search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "000 people"

    • உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தொடங்கி வைத்தார்.
    • பரிசு மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    ஈரோடு:

    உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நந்தா கல்லூரி ரத்ததான இயக்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இருபிரிவுகளாக நடைபெற்ற இந்த மராத்தான் போட்டியில் ஆண்களுக்கு 21 கி.மீ எனவும், பெண்களுக்கு 10 கி.மீ வரை என போட்டி தூரம் நிர்ணியக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.

    இந்த மராத்தான் போட்டிக்கு கல்லூரி செயலாளர் திருமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த மாரத்தானில் ஆண்களுக்கான போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனும், பெண்களுக்கான போட்டியை திருமகன் ஈ.வெ.ரா எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்திலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி ஆண்களுக்கு பெருந்துறையில் முடிவுற்றது. ஆண்கள் பிரிவின் சார்பில் முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் , இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் முதல் 10 நபர்களுக்கு பரிசும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும் மாரத்தான் முடிவில் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது .

    • 8 லட்சத்து 23 ஆயிரத்து 235 பேருக்கு முதல் தவணையும், 13 லட்சத்து 25 ஆயிரத்து 565 பேருக்கு 2-ம் தவணையும், 97 ஆயிரத்து 162 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி.
    • 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில் இதுவரை 33 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 8 லட்சத்து 23 ஆயிரத்து 235 பேருக்கு முதல் தவணையும், 13 லட்சத்து 25 ஆயிரத்து 565 பேருக்கு 2-ம் தவணையும், 97 ஆயிரத்து 162 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் என மொத்தம் 22 லட்சத்து 45 ஆயிரத்து 962 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் சிறப்பு முகாமை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

    ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் விதமாக ராணுவத்துக்கு 55 ஆயிரம் பேரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் விதமாக ஆள் எடுப்பது அவ்வப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ராணுவத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஒரே நேரத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையம் 55 ஆயிரம் பேரை தேர்வு செய்து ராணுவத்தில் இணைக்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    சமீப காலமாக ஒரே நேரத்தில் ராணுவத்துக்கு இவ்வளவு பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, இந்திய-திபெத்திய எல்லை போலீஸ், மத்திய தொழிலக பாதுகாப்பு படை, சகஸ்திரா சீமா பால், அசாம் ரைபிள்ஸ், தேசிய விசாரணை முகமை ஆகியவற்றில் மொத்தம் 54,953 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

    இதில் ஆண்களுக்கான மொத்த காலி இடங்கள் 47,307 ஆகும். பெண்களுக்கு 7,656 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

    இதில் அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் படைக்கு 21,566 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு கம்ப்யூட்டர் முறையிலும் தேர்வு நடத்தப்படும்.

    இதுபற்றி ராணுவ இலாகாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “புதிய படைப்பிரிவுகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த புதிய காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது” என்றார். 
    ×