search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1 lakh"

    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து உழைக்கும் பெண்களுக்கும் வருடத்திற்கு 1 லட்சம் வழங்கப்படும் அறிவித்திருந்தது.
    • இந்த மாற்றம் உங்கள் ஒவ்வொருவரின் ஒற்றை ஓட்டுகளால் உண்டாகும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    ஜூலை 1, 2024 அன்று, அனைத்து உழைக்கும் குடும்பத்தை சேர்ந்த பெண்களின் வங்கி கணக்கிலும், ரூ. 8,500 போடப்படும் என ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    மேலும், இது ஜூலை முதல் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் என்றும் இந்த மாற்றம் உங்கள் ஒவ்வொருவரின் ஒற்றை ஓட்டுகளால் உண்டாகும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து உழைக்கும் பெண்களுக்கும் வருடத்திற்கு 1 லட்சம் வழங்கப்படும் என்று அக்கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் அந்த 1 லட்ச ரூபாயை 12 பங்காக பிரித்து மாதம் 8,500 ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார். 

    • மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டில் ரூ.120 லட்சம் மதிப்பில் 40 லட்சம் மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தமிழ்நாட்டின் ஆறுகளில் பெரும்பாலான இயற்கை வகையான நாட்டின மீன் இனங்கள் உள்ளன.

    மேட்டூர்:

    தமிழ்நாட்டில் நாட்டின மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டில் ரூ.120 லட்சம் மதிப்பில் 40 லட்சம் மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டின் ஆறுகளில் பெரும்பாலான இயற்கை வகையான நாட்டின மீன் இனங்கள் உள்ளன. பெரும்பாலான ஆறுகளில் பல்வேறு காரணங்களினால் நாட்டின மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. இவ்வகையான நாட்டின மீன் இனங்கள் முற்றிலுமாக அழிந்து விடாமல் பாதுகாத்துப் பெருக்கி அவற்றை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்றிடும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நாட்டின மீன் வகைகள் இயற்கை நீர் நிலைகளில் இருக்கும் போது தாய் மீன்கள் முட்டையிட்டு முட்டையிலிருந்து வெளிவரும் நுண் மீன் குஞ்சுகளை பிற வகை மீன்களால் உண்ணப்படுவதால் மீன் குஞ்சுகளின் பிழைப்பு திறன் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதனால் அந்த மீன் இனமே அழிந்துவிடும் சூழல் ஏற்படுகிறது. இதனை தவிர்த்து நாட்டின மீன்களை பாதுகாத்திட நாட்டின மீன்களை அரசு மீன் குஞ்சு உற்பத்தி நிலையங்களில் செயற்கை தூண்டுதல் முறையில் இனப்பெருக்கம் செய்து மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்யப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றில் சேல்கெண்டை, கல்பாசு மற்றும் இந்திய பெருங்கண்டைகளான கட்லா, ரோகு, மிருகால் ஆகிய மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படுகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான காவிரி, தென்பெண்ணை, பவானி, தாமிரபரணி, வைகை, வெண்ணாறு, வெட்டாறு, கோதையாறு, கொள்ளிடம், அமராவதி ஆகிய ஆறுகளில் தாய்மீன்கள் உயிருடன் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு தூண்டுதல் முறையில் நாட்டின தாய் மீன்களில் இருந்து மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் போது மீன் குஞ்சுகளின் பிழைப்பு திறன் வெகுவாக அதிகரித்திடும்.

    இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 3 லட்சம் மீன் விரலிகள். இவை 80 மில்லி மீட்டர் முதல் 100 மில்லி மீட்டர் அளவில் வளர்க்கப்பட்டு முதல் கட்டமாக ஒரு லட்சம் மீன் விரலிகள் இன்று நகராட்சி நிர்வாகம் நகர்ப்புற மற்றும் நீர் வளங்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் மேட்டூர் காவிரி ஆற்றில் 4 ரோடு அனல் மின் நிலைய பாலபகுதியில் இருப்புச் செய்யப்பட்டது. இருப்பு செய்யப்பட்ட மீன் குஞ்சுகளின் மதிப்பு ரூ.2.70 லட்சமாகும்.

    இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.கோபால், தருமபுரி மண்டல மீன்வள துணை இயக்குனர் சுப்பிரமணியம், மேட்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கலைச்செல்வி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • எஸ்.பி.ஐ வங்கி மட்டுமின்றி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.
    • தங்களது வங்கி கணக்கில் எங்கிருந்து யார் பணம் டெபாசிட் செய்தார்கள் என்று யாருக்குமே புரியாமல் குழப்பம் அடைந்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ ஒரு லட்சம் வரை டெபாசிட் ஆனது.

    வங்கிக் கணக்கில் பணம் வந்தது குறித்து அவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. எஸ்.பி.ஐ வங்கி மட்டுமின்றி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.

    இதனை கண்ட வங்கி வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

    தங்களது வங்கி கணக்கில் எங்கிருந்து யார் பணம் டெபாசிட் செய்தார்கள் என்று யாருக்குமே புரியாமல் குழப்பம் அடைந்தனர்.

    ஒரு சிலர் உடனடியாக தங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட்டான பணத்தை ஏடிஎம் கார்டுகள் மூலம் எடுத்தனர். ஒரு சிலர் தங்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்தனர்.

    இந்த செய்தி மாநிலம் முழுவதும் பரவியது. இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. எஸ்.எம்.எஸ் வராத வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை சரி பார்த்தனர்.

    இதேபோல் ஆந்திராவில் உள்ள திருப்பதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொதுமக்கள் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது இந்த சம்பவம் வங்கி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் ஆனது என்பது குறித்த விவரங்களை போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

    ×