என் மலர்
நீங்கள் தேடியது "வில்லன்"
- பாராளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது.
- இதனால் துணை முதல் மந்திரி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்றார் பட்னாவிஸ்.
மும்பை:
மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பு ஏற்று துணை முதல் மந்திரி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநிலத்தில் வெற்றி கிடைக்காமல் போனது குறித்து ஆலோசிக்க அம்மாநில துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு பா.ஜ.க. மேலிடம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி எம்பியான சஞ்சய் ராவத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மகாராஷ்டிரா அரசியலில் வில்லன் என்றால் அது தேவேந்திர பட்னாவிஸ் தான். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்ததற்கு தேவேந்திர பட்னாவிஸ்தான் காரணம்.
பட்னாவிஸ் பல குடும்பங்களை அழித்துள்ளார் மற்றும் அரசியல் பழிவாங்கலை நாடியுள்ளார்.
மோடி வலுக்கட்டாயமாக ஆட்சி அமைக்க முயன்றால் அது நீடிக்காது என என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.
மோடிக்கு கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு மாற்று வழி தேடும் முயற்சியில் சங்கத்தின் உயர்மட்ட தலைமை செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
- 2002 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்து வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் அமீர்.
- வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த வட சென்னை திரைப்படத்தில் ராஜன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார்.
2002 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்து வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் அமீர். அதைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளிவந்த ராம் திரைப்படத்தை இயக்கினார்.
மேலும் 2007 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் அமீருக்கு மிகப் பெரிய பேரும் புகழையும் சம்பாதித்து கொடுத்தது. அதைதொடர்ந்து சிலப் படங்களில் கவுரவ தோற்றத்திலும், முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வந்தார்.
2009 ஆம் ஆண்டு வெளிவந்த யோகி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த வட சென்னை திரைப்படத்தில் ராஜன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார்.
நேற்று வெளியான உயிர் தமிழுக்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அப்படத்திற்கான கொடுத்த நேர்காணலில் வாடிவாசல் திரைப்படத்தின் சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களுள் வெற்றிமாறன் தவிர்க்க முடியாதவர். அவர் அடுத்ததாக விடுதலை 2 படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை குறித்து எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
சமீபத்தில் நடந்த நேர்காணலில் அமீர் கூறியதாவது " படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும். படம் திட்டமிட்ட படியே நடக்கும் எனவும், வெற்றிமாறன் விடுதலை பாகம் 2 வேலைகளில் பிசியாக இருப்பதால் அதை முடித்துவிட்டு வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்றும் , முழுக்க முழுக்க ஹீரோவுடன் பயணிக்கும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன், பல ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவுடன் இணையும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிவகார்த்திகேயனுடன் வில்லன் நடிகர் மோதும் ஒரு பயங்கர சண்டை காட்சி இதில் இடம் பெறுகிறது.
- இந்த படத்திலும் வித்யுத் ஜம்வால் வில்லனாக இணைந்து உள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK-23 புதிய ஆக்ஷன் படத்தில் சிவகார்த்திகேயன்நடிக்கிறார். கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.பிரபல இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் சிவகார்த்திகேயன் 3- வது முறையாக இணைந்து உள்ளார். ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ்' இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மாதம் தொடங்கியது. சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மணி வசந்த் நடிக்கும் முதல் ஷெட்யூல் முன்னதாகவே முடிவடைந்து உள்ளது. தற்போது பாண்டிச்சேரியில் 2- வது கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.
இந்நிலையில் இப்படத்தில் பிரபல நடிகர் வித்யுத் ஜம்வால் வில்லனாக நடிக்க இணைந்து உள்ளார். சிவகார்த்திகேயனுடன் வில்லன் நடிகர் மோதும் ஒரு பயங்கர சண்டை காட்சி இதில் இடம் பெறுகிறது.
இந்த சண்டை காட்சி பார்வையாளர்களை, ரசிகர்களை பெரிதும் கவரும் வகையில் எடுக்கப்பட உள்ளது. 'துப்பாக்கி' படத்தில் வித்யுத் ஜம் வாலின் 'வில்லன்' கேரக்டர் ரசிகர்களிடம் சிறந்த பாராட்டு பெற்றது. அந்த படத்துக்கு வில்லன் வேடம் மிக பொருத்தமாக அமைந்தது.
அதுபோல இந்த படத்திலும் வித்யுத் ஜம்வால் வில்லனாக இணைந்து உள்ளதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அப்போது தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்த கவுதம், கோபியின் நடு மண்டையில் ஓங்கி அடித்தார்.
- உயிருக்க ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்தவர் கவுதம் (வயது 25). வெல்டிங் பணி செய்து வருகிறார். இவர் மொரட்டாண்டியில் வசிக்கும் சசிகலாவின் மகளான சுவேதாவை திருமணம் செய்து கொண்டார். இவர் மொரட்டாண்டியில் வீடு வாடகை எடுத்து தனியாக வசித்து வந்தார். சுவேதாவின் தந்தை மணி இறந்து போனதால் சசிகலா தனியாக வசித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் கோபி (22). இவருக்கும் சசிகலாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் சசிகலாவின் வீட்டிற்கு கோபி அடிக்கடி வந்து சென்றுள்ளார். இருவரும் அடிக்கடியே தனியே சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இத்தகவல் அறிந்த கவுதம், தனது மாமியாரான சசிகலாவை கண்டித்துள்ளார். அதேபோல கோபியையும் அழைத்து கண்டித்துள்ளார். இதனை பொருட்படுத்தாத, சசிகலாவும், கோபியும் அடிக்கடி தனியாக சந்தித்து பேசி வந்தனர். நேற்று மதியமும் இருவரும் தனியாக சந்தித்து பேசியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கவுதம், கோபி வீட்டிற்கு சென்றார். கோபியை அழைத்து மீண்டும் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்த கவுதம், கோபியின் நடு மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டையில் பிளவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கோபி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு கவுதம் அங்கிருந்து தப்பியோடினார். அக்கம்பக்கத்தினர் கோபியை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தலையில் 30 தையல் போடப்பட்டு உயிருக்க ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை அறிந்த கவுதம், புதுவை மாநிலம், ஜிப்மரில் உள்ள தன்வந்திரி நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். நடந்த சம்பவத்தை கூறி சுத்தியலை ஓப்படைத்து போலீசாரிடம் சரணடைந்தார். இது குறித்து அவர்கள் வானூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வானூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தன்வந்திரிநகர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். புதுவை போலீசார் அவர்களிடம் கவுதமை ஓப்படைத்தனர். அவரை வானூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். மாமியாருடன் பழகி வந்த வாலிபரை ஜெயிலர் பட வில்லன் பாணியில் சுத்தியால் அடித்து கொலை செய்ய மருமகன் முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.