என் மலர்
நீங்கள் தேடியது "பட்டுக்கோட்டை"
- வாயு மூலையில் சிவனும், அக்னி மூலையில் எமனும் காட்சியளிக்கிறார்கள்.
- ஒவ்வொரு நாளும் எமகண்ட நேரத்தில் எமதர்மனுக்கு பூஜைகள் நடக்கும்.
கோவில் தோற்றம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது, திருச்சிற்றம்பலம் கிராமம். இங்கு எமதர்ம ராஜா ஆலயம் உள்ளது. ஆறடி உயர எருமை வாகனத்தின் மீது முறுக்கிய மீசையுடன், பாசக்கயிறு, ஓலைச்சுவடி மற்றும் கதையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் எமதர்ம ராஜா.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவர்தான், இப்பகுதி மக்களுக்கு இஷ்ட தெய்வம். சாதாரண மண் கட்டிடமாக இருந்த இந்த ஆலயம், தற்போது பலதரப்பட்ட மக்களின் உதவியோடு, மிகச் சிறப்பான முறையில் கல் கட்டிடமாக எடுத்துக் கட்டப்பட்டுள்ளது.
தல வரலாறு
அன்னை பார்வதி தேவி ஒரு முறை செய்த தவறுக்கு பரிகாரமாக பூலோகம் செல்ல வேண்டிய நிலை வந்தது. பிரகதாம்பாள் என்ற பெயர் பெற்ற சிறு குழந்தையாக பூலோகம் வந்த அன்னையை வளர்க்கும்படி எமதர்ம ராஜாவுக்கு கட்டளையிட்டார், சிவபெருமான்.
பிரகதாம்பாள் வளர்ந்து பெரியவள் ஆனதும், தனக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்ற நிபந்தனை எமதர்மனுக்கு ஈசனால் விதிக்கப்பட்டது. அதன்படியே அன்னையை வளர்த்து வந்தார், எமதர்மராஜா.
இந்த நிலையில் பருவ வயதை எட்டிய பிரகதாம்பாளை, சிவபெருமானுக்கு மணம் முடித்து வைக்க தேவர்களும், முனிவர்களும் முடிவு செய்தனர். ஆனால் சிவபெருமானோ நீண்ட தியானத்தில் இருந்தார். அவரை எப்படி தியானத்தில் இருந்து மீளச் செய்வது என்று அனைவரும் ஆலோசித்தனர்.
சாதாரணமாக போய் அவரது தியானத்தை கலைத்தால், அதற்கான தண்டனையை அனுபவித்தாக வேண்டும் என்று தேவர்களுக்குத் தெரியும். எனவே மன்மதனை அழைத்து, சிவபெருமானின் மீது மலர் கணையை தொடுக்கும்படி தேவர்கள் வற்புறுத்தினர்.
அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்ட மன்மதனும், திருச்சிற்றம்பலத்திற்கு மிக அருகில் உள்ள மன்மதனின் ஊரான மதமட்டூரில் இருந்து சிவபெருமானின் மீது பூங்கணை தொடுக்கிறார். தியானம் கலைந்ததால் கடும் கோபத்துடன் கண் விழித்த சிவபெருமான், தன் நெற்றிக்கண் பார்வையால் மன்மதனை அழித்தார்.
இதனால் பதறிப்போன ரதிதேவி, மன்மதனை உயிர்ப்பிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினாள். ஆனால், "மாண்டவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. வேண்டுமானால் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் மன்மதனுக்குத் திருவிழா நடைபெறும்போது, ரதியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரிவான்" என்று கூறி அருளினார் சிவபெருமான்.
மன்மதனின் உயிரைப் பறிக்க, மேலோகத்தில் இருந்து பூலோகத்தில் எமதர்மராஜா வந்திறங்கிய இடம்தான் திருச்சிற்றம்பலம். அதன் காரணமாகவே இங்கே எமதர்மனுக்கு கோவில் அமைத்து வழிபடும் முறை வழக்கத்தில் வந்ததாக சொல்லப்படுகிறது.
வாயு மூலையில் சிவனும், அக்னி மூலையில் எமனும் காட்சியளிக்கிறார்கள். கோவில் அருகே எம தீர்த்த குளம் உள்ளது. இங்குள்ள குளத்தில் பெண்கள் யாரும் நீராடுவது கிடையாது. துக்க நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்துகொண்ட ஆண்களும் இந்தக் குளத்தில் நீராடுவது கிடையாது.
கோவிலின் சிறப்புகள்
ஒவ்வொரு நாளும் எமகண்ட நேரத்தில், இத்தல எமதர்மனுக்கு பூஜைகள் நடக்கும். அந்த நேரத்தில் எமனை ஒரு நீதிபதியைப் போல்தான் பாவிக்க வேண்டும். திருமணம், வளைகாப்பு போன்ற மங்கல நிகழ்வுகளின் பத்திரிகைகளை, எமதர்மனின் காலடியில் வைத்து வழிபடும் வழக்கம் நெடுங்காலமாக இருக்கிறது.
பணத்தை வாங்கிக்கொண்டு யாரேனும் ஏமாற்றி இருந்தால் அவர்களின் பெயரை ஒரு தாளில் எழுதி, அதைப் பூஜித்து சூலத்தில் கட்டி விடும் வழக்கமும் இங்கே உண்டு. இதற்குப் 'படி கட்டுதல்' என்று பெயர். படி கட்டிய சில நாட்களிலேயே பணம் பலருக்குத் திரும்பக் கிடைத்துள்ளதாம்.
எமபயத்தை போக்கிக்கொள்ளவும், ஆயுளை நீட்டித்துக் கொள்ளவும், திருமணத் தடை நீங்கவும் பலர் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். அது மட்டுமின்றி, நவக்கிரக தோஷம், பெண்பாவ தோஷம், நட்சத்திர தோஷம், ராசி அதிபதி தோஷம் போன்றவற்றிற்கும் பரிகார தெய்வமாக இவ்வாலயத்தில் அருளும் எமதர்மராஜா விளங்குகிறார்.
நாளுக்கு நாள் இந்தக் கோவிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. வருடம்தோறும் ஆடி மாதத்தில் திருவிழாவும், மாசி மாதத்தில் மன்மதன் திருவிழாவும் நடக்கும்.
எமதர்ம மகாராஜாவை சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களைத் தரும் என்கிறார்கள். இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது, திருச்சிற்றம்பலம்.
- பழைய கால நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.
- சிறுவர், சிறுமிகளுக்கான கயிறு இழுத்தல் போட்டியும் நடந்தது.
பட்டுக்கோட்டை:
நமது பழமையான பள்ளிப்பருவ விளையாட்டுக்களை தற்போதுள்ள சிறுவர், சிறுமியர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாகவும், புதுப்பிக்கும் ஒரு முயற்சியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஆர்.வி. நகர் பகுதியில் கல்வியாளர்கள் ஒருங்கிணைப்புடன் சிறுவர், சிறுமியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர்.
இதில் பரமபதம், தாயம், பல்லாங்குழி, கிச்சுகிச்சு தாம்பலம், நொண்டி, நொங்கு வண்டி ஓட்டுதல், டயர் வண்டி ஓட்டுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளையும் சிறுவர், சிறுமியர்கள் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகளுக்கான கயிறு இழுத்தல் போட்டியும் நடந்தது.
அதனைத் தொடர்ந்து சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்களும் தன்னார்வமாக நொங்கு வண்டி ஓட்டியும், டயர் வண்டி ஓட்டியும் பம்பரம் விளையாடியும் அவர்களது பழைய கால நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து சிறுவர், சிறுமியர்களின் பெற்றோர்களுக்கு கயிறு இழுத்தல் போட்டியும் நடந்தது. இது குறித்து சிறுமியர்கள் கூறுகையில், நாங்கள் விளையாட்டு என்றால் செல்போனிலும், டி.வியிவிலும் கேம் விளையாடிக் கொண்டிருப்போம். நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. இன்றைய தினம் பாரம்பரிய விளையாட்டுக்களை நாங்கள் மற்ற சிறுவர், சிறுமிகளுடன் இணைந்து விளையாடியது எங்களுக்கு ஜாலியாக இருக்கிறது. நாங்கள் மிகவும் சந்தோசமாக உள்ளோம்.
அம்மா அடிக்கடி வெளியில் சென்று ஓடியாடி விளையாட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு வாய்பே இல்லாமல் இருந்தது. தற்போது நாங்கள் மற்ற சிறுவர், சிறுமிகளுடன் இணைந்து ஓடியாடி விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் இந்த அதிரடி ஆய்வால் பட்டுக்கோட்டை நகர கடை வீதிகள் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- ஒரு டீக்கடை ஆகிய 4 கடைகளுக்கு மொத்தம் ரூபாய் 6,000 அபராதம் விதித்ததுடன் எச்சரிக்கை நோட்டீஸ்ம் வழங்கினர்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சுப்பையா பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சக்திகாந்த். சமூக ஆர்வலர். இவரது மகன் ஜெய்குரு (வயது 14). அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார்.
இந்நிலையில் ஜெய்குரு பட்டுக்கோட்டை பெரிய தெருவில் உள்ள முருகையா ஓட்டலுக்கு சாப்பாடு வாங்குவதற்காக பாத்திரங்களும் எடுத்துச் சென்று ஒரு சாப்பாடு டோக்கன் வாங்கிக் கொண்டு ஓட்டல் பார்சல் கட்டுமிடத்திற்கு சென்று சாப்பாடு கேட்டுள்ளார் .
ஓட்டல் ஊழியர் பாத்திரத்தில் சாப்பாடு தரமாட்டோம். பிளாஸ்டிக் பைகளில் தான் தருவோம் என்று கூறினார்.
அதற்கு சிறுவன் ஜெய்குரு பிளாஸ்டிக் பைகளில் வாங்கிச் சென்று சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று கூறியுள்ளார். உடனே ஓட்டல் கேஷியர் சிறுவனிடமிருந்து டோக்கனை திரும்பி வாங்கிக் கொண்டு சாப்பாடு தரமறுத்து சிறுவனை திருப்பி அனுப்பிவிட்டார்.
இதையடுத்து சிறுவன் ஜெய்குரு வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தரணிகாவிடம் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும், சம்மந்தப்பட்ட ஹோட்டல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
14 வயதுள்ள ஒரு பள்ளி மாணவன் கொடுத்த புகாரினைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை நகரம் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகிலிருந்து புறப்பட்டு பெரிய தெருவில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி, டீக்கடை, பழக்கடைகளுக்கு சென்று அதிரடியாக ஆய்வு நடத்தினர்.
அப்போது பார்சல் உணவை பாத்திரத்தில் தர மறுத்த ஓட்டலுக்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஒட்டல் கேஷியரிடம் பாத்திரத்தில் சாப்பாடு கேட்டால் நீங்கள் கொடுக்க வேண்டியது தானே. பார்சலுக்கு என்ன அளவு கொடுப்பீர்களோ அந்த அளவுதானே பாத்திரத்தில் கொடுக்கப் போகிறீர்கள்.
பாத்திரத்தில் சாப்பாடு கேட்டால் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று ஓட்டல் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தும் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து அதே தெருவில் உள்ள மற்ற ஓட்டல்களில் உள்ள சமையல் அறைக்கு சென்று ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சமையல் அறையில் பணிபுரியும் ஊழியர்கள் தலையில் கேப் அணிந்தும், கைகளில் கிளவுஸ் மாட்டிக் கொள்ள வேண்டும். தயார் செய்து வைத்துள்ள உணவுகளை எப்போதும் இலையைப் போட்டு மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பழக்கடைகள், டீக்கடைகள் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பூஞ்சானம் பிடித்து சாப்பிட தகுதியற்ற 5 கிலோ கேக்குகளை எடுத்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டு அழித்தனர். அதேபோல் 3 கிலோ அழுகிய பழங்களையும் அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டு அழித்தனர்.
இந்த அதிரடி ஆய்வில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஓட்டல் மற்றும் ஒரு பேக்கரி, ஒரு பழக்கடை, ஒரு டீக்கடை ஆகிய 4 கடைகளுக்கு மொத்தம் ரூபாய் 6,000 அபராதம் விதித்ததுடன் எச்சரிக்கை நோட்டீஸ்ம் வழங்கினர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் இந்த அதிரடி ஆய்வால் பட்டுக்கோட்டை நகர கடை வீதிகள் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- வேறு எங்காவது ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:,
தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் அருகே கண்டியங்காடு பிள்ளையார் கோவில் அருகில் ஒரு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அதில் 120 கிலோ ரேஷன் அரிசி, 500 கிலோ குருணை மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியவர் அருகே உள்ள மதுக்கூர் அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 46) என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து செந்தில்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் அவர் பதுக்கிய 620 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து வேறு எங்காவது ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு ள்ளதா? என சோதனை நடத்தி வருகின்றனர்.
- எனவே எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.
- கூட்டத்திற்கு தஞ்சை கூடுதல் கலெக்டர் தலைமை தாங்குகிறார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
பட்டுக்கோட்டை கோட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணிக்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது.
கூட்டத்திற்கு தஞ்சை கூடுதல் கலெக்டர் தலைமை தாங்குகிறார்.
பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டங்களில் உள்ள எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர், எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் கால தாமதம், அரசு மானியம் நுகர்வோர் வங்கி கணக்கில் வரவு வைத்தல் போன்றவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்து வரும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, எரிவாயு சிலிண்டர் வினியோகத்தை சீர்படுத்த இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பட்டுக்கோட்டையில் நகராட்சி அலுவலகம் அருகே விஸ்வநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
- இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அலுவலகம் அமைத்து உள்ளதாகவும், உடனடியாக கோவில் இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரான பக்கிரிசாமியின் பெயரில் கட்சியின் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டையில் நகராட்சி அலுவலகம் அருகே விஸ்வநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான காசாங்குளம் கீழ்கரையில் உள்ள கோவிலுக்குச் சொந்தமான புல எண் 20/ஏ1, குடியிருப்பு மனை பிரிவின்கீழ் வரும் இடத்தில் 4 ஆயிரத்து 420 சதுர அடி இடத்தினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்காக ஆக்கிரமிப்பு செய்துள்ள பக்கிரிசாமி என்பவரை சட்டப்பிரிவு 78-ன் கீழ் ஆக்கிரமிப்பாளர்களாக கருதி அந்த இடத்திலிருந்து வெளியேற்றம் செய்ய இந்து சமய அறநிலையத்துறையின் தஞ்சை மாவட்ட இணை ஆணையர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதன் நகல் அலுவலக வாயிலில் ஒட்டப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு: ஆக்கிரமிப்பு அகற்றுதல் இந்து சமயஅறநிலையச் சட்டம் 1959 - சட்டப்பிரிவு 78,79.68ன் கீழ் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி அந்த இடத்தை கோவில் நிர்வாகத்தின் சுய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது தொடர்பாகவும். நோட்டீஸில் அறிவித்துள்ளபடி கோவிலுக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ள பக்கிரிசாமி என்பவர் 23.8.22அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ காலி செய்து கோவில் செயல் அலுவலர் வசம் இடத்தினை ஒப்படைக்க வேண்டுமென சட்டப்பிரிவு 78 (4) -ன் கீழ் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தவறினால் 24.8.22 அன்று காவல்துறை ஒத்து ழைப்புடன் சட்டப்பி ரிவு 79 (1) -ன் கீழ் வெளியேற்றம் செய்து கோவில் சுவாதீனத்திற்கு கொண்டுவர நேரிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரோட்டரி சங்கங்கள் மற்றும் சைக்கிள் அசோசியேசன் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் ரோட்டரி சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை:
சர்வதேச செஸ் ஒலிம்பி யாட் போட்டிகள் வருகிற ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில் அதனை கொண்டாடும் வகையில் பொதுமக்களிடம்செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ரோட்டரி சங்கங்கள் மற்றும் சைக்கிள் அசோசியேசன் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணி பட்டுக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து தொடங்கி பெரிய கடை தெரு வழியாக மணிகூண்டு சென்றடைந்தது. பேரணியில் சிறுவர்கள் சிறுமிகள் சிலம்பங்களை சுற்றிக்கொன்றே சென்றனர். இதில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் ரோட்டரி சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- இந்நிலையில்புதிதாக உருவாக உள்ள திருவோணம் தாலுகாவில் நம்பி வயல் கிராமத்தை சேர்ப்பதாக தமிழகஅரசு அறிவிப்பு வெளியானது.
- இதுபோன்று பல்வேறு துறைகள் பட்டுக்கோட்டை பகுதியை சார்ந்தே அமைந்துள்ன.
பட்டுக்கோட்டை:
புதிதாக துவங்கப்பட உள்ள திருவோணம் தாலுகாவில் நம்பிவயல்கிராமத்தை இணைப்பதை எதிர்த்து நம்பிவயல் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நம்பிவயல் கிராமத்தின் மொத்த பரப்பளவு 881 ஹெக்டர், கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 2500 பேர், விவசாய பரப்பளவு 650 ஹெக்டர், நம்பிவயலின் இரண்டு பக்கத்திலும் சரியாக பத்து கிலோமீட்டர் தொலைவில் பட்டுக்கோட்டை மற்றும் திருவோணம் எதிரெதிர் திசையில் இருக்கிறது. நம்பிவயல் பிரசிடெண்ட் ஊராட்சி மன்ற தலைவராக கல்யாண சுந்தரம் என்பவர் இருக்கிறார்.
இந்நிலையில்புதிதாக உருவாக உள்ள திருவோ ணம் தாலுகாவில் நம்பி வயல் கிராமத்தை சேர்ப்பதாக தமிழகஅரசு அறிவிப்பு வெளியானது. அதனடிப்படையில் திருவோணத்துடன் சேர்த்தால் தங்கள் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என போராட்டக்காரர்கள் கூறினர். இந்த நம்பிவயல் கிராமத்தின் எம்எல்ஏ பேராவூரணி தொகுதியை சேர்ந்தவர்.
ஊராட்சி ஒன்றியமோ பட்டுக்கோட்டையை சேர்ந்தது, வட்டாட்சியர் அலுவலகம், பட்டுக்கோ ட்டையிலும்காவல் நிலையமோ, திருவோணத்தி லும், இருக்கிறது. அதேபோல் கோட்டாட்சியர் அலுவலகம், பத்திர பதிவுத்துறை பட்டுக்கோட்டையிலும், மின்வாரிய அலுவலகம், கலியராயன் விடுதியிலும், வேளாண்மைத் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பட்டுக்கோ ட்டையிலும் இருக்கிறது.
இதுபோன்று பல்வேறு துறைகள் பட்டுக்கோட்டை பகுதியை சார்ந்தே அமைந்துள்ன. இந்நிலையில் புதிதாக உருவாக உள்ள திருவோணம் தாலுக்காவில் நம்பிவயல் கிராமத்தை சேர்ப்பதை எதிர்த்து பட்டுக்கோட்டை - திருச்சி சாலையில் இன்று காலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், ஒரத்தநாடு டி.எஸ்.பி பிரவீன், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ பிரபாகர் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சகோதரரான ரவிசந்திரன் மகன் வீரசிங்கத்திற்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
- இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலயே தேவேந்திரன் இறந்தார்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் மாவட்டம் பட்டுக்கோட்டை கண்டியன் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 75).
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சகோதரரான ரவிசந்திரன் மகன் வீரசிங்கத்திற்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் மின்சார வாரியத்திற்கு பணம் கட்டாதால் வீரசிங்கம் வீட்டிற்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொட ர்பாக வீரசிங்கத்திற்கும், தேவேந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வீரசிங்கம் கடப்பாறையால் தேவேந்திரனை தாக்கி விட்டு தப்பி ஓடினார். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலயே தேவேந்திரன் இறந்தார்.இது பற்றி தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தேவேந்தி ரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகமருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரசிங்கத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 46). இவர் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையம் எதிரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது மகன் பிளஸ்-2 தேர்வில் 1005 மதிப்பெண் எடுத்ததை அறிந்து இனிப்பு வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றார். அப்போது தனது வீட்டில் இருந்த செல்போன் விளம்பரபோர்டு சாய்ந்து இருந்ததால் அதனை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாரத விதமாக அவர் மீது உயர்அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடம் சென்று மின் இணைப்பை துண்டித்து அடைக்கலத்தின் உடலை மீட்டனர். இதுபற்றி பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகன் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதை கொண்டாட இனிப்பு வாங்கி சென்ற தந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.