுர்ணமி, அமாவாசை தினங்களில் சிவலிங்கத்துக்கு, அபிஷேகம் செய்து பூஜிப்பவன் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுவான்.

    • மேக கூட்டங்கள் சிவப்பு நிறங்களில் காட்சி அளித்தது.
    • பொதுமக்கள் பலர் பக்தி பரவசம் அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் காலை 6 மணிக்கு சூரிய உதயம் ஆரம்பித்து பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் மறைகிறது. இதனால் சுமார் 7 மணி வரை வெளிச்சம் இருந்து கொண்டே உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் ஈரோடு மாவட்ட பகுதிகளில் சூரியன் மறையும் போது மேக கூட்டங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளித்தது.

    ஒரு சில இடங்களில் சூரியன் மறையும் நேரத்தில் மேக கூட்டங்கள் சிவப்பு நிறம் மற்றும் பல்வேறு நிறங்களில் காட்சி அளித்தது.

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஊராட்சி கோட்டை மலைப்பகுதியில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து மேக கூட்டங்களில் சிவலிங்கம் தோன்றுவது போன்று காட்சியளித்தது.

    நேரம் செல்ல, செல்ல சிவப்பு நிறத்தின் நடுவே சிவலிங்கம் இருப்பது போல் தனியாக தோன்றியது. இதனை கண்ட பொதுமக்கள் பலர் பக்தி பரவசம் அடைந்தனர். வானில் சிவபெருமான் தோன்றி காட்சி அளித்து வருகிறார் என ஒருவருக்கொருவர் பேசி கொண்டனர்.

    இந்த காட்சியை அந்த பகுதியில் உள்ளவர்கள் செல்போனில் படம் பிடித்து கொண்டனர். மேக மூட்டங்களில் சிவலிங்கம் தோன்றிய காட்சியை அந்த பகுதிகளில் உள்ள மக்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

    இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் வெவ்வேறு பகுதிகளில் இருந்தவர்கள் அந்த படத்தை பார்த்து சிவன் நேரில் தோன்றியது போன்றே காட்சியளிக்கிறது.

    மேலும் பனிலிங்கத்தை காண்பது போன்று காட்சியும் மனதில் தோன்றுகிறது என ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • மேலே ஒரு அன்னமும், கீழே ஒரு பன்றியும் செதுக்கியிருப்பார்கள்.
    • அன்னம் பிரம்மாவாகவும், வராகம் (பன்றி) விஷ்ணுவாகவும் கருதப்படுகிறது.

    சிவாலயங்களில் கோஷ்டத்தின் பின்புற சுவரில் லிங்கோத்பவரைக் காணலாம்.

    இவரது பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் புதைந்திருக்கும்.

    மேலே ஒரு அன்னமும், கீழே ஒரு பன்றியும் செதுக்கியிருப்பார்கள்.

    அன்னம் பிரம்மாவாகவும், வராகம் (பன்றி) விஷ்ணுவாகவும் கருதப்படுகிறது.

    இவர்கள் சிவனின் அடிமுடியைக் காண போட்டியிட்டதாக ஒரு புராணக்கதை உண்டு.

    உண்மையில் இதன் தத்துவம் என்ன தெரியுமா?

    சிவன் லிங்க வடிவமாக உள்ளார்.

    லிங்கம் என்பது நீள் வட்ட வடிவமுடையது. சதுரம், செவ்வகம், முக்கோணம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஆரம்ப இடமும், முடியும் இடமும் உண்டு.

    ஆனால், வட்டத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை.

    சிவனும் ஆதிஅந்தம் இல்லாதவர் என்பதை இந்த வடிவம் காட்டுகிறது.

    ஆனால், இந்த வடிவம் மனதில் நிற்காது என்பதற்காக ஒரு திட்டம் வகுக்கப்பட்டது.

    ஊரில் இருக்கும் மகனிடமோ மகளிடமோ போனில் பேசினால் திருப்தி இருக்காது.

    நேரில் பார்த்தால் தான் மனம் திருப்தியடையும். அதுபோல, சிவனை நேரில் பார்த்த திருப்தி பெற, அவரது உருவத்தை நீள்வட்ட லிங்கத்துக்குள் நிறுத்தி, தலையும், திருவடியும் புதைந்திருப்பது போல் காட்டி, அவர் ஆதி அந்தமில்லாதவர் என்ற தத்துவம் மாறாமல் உருவம் கொடுத்தனர்.

    • தெய்வீக லிங்கம்:- திருமால், இந்திரன், அயன் ஆகிய தேவர் பெருமக்களால் நிறுவப்பட்டது.
    • மானுடலிங்கம்:- மனுவம்ச மன்னர்கள் பரசுராமர், ராமர் முதலியோர்களால் நிறுவப்பட்டது.

    சிவலிங்கத் திருமேனிகள் அமையும் விதம் குறித்து சிவாகம நூல்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

    பார்த்த லிங்கம்:- ஈஸ்வரன் மகா சமசார காலம் வரை சந்நிதியில் இருந்து ஆன்மாக்களுக்கு அருள்வது பார்த்த லிங்கமாகும். இது ஸ்திரலிங்கம் என்றும் பெயர் பெறுகிறது.

    சுயம்பு லிங்கம்:- தானே தோன்றுவது. சிறப்புடைய லிங்க வகை. எங்கும் எதிலிருந்தும் வெளிப்படும் அருவுருவ வடிவானது. காணலிங்கம், விநாயகர், வைரவர், வீரபத்திரர் ஆகிய சிவகணாதிபர்களால் ஸ்தாபனம் செய்யப்பட்டது.

    தெய்வீக லிங்கம்:- திருமால், இந்திரன், அயன் ஆகிய தேவர் பெருமக்களால் நிறுவப்பட்டது.

    ஆரிட லிங்கம்:- அகத்தியர், புலஸ்தியர், நாதரதர், அத்திரி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், காசிபர், வாமதேவர், பிருகு போன்ற மகரிஷிகள் முனிவர்களால் நிறுவப்பட்டது.

    மானுடலிங்கம்:- மனுவம்ச மன்னர்கள் பரசுராமர், ராமர் முதலியோர்களால் நிறுவப்பட்டது.

    கணிக லிங்கம்:- ஒரு தடவை மட்டுமே பூஜை செய்த உடன் கரைத்து விடப்படுகிற இவ்வகை சிவலிங்கங்கள் மண், அரிசி, கோமியம், ஆற்று மணல், அன்னம், வெண்னை, ருத்ராட்சம், சந்தனம், தர்ப்¬ப,

    புஷ்பமாலை, சர்க்கரை, அரிசி மாவு ஆகிய 12 பொருட்களுடன் மூன்றை சேர்த்து செய்வது.

    • ஓம் நமசிவாய ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும்.
    • இரவில் கோவிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும்.

    சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும்.

    சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும்.

    இயலாதவர்கள் இருவேளை பால்,பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம்.

    ஓம் நமசிவாய ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும்.

    இரவில் கோவிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும்.

    உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும்.

    சிவனுக்கு அபிஷேகம் செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, சிவ பெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது.

    அதனை ஞானப்பாலாக்கி எமக்கு அருள வேண்டும். அறியாமல் செய்த பாவங் களைப் போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும், என்று பிரார்த்திக்க வேண்டும்.

    மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்.

    அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும்.

    • “சிவராத்திரி என்ற உடனே இது ஆண்களுக்கான விரதம் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது.
    • பார்வதியே, சிவனை நினைத்து 4 ஜாமங்களிலும் பூஜை செய்த தினம். அதனால் பெண்கள் அவசியம் விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும்.

    "சிவராத்திரி என்ற உடனே இது ஆண்களுக்கான விரதம் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது.

    பார்வதியே, சிவனை நினைத்து 4 ஜாமங்களிலும் பூஜை செய்த தினம். அதனால் பெண்கள் அவசியம் விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும்.

    திருமணமான பெண்கள் தன்னோட கணவன் மற்றும் பிள்ளைகள் நலனுக்காகவும் திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    சிவராத்திரியன்று விரதமிருந் தால் புத்தி முக்தி கிடைக்கும், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்.

    கோடி பாவங்களும் தீரும், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

    சிவராத்திரியன்று விரதம் இருந்து தான் பிரம்மா சரஸ்வதியைப் பெற்றதுடன் உலக உயிர்களைப் படைக்கும் பதவியை அடைந்தார்.

    மகாவிஷ்ணு விரதமிருந்து சக்ராயுதம் பெற்றதுடன் மகாலட்சுமியையும் உலக உயிர்களைக் காக்கும் உன்னதப் பதவியையும் அடைந்தார்.

    வழிபாடு பலன்கள்

    அபிஷேகம் - பாவம் அகலும்,

    பீட பூஜை - சாம்ராஜ்யம் கிடைக்கும்,

    கந்தம்-சகல சவுபாக்கியத்தையும் அளிக்கும்,

    புஷ்பம்-அமைதியும், செழுமையும் தரும்,

    தூபம்-நல்ல வாசனை தரும்,

    தீபம் - உடல் நலம் தரும்,

    நைவேத்தியம்-மகாபோகத்தைத் தரும்,

    தாம்பூலம்- லட்சுமி கடாட்சத்தைத் தரும்,

    நமஸ்காரம்-வாக்கு சாதூர்யம் தரும்,

    ஜபம் - அஷ்ட ஐஸ்வர்யம் தரும்,

    ஹோமம்-செல்வம் தரும்,

    அன்னதானம்-திருப்தியான வாழ்வு அமையும்.

    • மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும்.
    • முதல் ஜாமத்தில் பஞ்ச கவ்விய அபிஷேகமும், பொங்கல் நிவேதனமும் செய்து வில்வத்தினால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும்.

    முதல் ஜாமத்தில் பஞ்ச கவ்விய அபிஷேகமும், பொங்கல் நிவேதனமும் செய்து வில்வத்தினால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    இரண்டாம் ஜாமத்தில் பஞ்சாமிர்த அபிஷேகமும், பாயச நிவேதனமும் செய்து தாமரை மலரால் அர்ச்சிக்க வேண்டும்.

    மூன்றாம் ஜாமத்தில் தேன் அபிஷேகமும், நெய்யும் மாவும் கலந்து நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நான்காம் ஜாமத்தில் கரும்புச்சாறு அபிஷேகமும், வெண் பொங்கல் நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.

    • தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் அத்தகைய தொடர் ஓட்டம் இடம் பெறுகிறது.
    • சிவராத்திரிக்கு முதல் நாளும், சிவராத்திரி அன்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் பன்னிரண்டு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர்.

    தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் அத்தகைய தொடர் ஓட்டம் இடம் பெறுகிறது.

    சிவராத்திரிக்கு முதல் நாளும், சிவராத்திரி அன்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் தொடர் ஓட்டமாகச் சென்று பன்னிரண்டு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர்.

    அத்தலங்கள் விவரம் வருமாறு:

    1. திருமலை

    2. திருக்குறிச்சி

    3. திற்பரப்பு

    4. திருநந்திக்கரை

    5. பொன்மலை

    6. பன்னிப்பாக்கம்

    7. கல்குளம்

    8. மேலங்கோடு

    9. திருவிடைக்கோடு

    10. திருவிதாங்கோடு

    11. திருப்பன்றிக்கோடு

    12. திருநட்டாலம்

    • எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.
    • வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.

    மகாசிவராத்திரி வழி பாட்டில் ஆறு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

    1. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப் படுத்துதலைக் குறிக்கும்.

    2. லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.

    3. உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.

    4. தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.

    5. எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.

    6. வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.

    இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோவிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.

    ×