என் மலர்
நீங்கள் தேடியது "பிளிப்கார்ட்"
- கணவர்கள் சோம்பேறிகள், திறனற்றவர்கள், முட்டாள்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது
- அந்த வீடியோ பிக் பில்லியன் டேஸ் ப்ரோமோஷனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சிறப்பு தள்ளுபடி நாட்களை அறிவித்து நடத்துவது வழக்கம். அவ்வாறு பிக் பில்லியன் டேஸ் சேல் என்ற தள்ளுபடி ஆஃபர் வாரத்தை அறிவித்துள்ளது. இந்த பிக் பில்லியன் டேஸ் ஆஃபர் நேற்று தொடங்கிய நிலையில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வரை இருக்கும்.
இந்நிலையில் இந்த பிக் பில்லியன் டேஸ் வியாபாரத்துக்கு பிளிப்கார்ட் வெளியிட்டுள்ள ப்ரோமோஷனல் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த அனிமேஷன் வீடியோவில் கணவர்கள் சோம்பேறிகள், துரதிஷ்டம்பிடித்தவர்கள், முட்டாள்கள் என்று சித்தரித்துள்ளதே சர்ச்சைக்குக் கரணம்.
கணவர்களுக்குத் தெரியாமல் மனைவிகள் எப்படி ரகசியமாக ஹேண்ட் பேக் - களை வாங்குகின்றனர் என்பது தொடர்பாக அந்த வீடியோ பிக் பில்லியன் டேஸ் ப்ரோமோஷனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டங்கள் எடுத்தது. ஆண்கள் நலச் சங்கமும் கண்டனங்களை தெரிவித்தது. இதனையடுத்து அந்த வீடியோவை நீக்கி பிளிப்கார்ட் நிறுவனம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டுள்ளது.
So @Flipkart deleted this misandrist post. But what was the logic behind even posting such toxic video addressing a Husband as Aalsi, Kambakkht and Bewakoof Pati. They must apologise for this and hope they will not repeat it. Misandry will Not be Tolerated Anymore. https://t.co/GwiEzgdMEH pic.twitter.com/fLf8KywE0e
— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) September 23, 2024
- தனக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில், ஸ்மார்ட்போனுக்கு பதிலாக கற்கள் நிரம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- பார்சலை திருப்பி கொடுக்க முயன்றபோது சம்பந்தப்பட்ட நிறுவனம் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் கடந்த 28-ந்தேதி பிளிப்காட்டில் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்துள்ளார். அன்றைய தினமே அவருக்கு ஆர்டர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அவர் தனக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில், ஸ்மார்ட்போனுக்கு பதிலாக கற்கள் நிரம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அந்த பார்சலை திருப்பி கொடுக்க முயன்றபோது சம்பந்தப்பட்ட நிறுவனம் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் எக்ஸ் தளத்தில் ஸ்மார்ட்போன் அட்டையுடன் கூடிய பெட்டியையும், அதில் ஸ்மார்ட்போனுக்கு பதிலாக கற்கள் இருந்த புகைப்படத்தையும் பதிவிட்டார்.
அவரது இந்த பதிவு வைரலாகியது. இதைத்தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனம் அவருக்கு பதிலளித்தது. அதில் நீங்கள் ஆர்டர் செய்ததை தவிர வேறு எதையும் அனுப்புவதற்கு நாங்கள் விரும்ப மாட்டோம். இந்த நிகழ்வுக்காக மிகவும் வருந்துகிறோம். உங்களுக்கு மேலும் உதவி செய்ய தயவு செய்து உங்கள் ஆர்டர் விபரங்களை வழங்கவும் என தெரிவித்துள்ளது.
A #Ghaziabad resident claims he ordered Mobile phone worth Rs22,000 through @Flipkart but instead received stones! Victim claims courier refuses to take back the parcel. So much so for #onlineshopping #onlinefraud @_Kalyan_K #India #mobilephone #infinix @InfinixIndia pic.twitter.com/OkfnMRQ7ma
— AbhishekPatni (@Abhishek_Patni) March 29, 2024
- சேவை மையத்தை மீண்டும் அணுகிய போது அங்கிருந்த ஊழியர்கள், எங்களிடம் ரிட்டர்ன் பாலிசி இல்லை என கைவிரித்துள்ளனர்.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பிளிப்கார்ட்டின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சமீபகாலமாக பெரும்பாலான பொருட்களை ஆன்-லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்குபவர்கள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவரான அதர்வா கண்டேல்வால் என்பவர் பிளிப்கார்ட்டில் ரூ.76 ஆயிரம் மதிப்புள்ள லேப்-டாப் ஆர்டர் செய்திருந்தார். கடந்த 13-ந் தேதி டெலிவரி செய்யப்பட வேண்டிய அந்த ஆர்டர் 15-ந் தேதி வந்துள்ளது. உடனே மாணவர் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சேவை மையத்தை அணுகிய போது அவரது செல்போனுக்கு ஒரு ஓ.டி.பி. எண் வரும் என கூறி உள்ளனர். அதன்படி அந்த எண்ணை கொடுத்து டெலிவரி பெற்றுக் கொண்ட மாணவர் அதர்வா தனது ஆர்டரை திறந்து பார்த்த போது அதில் லேப்-டாப்புக்கு பதில் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள ஸ்பீக்கர்கள் மட்டும் இருந்துள்ளது.
இதுதொடர்பாக அவர் சேவை மையத்தை மீண்டும் அணுகிய போது அங்கிருந்த ஊழியர்கள், எங்களிடம் ரிட்டர்ன் பாலிசி இல்லை என கைவிரித்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த மாணவர் அதர்வா தனது வலைதள பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்தார். அதில், என்னிடத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள் என எல்லா ஆதாரங்களும் இருப்பதாக கூறி இருந்தார். இதை பார்த்த பயனர்கள் பிளிப்கார்ட்டின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
- இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதாக நெட்டிசன்கள் பிளிப்கார்ட் நிறுவனத்தை திட்டி தீர்த்துள்ளனர்.
- முழு பணத்தையும் திருப்பித் தருவதாக பிளிப்கார்ட் நிறுவனம் பதில் அளித்துள்ளது.
பெங்களூரு:
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், தீபாவளிக்கு பல கவர்ச்சி ஆஃபர்களை அறிவித்து வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்தது. ஏராளமான வாடிக்கையாளர்கள் சிறப்பு தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கினர். அப்படி ஒருவர் பிளிப்கார்ட் தளத்தில் லேப்டாப் ஒன்றினை ஆர்டர் செய்ய அவருக்கு வந்த பொருள்தான் தற்போது இணையதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த சின்மைய ரமணா என்பவர் பிளிப்கார்ட் தளத்தில் லேப்டாப் வாங்குவதற்காக ஆர்டர் செய்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு பார்சல் ஒன்று டெலிவரி செய்யப்பட்டது. ஆர்வத்துடன் அந்த பார்சலை திறந்து பார்த்தபோது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பார்சல் பெட்டிக்குள் லேப்டாப்புக்கு பதிலாக ஒரு கல்லும் பழைய கம்ப்யூட்டரின் உடைந்த உதிரி பாகங்களும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு உடனடியாக மெயில் அனுப்பி இருக்கிறார்.
Ordered for laptop and recived a big stone and E-waste ! During Diwali sale on Flipkart!@VicPranav @geekyranjit @ChinmayDhumal @GyanTherapy @Dhananjay_Tech @technolobeYT @AmreliaRuhez @munchyzmunch @naman_nan @C4ETech @r3dash @gizmoddict @KaroulSahil @yabhishekhd @C4EAsh pic.twitter.com/XKZVMVd4HK
— Chinmaya Ramana (@Chinmaya_ramana) October 23, 2022
மேலும் இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதாக நெட்டிஷன்கள் ப்ளிப்கார்ட் நிறுவனத்தை திட்டி தீர்த்துள்ளனர். இதையடுத்து ரமணாவுக்கு முழு பணத்தையும் திருப்பித் தருவதாக பிளிப்கார்ட் நிறுவனம் பதில் அளித்துள்ளது. இனிமேல் இது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
- இந்தியாவில் நத்திங் போன் 1 பிளிப்கார்ட் தளம் மூலம் விற்பனைக்கு வர உள்ளது.
- நத்திங் போனுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது.
நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை 12-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள ஈவண்ட்டில் வெளியிட உள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால், அந்த போன் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் இந்த போன் பிளிப்கார்ட் தளம் மூலம் விற்பனைக்கு வர உள்ளது. இந்நிலையில், இந்த போனுக்கான முன்பதிவு இன்று முதல் பிளிப்கார்ட் தளத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு பாஸ் ஒன்று வழங்கப்படும் அது இருந்தால் மட்டுமே நத்திங் போனை வாங்க முடியும்.
இந்த போனை முன்பதிவு செய்ய ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும், அந்த தொகையை செலுத்தினால் தான் பாஸ் வழங்கப்படும். இந்த 2 ஆயிரம் ரூபாய் முன்பதிவு தொகை, போன் வாங்கும்போது அதன் மொத்த விலையில் கழித்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை 30 ஆயிரம் என கூறப்படுகிறது. அறிமுகமாகும் போது தான் அதன் ஒரிஜினல் விலை என்ன என்பது தெரியவரும்.