search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மம்முட்டி"

    • படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க விஷ்ணு ஆர் தேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
    • இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ், விஜி வெங்கடேஷ், வினித், விஜய் பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார். இதனிடையே இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளை முன்னணியாக கொண்டு 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் ' என்ற படம் ஒன்றை இயக்கி உள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகர் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளது மட்டுமின்றி தயாரித்தும் உள்ளார்.

    இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க விஷ்ணு ஆர் தேவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ், விஜி வெங்கடேஷ், வினித், விஜய் பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் செய்தியை படக்குழு அறிவித்துள்ளது.

    அதன்படி இப்படம் வரும் 23-ந்தேதி தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தையொட்டி இப்படத்தை படக்குழு வெளியிட உள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார்.
    • டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் டீசர் வெளியானது.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டர்போ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்.

    மலையாள திரையுலகில் கவுதம் மேனன் இயக்கும் முதல் திரைப்படத்திற்கு 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடையே கவனம் பெற்றது.

    இந்த நிலையில், டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் படத்தின் டீசரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. பிரச்சினையுடன் தன்னை சந்தித்தவருக்கு எப்படி சண்டையிட வேண்டும் என்று மம்மூட்டி பாடம் எடுக்கும் காட்சிகள் கொண்ட டீசர் பார்ப்பதற்கு நல்ல அனுபவத்தை கொடுக்கிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • மம்மூட்டியின் புதிய படத்தை பிரபல தமிழ் இயக்குநரான கவுதம் மேனன் இயக்குவுள்ளார்.
    • இப்படத்திற்கு ‘Dominic and The Ladies' Purse’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

    மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் அண்மையில் வெளியான டர்போ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் மம்முட்டியின் புதிய படத்தை பிரபல தமிழ் இயக்குநரான கவுதம் மேனன் இயக்குவுள்ளார். இப்படத்திற்கு 'Dominic and The Ladies' Purse' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை மம்முட்டி தயாரிக்கிறார்.

    முன்னதாக, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படமான துருவ நட்சத்திரம் வெளியீட்டிற்காக காத்துக்கிடக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டி இந்த விவகாரத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
    • இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் முதலில் பதிலளிக்கட்டும் என்றுதான் நான் காத்திருந்தேன்.

    கேரள திரையுலகில் நடந்த பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    இயக்குநர் ரஞ்சித் நடிகர்கள் சித்திக், முகேஷ், எடவேல பாபு, சுதீஷ், டைரக்டர் ஸ்ரீகுமார் மேனன் என பலர் இந்த புகார்களில் சிக்கியுள்ளனர். நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கேரள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது. இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் திரையுலகை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகிறனர்.

    அந்த வகையில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டி இந்த விவகாரத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பதிவில் அவர் கூறியதாவது, சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு என்றும், சமூகத்தில் உள்ள நல்லது கெட்டது திரைத்துறையிலும் உள்ளது, நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவம் நீதிமன்றத்தில் முன் உள்ளது.

    இதுகுறித்து காவல்துறையின் நேர்மையாக விசாரணைக்குப்பின் நீதிமன்றம் தண்டனைகளை முடிவு செய்யட்டும். சினிமாவில் அதிகார மையம் [பவர்ஹவுஸ்] என்று எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் முதலில் பதிலளிக்கட்டும் என்றுதான் நான் காத்திருந்தேன்.

    ஹேமா கமிட்டியின் பரிந்துரைகளையும், தீர்வுகளையும் நான் முழுமனதோடு வரவேற்கிறேன். திரைத்துறையில் உள்ள அமைப்புகள் ஒன்றாக கைகோர்த்து இதை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய நேரம் இது. எல்லாவற்றிற்கும் மேலாக சினிமா உயிர்போடு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

    • இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘காதல் தி கோர்' படம் பெரிய வெற்றி பெற்றது.
    • இந்த புகைப்படம் கொச்சி தர்பார் ஆர்ட் கேலரி சமீபத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.

    மலையாள சூப்பர் ஸ்டாரான நடிகர் மம்முட்டி தமிழிலும் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'காதல் தி கோர்' படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் மம்முட்டி ஜோடியாக ஜோதிகா நடித்து இருந்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மம்முட்டியின் பிரம்மயுகம் படமும் வசூல் சாதனை நிகழ்த்தியது. சமீபத்தில் மம்மூட்டி மற்றும் கன்னட பிரபலமான ராஜ் பி ஷெட்டி இணைந்து டர்போ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார்.

    சினிமாவை தாண்டி இன்னொரு புறம் மம்முட்டிக்கு புகைப்படங்கள் எடுப்பது பிடிக்கும். படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அங்குள்ள அழகான விஷயங்களை தனது கேமராவில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்வது உண்டு. அப்படி மம்முட்டி எடுத்த புகைப்படங்களில் இந்திய புல்புல் பறவையின் புகைப்படமும் ஒன்று. இந்த புகைப்படம் கொச்சி தர்பார் ஆர்ட் கேலரி சமீபத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது. பின்னர் மம்முட்டி எடுத்த புல்புல் பறவை புகைப்படத்தை ஏலம் போட்டனர்.

    ஏலத்தின் ஆரம்ப விலையாக ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. பின் அந்த புகைப்படத்தை தொழில் அதிபரான அச்சு உல்லட்டில் [லீனா க்ரூப் ஆஃப் பிசினஸ்] ரூ.3 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.

    இந்த புகைப்பட கண்காட்சி மறைந்த எழுத்தாளரான இந்துச்சூடன் சார்பாக நடைப்பெற்ற கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சமூக வலைத்தளங்களில் மம்முட்டியை அவரது இயற்பெயரான முகமது குட்டி என்ற பெயரில் மத ரீதியாக வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
    • வெறுப்பை பரப்புபவர்களின் இழிவான மனதில் மட்டுமே மம்முட்டி முகமது குட்டியாக இருக்கிறார்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் புழு என்ற திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்தது. அந்த படத்தில் உயர்சாதியினரை இழிவுபடுத்தியுள்ளதாக எழுந்த குற்றசாட்டில் சமூக வலைத்தளங்களில் மம்முட்டி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

    புழு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரதீனா. அண்மையில் இவரது கணவர் ஷர்ஷத் பனியாண்டி ஆன்லைன் மீடியா ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது புழு திரைப்படம் உயர்சாதியினரை இழிவுபடுத்தியுள்ளது. மம்முட்டி ஏன் அந்த திரைப்படத்தில் நடித்தார். அவர் படத்தின் ஸ்க்ரிப்டை படித்து பார்த்தாரா என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், இந்த திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான ஹர்ஷத் ஒரு தீவிரமான இஸ்லாமியர் என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் மம்முட்டியை அவரது இயற்பெயரான முகமது குட்டி என்ற பெயரில் மத ரீதியாக வெறுப்பு பிரசாரத்தில் பலரும் ஈடுபட்டனர்.

    நடிகர் மம்முட்டி மீதான இத்தகைய வெறுப்பு பிரசாரத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது சம்பந்தமாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், மம்முட்டியை மதம் அல்லது சாதியின் பிரிவுகளுக்குள் அடைத்து வைக்க முடியாது. வெறுப்பை பரப்புபவர்களின் இழிவான மனதில் மட்டுமே மம்முட்டி முகமது குட்டியாக இருக்கிறார். கேரளாவின் மதச்சார்பற்ற சமூகம் இந்த பிரச்சாரத்தை ஆதரிக்காது என்று தெரிவித்துள்ளார்.

    இதே போல் கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி, மம்முட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில், "மம்முட்டி மலையாளிகளின் பெருமை" என்று பதிவிட்டுள்ளார்.

    "மம்முட்டியை முகமது குட்டி என்றும், இயக்குநர் கமலை கமாலுதீன் என்றும், நடிகர் விஜய்யை விஜய் ஜோசப் என்றும் அழைக்கும் சங்பரிவார் அரசியல் கேரளாவில் இயங்காது" என்று கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே ஃபஜன் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தின் கதைக்கு ஒரு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
    • திரைப்படம் வெளியானதில் இருந்து தற்போது வரை நடிகர் மம்முட்டி சைபர் தாக்குதலை சந்தித்து வருகிறார்.

    திருவனந்தபுரம்:

    பிரபல மலையாள திரைப்பட நடிகர் மம்முட்டி நடித்த 'புழு'என்ற திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகியது. ரதீனா என்பவர் இயக்கிய இந்த மலையாள திரைப்படத்திற்கு மம்முட்டியின் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்தின் கதைக்கு ஒரு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்த திரைப்படம் பிராமணர்களுக்கு எதிரானது என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து மம்முட்டிக்கு எதிர்ப்பு தெரவித்தும், ஆதரித்தும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்தனர். அந்த திரைப்படம் வெளியானதில் இருந்து தற்போது வரை நடிகர் மம்முட்டி சைபர் தாக்குதலை சந்தித்து வருகிறார்.

    இந்நிலையில் நடிகர் மம்முட்டிக்கு அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மம்முட்டிக்கு முதன்முதலாக ஆதரவு தெரிவித்தவர் கேரள மாநில கல்வித்துறை மந்திரி சின்குட்டி. அவர் தனது முகநூல் பக்கத்தில், 'நடிகர் மம்முட்டி கேரளாவின் பெருமை' என்று குறிப்பிட்டு, மூத்த நடிகர்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.

    அதேபோன்று மந்திரி ஏ.கே.ராஜன் தனது முகநூல் பக்கத்தில், 'நடிகர் மம்முட்டியை முகமது குட்டி என்றும், நடிகர் கமலை கமாலுதீன் என்றும், நடிகர் விஜய்யை விஜய் ஜோசப் என்றும் அழைக்கிறார்கள். அதுதான் அவர்களின் அரசியல். ஆனால் இங்குள்ள நிலைமை வேறு. இதுபோன்ற வெறுப்பு அரசியலுக்கு கேரளாவில் இடமில்லை' என்று தெரிவித்திருக்கிறார்.

    இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் நடிகர் மம்முட்டிக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • படமானது வரும் 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
    • கவுதம் வாசுதேன் மேனன் முதல் முறையாக மலையாளத்தில் படத்தை இயக்குவது என்று தீர்மானித்துள்ளார்.

    மம்முட்டி தற்போது வைசாக் இயக்கத்தில் உருவாகி வரும் அதிரடி நகைச்சுவை படமான டர்போவில் நடித்துள்ளார். மம்முட்டி கம்பனி பேனரால் தயாரிக்கப்படும் டர்போ படத்தை துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபேரர் பிலிம்ஸ் விநியோகம் செய்கிறது.


    டர்போ படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ள நிலையில், படமானது வரும் 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

    இந்நிலையில், அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார் மம்முட்டி. ஆனால், இந்த படத்தை இயக்கப்போவது மலையாள இயக்குநர்கள் இல்லை. தமிழ் திரையுலகில் பிரபலமான பல்வேறு வெற்றி படங்களை அளித்துள்ள கவுதம் வாசுதேன் மேனன் முதல் முறையாக மலையாளத்தில் படத்தை இயக்குவது என்று தீர்மானித்துள்ளார்.


    அதன்படி, மம்முட்டியை ஹீரோவாக வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார் கவுதம் மேனன். இதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்து படத்தை மம்முட்டியே தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படமான துருவ நட்சத்திரம் வெளியீட்டிற்காக காத்துக்கிடக்கிறது.

    • அரசவையில் மன்னன் - புலவர் இடையே நடக்கும் ஒரு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.
    • முழுக்க முழுக்க கருப்பு-வெள்ளை வடிவில் எடுக்கப்பட்ட படம் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான திரையரங்க அனுபவத்தை வழங்கி உள்ளது.

    'பிரம்மயுகம்' கடந்த 15- ந்தேதி மலையாள மொழியில் வெளிவந்த 'திகில்' படம். இப்படத்தில் மம்முட்டி, அர்ஜுன் அசோகன், சித்தார்த், பரதன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்திருந்தார்.

    நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை ரூ.27 கோடி பட்ஜெட்டில் தயாரித்தது. இந்த படம் அரசவையில் மன்னன் - புலவர் இடையே நடக்கும் ஒரு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.



    இந்த படம் மலையாள திரையுலகில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்நிலையில் 10 நாட்களில் இந்த படம் ரூ.50 கோடி வசூலை குவித்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முழுக்க முழுக்க கருப்பு-வெள்ளை வடிவில் எடுக்கப்பட்ட இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான திரையரங்க அனுபவத்தை வழங்கி உள்ளது.

    • நடிகை சாக்‌ஷி அகர்வால் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் தற்போது மலையாள நடிகர் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். இவர் தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆக்ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்தி வரும் சாக்ஷியின் திறமை, பிற மொழி படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளது.


    இவர் தற்போது மலையாள நடிகர் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறார். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் மிக வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார்.


    இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில், இவர் டார்ஜிலிங்கிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்யும் ரசிகர்கள் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.


    • 1980ல் தனது முதல் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் மோகன்லால்
    • எனது படங்கள் அனைத்தும் ஒரு கூட்டு முயற்சி என்றார் மோகன்லால்

    மலையாள திரைப்பட உலகின் முடிசூடா மன்னர்களாக விளங்குபவர்கள், மோகன்லால் மற்றும் மம்முட்டி.

    ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதிலும், இயக்குனர்களின் பணியில் தலையிடாமல் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதிலும் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் திறன் படைத்தவர்கள். இதனால், இவர்கள் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறும் போது அவை மிக பெரிய வெற்றியாகவும் பிற மொழி தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவற்றின் உரிமத்தை வாங்கி தங்கள் மொழிகளில் எடுக்க விரும்புவதும் தொடர்கதையாகி வருகிறது.

    1980ல் வில்லனாக அறிமுகமாகி, இணை ஹீரோவாக பல படங்களில் நடித்து, பின் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்து பல வெற்றிப்படங்களை தந்து கொண்டிருப்பவர் மோகன்லால்.


    ஜீது ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் 2013ல் மலையாளத்தில் வெளி வந்து வசூலில் சக்கை போடு போட்ட "த்ரிஷ்யம்", தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மொழிகளில் வசூலை அள்ளி குவித்தது.


    2021ல் இதே போல் இவர்கள் இணைந்து உருவாக்கிய "த்ரிஷ்யம் 2" திரைப்படமும் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    மீண்டும் இந்த வெற்றி கூட்டணியில் உருவாகியுள்ள "நெரு" திரைப்படம் 21 அன்று ரிலீஸ் ஆகிறது.

    "எனது படங்களின் வெற்றி ஒரு கூட்டு முயற்சி. அதில் எனது தனிப்பட்ட பங்கு என எதுவும் இல்லை. எதிர்மறை விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. விமர்சனங்களால் எனது நீண்ட 46-ஆண்டு கால திரைப்பயணத்தை பின்னுக்கு தள்ளி விட முடியாது" என விமர்சனங்களை குறித்து மோகன்லால் கருத்து தெரிவித்தார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மோகன்லால் தோன்றுவதால் இப்படம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


    இப்படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இதில், தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ போன்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்தது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

    இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' படத்தில் இடம்பெற்றுள்ள 'மாமதுர' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.




    ×